அழகியசிங்கர் நேற்று விருட்சம் கவிதை வாசிக்கும் கூட்டம் சூமில் நடத்தினேன். எனக்குத் திருப்தியாக இல்லை. நேற்று கவிதை வாசித்தவர்களை தனித்தனியாகக் கூப்பிட்டு இன்னொரு முறை வாசிக்க வைக்கவேண்டுமென்று நினைக்கிறேன். இன்னும் எனக்கு சூம் கூட்டம் நடத்துகிற அனுபவம் போதவில்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் சூம் கூட்டம் கவிதை வாசிக்கும் கூட்டமாக நடத்த உத்தேசம். எனக்கு அறிமுகமான கவிஞர்களையெல்லாம் கூப்பிட்டு வாசிக்கச் சொல்லப் போகிறேன்.. ஒவ்வொரு வாரமும் 4 கவிஞர்களைக் கூப்பிட்டுக் கவிதை வாசிக்கச் சொல்லலாமென்று நினைக்கிறேன். ஒரு வாரம் மரபுக் கவிதைகள் எழுதுபவர்களைக் கூப்பிடலாமென்று நினைக்கிறேன் (அப்படி என்னதான் எழுத முடிகிறது அவர்களால்?) அதேபோல் ஐகூ வாசிப்பவர்களை. நான் 32 வருடமாக விருட்சம் நடத்தி வருகிறேன். கவிஞர்கள்தான் பெரும்பாலும் அறிமுகம் எனக்கு. தேங்கிவிட்ட கவிதைப் புத்தகங்களை என்ன செய்வது என்று எனக்கு எப்போதும் தெரியாது? கவலைப் படுவதுமில்ல...