Skip to main content

Posts

Showing posts from October, 2019

துளி - 69 தீபாவளி மலரும் நானும்...3

அழகியசிங்கர் 2015 ஆம் ஆண்டுதான் பத்துக்கும் மேற்பட்ட தீபாவளி மலர்கள் வாங்கினேன்.  முக்கிய காரணம்.  பட்டாசு வாங்கி பணத்தை வீணடிக்கக் கூடாது என்பதுதான்.  எல்லாம் வாங்கி வைத்ததுடன் சரி, புரட்டிப் பார்த்ததோடு சரி, தீபாவளி மலர்களில் வழவழப்பான அட்டைகளைத் தடவியதோடு சரி. கோபுர தரிசனம் என்ற தீபாவளி மலர்.  எப்போதும் தீபாவளி மலர்கள் வாங்கும் கடைகளில் கிடைக்கவில்லை.   தி நகரில் உள்ள ஒரு கடையில் வாங்கினேன். அந்த வருடம் விரட்டி விரட்டி தீபாவளி மலர்களாகச் சேர்த்தேன்.   என் இலக்கிய நண்பர்களுக்கு தீபாவளி மலர்கள் பொருட்டல்ல.  யாருக்கும் நான் வாங்கினதும் தெரியாது.  கேட்கவும் இல்லை.  ஆனால் என் பெண்ணின் மாமியார் ஆனந்தவிகடன் தீபாவளி மலரை வாங்கி நிதானமாகப் படித்துவிட்டுக் கொடுத்து விட்டார். தீபாவளி மலர்களை நான் பரன் மீது ஒளித்து வைத்தேன். அந்த வருடம் முழுவதும் நான் எந்த தீபாவளி மலரையும் படிக்கவில்லை.  2016ஆம் ஆண்டு எந்தத் தீபாவளி மலரையும் வாங்கவில்லை.  2015 தீபாவளி மலர்களையும் இன்னும் படிக்கவில்லை. என்னுள் இருந்த இந்தத் தீபாவளி மலர் மோகம் கொஞ்சம் கொஞ்சமாகத் தீர்ந்து விட்டது.  ஆனால் ம

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 125

அழகியசிங்கர்    இரு குருவிகள் குலசேகரன் வழி தவறிப் புகுந்த ஒரு குருவி நீண்ட நேரமாக சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது நான் மையத்திலிருந்து பறப்பதைக் காண்கிறேன் அது இறகுகள் தொய்ந்து எதிரில் நின்றுள்ள கண்ணாடியின் மீது அமர்கிறது அருகிலிருக்கும் உருவத்தை இனம் கண்டு குனிந்து அலகால் கொத்துகிறது குருவியின் பிம்பமும் தொடுகிறது ஒரே புள்ளியில் இரு அலகுகளும் தொடர்ந்து சப்தித்துக் கொண்டிருக்கின்றன உயிரின் சலனங்கள் உண்டாகாத பீதியில் இடத்தை விட்டெழுந்து அம்பாக வானில் குருவி மறைகிறது நான் தேடிப் பார்க்கிறேன் உள்ளே சிறகுகள் துடித்துக் கொண்டிருக்கின்றன நன்றி : ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி - குலசேகரன் - உயிர்மை பதிப்பகம் 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018 - முதல் பதிப்பு :டிசம்பர் 2008 பக்கம் : 80 - விலை : 50.

முப்பத்தேழாம் நாளின் வாசிப்பனுபவம் (08.10.2019)

அழகியசிங்கர் முதலில் ஒரு புத்தகத்தை எடுத்துப்படிப்பதற்கு முன் பக்கங்களை எண்ணிப் பார்க்கிறேன்.  இந்தப் புத்தகத்தை எத்தனை நாட்களில் படிக்க முடியும்? இதைப் பற்றி எதாவது எழுத முடியுமா என்றெல்லாம் பார்க்கிறேன். என் மனசில் எப்படிப் படுகிறதோ அப்படியே புத்தகம் பற்றி சொல்கிறேன். இதில் எந்தத் தியரியையும் இணைக்கவில்லை.  உண்மையில் தியரி புத்தகத்தையும் படித்துக் குறிப்பிட விரும்புகிறேன்.   இரண்டு நாட்களாக படித்தப் புத்தகம் 'சித்தார்த்தா'  என்ற புத்தகம். 'ஹெர்மன் ஹெஸ்ஸி'ன் புகழ்பெற்ற நாவல் இது.  தமிழில் மொழி பெயர்த்தவர் ஜெகதா.   பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலத்தில் இந்த நாவலைப் படித்திருக்கிறேன்.  எல்லாம் மறந்து விட்டது.  சில நாவல்களை நாம் பலமுறை படித்துக்கொண்டிருக்க வேண்டும்.  அது மாதிரியான நாவல்களில் இது ஒன்று.   ஜெகதா நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.  சிறுகதை, நாவல், கவிதை, சினிமா, வரலாறு, ஆன்மிக ஆய்வு என்று பல துறைகளில் புத்தகங்கள் எழுதி உள்ளார்.  பிரபஞ்ச ரகஸ்யங்களை அதன் அடையாளங்களை நதியிடமிருந்து கற்றுக்கொள்ளும் படகோட்டியாய் இந்த நா

துளி - 68 தீபாவளி மலரும் நானும்...2

அழகியசிங்கர் எப்போதும் நான் தீபாவளி மலர்களை வாங்குபவன் கிடையாது.  பல ஆண்டுகளாக எனக்குத் தீபாவளி மலர் என்ற நினைப்பே இருக்காது.  ஆனால் நான் எப்போது தீபாவளி மலர்களைப் பார்க்கவும் வாங்கி வைத்துக்கொள்ளவும் நினைப்பு ஏற்பட்டது.  யார் மூலம் இது ஏற்பட்டது?  ஐராவதம் மூலம்தான்.  அவரும் தீபாவளி மலர்களை வாங்கிப் படியுங்கள் என்று சொன்னதே கிடையாது.  உண்மையில் அவர் தீபாவளி மலர்களைத் தீபாவளி அன்று வாங்குவதே கிடையாது.  அப்படியே வாங்கினாலும் மிகக் குறைவான விலையில் கிடைக்கும் தீபாவளி மலர்களைத்தான் வாங்குவார்.    ஆனால் அவர் லென்டிங் லைப்ரரியில் தீபாவளி மலர்களைப் படித்துவிட்டுக் கொடுத்து விடுவார்.  எந்த ஆண்டு தீபாவளி மலர் என்ற கணக்கெல்லாம் கிடையாது.  அடிக்கடி அவர் வீட்டிற்குப் போவேன்.  அவர் பழைய தீபாவளி மலர்களைப் படித்துவிட்டு அதைப் பற்றி எழுதுவார்.  அதில் வெளிவந்திருக்கும் சிறுகதைகளைப் பற்றி விமர்சனம் செய்திருப்பார்.  என்னிடம்தான் விருட்சத்தில் பிரசுரிக்கக் கொடுப்பார்.  அப்போதுதான் எனக்கும் தீபாவளி மலர்கள் ஒன்றிரண்டு வாங்கவேண்டுமென்று தோன்றியது.   ஐராவதம் உலக இலக்கியமெல்லாம

முப்பத்தாறாம் நாளின் வாசிப்பனுபவம் (07.10.2019)

அ ழகியசிங்கர் இரண்டு நாட்களாக நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் நாட்டுக்கு உழைத்த நல்லவர் வரிசையில் கஸ்தூர்பா காந்தியைப்பற்றி எம் வி வெங்கட்ராம் எழுதிய புத்தகம். இந்தத் தலைப்பில் பல புத்தகங்களைத் தாயாரித்திருக்கிறார் எம் வி வெங்கட்ராம்.  74 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் ஒரு அரிய பொக்கிஷம்.  நம் நாட்டுத் தலைவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகளை ஓரளவு விரிவான வழியில் எழுதியிருக்கிறார் எம்.வி வெங்கட்ராம்.  18 தலைப்புகளில் கஸ்தூர்பா காந்தியின் வாழ்க்கை யை நம் கண் முன் நிறுத்துகிறார் எம் வி வெங்கட்ராம். பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ள இப் புத்தகத்தை ஒவ்வொருவரும் வாங்கிப் படிப்பது அவசியம்.  இந்தப் புத்தகத்தின் விலை ரூ.35தான். குஜராத் மாகாணத்தில் போர்பந்தர் என்னும் நகரத்தில் கோகுல்தாஸ் மாகன் ஜீ, விரஜகும்வர்பா என்ற தம்பதிகளுக்கு மூத்த மகளாய்  அவதரித்தவர் கஸ்தூர்பா.  அவர் 1869ஆம் ஆண்டு பிறந்தார்.  மகாத்மாவைவிட ஆறுமாதம் மூத்தவர்.  அக்காலத்தில் பெண்களைப் படிக்க வைக்கும் வழக்கம் பெரும்பாலும் கிடையாது.   கஸ்தூர்பாவும் பள்ளிக்கூடத்தின் பக்கமே போகவில்லை.  ஆனால் குடும்ப வே

'ரெங்கையா முருகன்' 'வ.உ.சியும் நானும்'-1, 2, 3

'ரெங்கையா முருகன்' 'வ.உ.சியும் நானும்'-1, 2, 3 என்ற தலைப்பில் 19.10.2019 அன்று உரை நிகழ்த்தி உள்ளார்.  அதன் ஒளிப்பதிவுகளைக் கேட்டு மகிழும்படி கேட்டுக் கொள்கிறேன் அழகியசிங்கர்

துளி - 67 தீபாவளி மலரும் நானும்...1

அழகியசிங்கர் தமிழில் தீபாவளி மலர்கள் எப்போது ஆரம்பமானது என்று தெரியவில்லை. அது ஆரம்பமாக யார் அல்லது எந்தப் பத்திரிகை துணிந்தது என்று தெரியவில்லை.  2015ஆம் ஆண்டு நான் எல்லா தீபாவளி மலர்களையும் வாங்கினேன்.  பட்டாசு வாங்கி கொளுத்தி பணத்தை வீணடிக்க வேண்டாமென்றும் அதற்குப் பதில் தீபாவளி மலர்கள் வாங்கி வைத்துக்கொள்ளலாமென்று நினைத்தேன். அப்படி வாங்கிச் சேகரித்த தீபாவளி மலர்களில் ஒன்றைக் கூட எடுத்துப்படிக்கவில்லை.  புரட்டிப் பார்த்ததோடு சரி.  அதன் பின் வந்த ஆண்டுகளில் தீபாவளி மலர்கள் வாங்குவது கிடையாது.  நான்கு முறைகள்தான் தீபாவளி மலர்களில் என் படைப்புகள் இடம் பெற்றன.  கல்கி தீபாவளி மலரில்  ராகவன் ஆசிரியர் பொறுப்பிலி ருந்தபோது என் சிறுகதை ஒன்று பிரசுரமானது.  ஆனந்த விகடன் தீபாவளி மலரில் ச சி சிவக்குமார் முயற்சியில் சிறுபத்திரிகைகள் குறித்து எழுதிய கட்டுரை ஒன்று பிரசுரமானது.  மூன்றாவது முறையாக அமுதசுரபி தீபாவளி மலரில் திரூப்பூர் கிருஷணன் ஆசிரியப் பொறுப்பில் ஸ்டெல்லா புரூஸ் பற்றி எழுதிய கட்டுரை வந்தது.  தற்போது லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் 2019ஆம் ஆண்டில் üபயணம்ý என்ற ச

முப்பத்தைந்தாம் நாளின் வாசிப்பனுபவம் (06.10.2019)

அழகியசிங்கர் ஞாயிற்றுக்கிழமையோடு சேர்த்து (20.10.2019) மூன்று நாட்கள் எதுவும் எழுத முடியாமல் போய்விட்டது.  இதோ இன்று (திங்கள்) மயிலாடுதுறை பயணம்.  கையில் பா.ராகவனின் 'மெல்லினம்' புத்தகம்.  இன்னும் சில புத்தகங்களையும் கொண்டு போயிருக்கிறேன்.  ஆனால் படிக்க முடியுமா என்று தெரியவில்லை. நான் ஏற்கனவே ஆரம்பித்த 'மெல்லினம்' என்ற பா.ராகவனின் நாவலை ஒரு வழியாகப் படித்து முடித்துவிட்டேன்.  அதன்பின் இன்னொரு நாவலையும் எடுத்துப் படிக்க ஆரம்பித்து விட்டேன்.  கையில் ஒரு நோட்டு எடுத்துக்கொண்டு போனேன். ராகவன் நாவலைப் பற்றி எழுதத் தொடங்கினேன். 'மெல்லினம்'  என்ற நாவல் 'கல்கி' பத்திரிகையில் தொடர்கதையாக வந்தது.  இந் நாவலைப் படிக்கும்போது கல்கி வாசகர்களுக்காக எழுதப்பட்ட நாவல் போல் தோன்றவில்லை.  நாவல் சொல்லும் முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்.   சிறுவர்களை மையமாக வைத்துக்கொண்டு ஒரு நாவலை எழுதி விட்டார்.  ஒரு விதத்தில் இது சிறார்களின் நாவலா என்பதை ஏற்க முடியவில்லை.  நாவலை எப்படி வேண்டுமானாலும் கட்டமைத்துக் கொள்ளலாம் என்பதற்கு இந்த நாவல் ஒரு

முப்பத்துநான்காம் நாளின் வாசிப்பனுபவம் (05.10.2019)

அழகியசிங்கர் சுப்ரமண்ய ராஜ÷ கதைகள் என்ற தொகுப்பை எடுத்து வைத்துக்கொண்டேன்.  32 கதைகள் கொண்ட இத் தொகுப்பில் இரண்டு குறுநாவல்கள். 'இன்று நிஜம்,'  'இரவுகள் தவறுகள்.'  ஒரு பத்து கதைகளைப் படித்தேன்.  இந்தப் புத்தகத்தையும் முழுதாக முடிக்காமல் இன்னும் படிப்பதற்குப் பாக்கி வைத்துள்ளேன். இலக்கியச் சிந்தனை கூட்டங்களில் சுப்ரமண்ய ராஜ÷, பாலகுமாரனை பார்த்திருக்கிறேன். சுப்ரமண்ய ராஜ÷ ஒரு மோட்டர் பைக்கில் கம்பீரமாக வந்து இறங்குவார். அப்போது இலக்கியச் சிந்தனைக் கூட்டம் ஆழ்வார்பேட்டையில் ஒரு சர்ச் இருக்கும் இடத்தில் நடக்கும் என்று நினைக்கிறேன். இலக்கியச் சிந்தனை கூட்டங்களை சுப்ரமண்ய ராஜ÷வும், பாலகுமாரனும் கலகலப்பாக பேசிக்கொண்டிருப்பார்கள். அசோகமித்திரன் சுப்ரமண்யராஜ÷ கதைகளைக் குறித்து இப்படிக் குறிப்பிடுகிறார். 'முன்மாதிரி என்று யாரையும் குறிப்பிடத் தோன்றவில்லை.  அவருடைய எழுத்தில் சமகாலத்துச் சமூக, தனி மனித ஒழுக்கச் சிக்கல்களும், மனசாட்சி நெருக்கடிகளும் சமகாலத் தமிழ் நடையில் வடிவம் தரப்பட்டிருக்கின்றன.  ஆனால் இந்தச் சிக்கல்களையும் இந்த நெருக்கடிகளையும் இ

துளி - 66 திருப்பதி பயணம்.

அழகியசிங்கர் எனக்கு திருப்பதி பயணம் என்றாலே நடுக்கமாக இருக்கும்.  அவ்வளவு எளிதாக ஏழுமலையானைப் பார்த்து விட முடியாது.  நான் கடவுள் பக்தி உள்ளவனா நாத்திகனா என்று எனக்குத் தெரியாது.  கோயிலுக்குள்ளேயே போகாமல் நான் நண்பர்களுடன் கோதண்டர் ராமர் கோயிலுக்குள் உட்கார்ந்து பேசிவிட்டு வந்து விடுவேன். இந்த முறை காரில் கோயிலுக்குப் போவதாக முடிவு எடுத்தோம்.  குடும்பத்தோடு எல்லோரும்.  பேத்திக்கு மொட்டை அடிக்க வேண்டுதல்.  காலை 7 மணிக்கே கிளம்பிவிட்டோம். ஒரு இடத்தில் நின்று இட்லி சாப்பிட்டோம்.  நான் இரண்டு இட்லி மட்டும் எடுத்துக்கொண்டேன்.  முன்பெல்லாம் 5 அல்லது 6 இட்டிலிகளை உள்ளே தள்ளுவேன்.  வயிற்றை நம்ப முடியாது. பயம்.  ஒரு முறை 10 நிமிடத்தில் 20 இட்லிகளைச் சாப்பிட வேண்டும்.  நோ சட்னி. நோ சாம்பார். வெறும் இட்லி மட்டும்.  நான் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு 9 நிமிடங்களில் சாப்பிட்டேன்.  எழுத்தாளர் நா பார்த்தசாரதி ஒரு ரயில் பயணம் போது, 'இட்டிலிக்குண்டோ இணை,' என்ற ஈற்றடி கொடுத்த வெண்பா எழுதச் சொன்னாராம். கீழ்த் திருப்பதியில் அலர்மேல் மங்கம்மாள் கோயிலுக்குச் ச

முப்பத்துமூன்றாம் நாளின் வாசிப்பனுபவம் (04.10.2019)

அழகியசிங்கர் இரண்டு நாட்கள் குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்றேன். கூடவே இரண்டு புத்தகங்கள் எடுத்துக்கொண்டு போனேன். ஒரு புத்தகம். சுஜாதாவின் 'கணையாழியின் கடைசிப் பக்கங்கள்.'  இன்னொரு புத்தகம் பா ராகவனின் 'மெல்லினம்' என்ற நாவல். காரில் பயணம் செய்யும்போதே படித்துக்கொண்டு வந்தேன்.   கோயிலுக்குப் போகும்போது புத்தகத்தை உள்ளே எடுத்துக்கொண்டு போகவில்லை.  அங்குள்ளவர்கள் கோயிலுக்குள் போகும்முன் கையில் எதையும் வைத்துக்கொள்ளக் கூடாது.  தூக்கி விசிறி அடித்து விடுவார்கள்.  முன்பே இது தெரியுமாதலால் புத்தகத்தை எடுத்துக்கொண்டு போகவில்லை. சுஜாதாவின் üகணையாழியின் கடைசிப் பக்கங்களை (1965-1998)ý படித்தேன்.  அதனால் பா ராகவன் நாவலைப் படிக்க முடியவில்லை.  சுஜாதாவின் புத்தகத்தையும் 140 பக்கங்கள் வரைதான் படித்தேன்.  1965லிருந்து 1973வரை.  இப்படி பாதிப்பாதியாய் படித்த புத்தகங்களின் லிஸ்ட் தர விரும்புகிறேன். 1. கண்ணதாசனின் 'வனவாசம்.' 2. தேவதச்சனின் 'மர்ம நபர்.' 3. புதுமைப்பித்தன் கதைகள். 4. தொ.மு.சி ரகுநாதனின் 'பாரதி காலமும் கருத்து

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 51

        தலைப்பு  :  வ.உ.சியும் நானும் சிறப்புரை :  ரெங்கையா முருகன் இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்     மூகாம்பிகை வளாகம்     சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே     ஆறாவது தளம்      மயிலாப்பூர்     சென்னை 600 004 தேதி 19.10.2019  (சனிக்கிழமை) நேரம் மாலை 6.00 மணிக்கு பேசுவோர் குறிப்பு  : நூலகர் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர் அன்புடன் அழகியசிங்கர் 9444113205

முப்பத்திரண்டாம் நாளின் வாசிப்பனுபவம் (03.10.2019)

அழகியசிங்கர் கடந்த 2 நாட்களாக அலைச்சல். போகுமிடமெல்லாம் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு போனேன்.  ஆனால் படிக்க முடியவில்லை.  எப்படியோ முயற்சி செய்து ஒரு நாடகப் புத்தகத்தைப் படித்து விட்டேன்.  அந்தப் புத்தகம் பெயர் : 'மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள்.' அது ஒரு நாடகம்.  மூல ஆசிரியர் வால்டெர் ஏரிஷ் ஷேபெர் என்கிற ஜெர்மன் ஆசிரியர்.  அதைத் தமிழில மொழி பெயர்த்தவர் ஜி.கிருஷ்ணமூர்த்தி. 1995ஆம் ஆண்டு வெளியானது.  ஏ கே கோபாலன் வெளியிட்டுள்ளார்.  இந்த நாடகம் 1949-ல் எழுதப்பட்ட ஒரு ரேடியோ நாடகம் என்ற குறிப்பு இந்தப் புத்தகத்தில் உள்ளது.  இதில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பாத்திரங்கள்.  அறிவிப்பாளர், பண்டிட் நேரு, மருத்துவர்.  காந்தி : ஆண்குரல் . மத்திய குரல் ஒலியில் பூமி  : பெண் குரல், ஆழமான குரல் ஒலியில் நதி : ஆண் குரல் ஆழமான குரல் ஒலியில் காற்று : ஆண் குரல். உயர்ந்த குரல் ஒலியில் தோட்டா (ரவை) : பெண் குரல், மத்திம குரல் ஒலியில் குரல் : பெண் குரல், உயர்ந்த குரல் ஒலியில் இந்த நாடகத்தை ஆரம்பிக்கும் முன் மகாத்மா காந்திஜியின் பொன் மொழிகள் என்