Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 126


அழகியசிங்கர்  


 படித்துறை


காரிகைக் குட்டி



மாலை நேரங்களில் படித்துறை மிக அழகு
நடுவே நிற்கும் குளக்கோபுரம் மீது படரும்
வெயில் மோதிக் கோபுர நிழல்
நீரில் விழுகிற போது
மீன்கள் நீரினுள் சலசலத்து நீந்திச் சென்று
படர்ந்த படித்துறைப் பாசிகளைத் திண்ண
செதில்களை அசைத்து அசைத்து
என் முகம் காண வந்தது போல
ஒரு பாவனை.

குளித்துக் கரையேறிய ஒருவர் வழுக்கி
மீண்டும் குளத்தில் விழுந்த போது அடிவயிற்றில் குபீரென்றச் சிரிப்பு வெடித்துக் கொண்டு எழும்
மதிலின் மீது வளரத் தொடங்கும் அரசமரச் செடி
உச்சி கோபுரத்தில் வந்தமரும் '
குனுகுனு”க்கும் மயில்நிறப் புறா
மெல்லப் படரும் இருள், குளிரும் காற்று
சிலுசிலுக்க வைக்கும் ஒரு நொடி


நன்றி : யாரோ ஒருவன் - காரிகைக் குட்டி - பக்கம் : 120 - விலை ரு: 100 - வெளியீடு : இனிய நந்தவனம் பதிப்பகம், 17 பாயக்காரத்தெரு, உறையூர், திருச்சி - 620 003 - தொ. பேசி : 9443284823

Comments