1. இரா.நரசிம்மன் பூனை குறுக்கே வரவே செய்யும் வரும்போதும் போகும்போதும் அது சாலையைக் கடந்தே ஆக வேண்டும். அவர் சொன்னார் சாலையின் ஓரத்தில் நடக்க பூனையைப் பழக்க வேண்டும் சரிதான் .............. ஆனால் 2. கேத்தம்பட்டி செல்வா நள்ளிரவில் வரும் பூனை உறங்கும் வேளை சுவரேறி வரும் ஒரு திருட்டுப் பூனை. சத்தமின்றி உரிதொங்கும் பரண் மீது ஏறி நிற்கும் வாய் பிளந்திருக்கும் செம்பு பார்த்து கத்தும் வெள்ளி மீசை சிணுங்க பின், செம்பின் வாய்ப் பார்த்து நாக்கு சுழற்றும் திசைகள் பார்க்கும் திரும்ப ஒரு முறை கத்தும் கால் நகம் கொண்டு மூக்கு பிராண்டும் முன்னங்கால் செம்பை கீறிப் பார்க்கும் என்னென்னவோ செய்யும் சலிப்பில்லாமல் எதுவும் கிடைக்காமல் தொப்பென்று எகிறிகுதித்து ஓடும் அந்தத் திருட்டுப் பூனை (பூனைகள் தொடரும்....)