Skip to main content

பிள்ளையார் படம் போட்ட விருட்சம்



அழகியசிங்கர்





நவீன விருட்சம் 54வது இதழில் (அதாவது பிப்பரவரி 2002ல்) பிள்ளையார் படத்தை நவீன ஓவியமாக சிவபாலன் என்பவர் வரைந்து கொடுத்திருந்தார். இந்தப் படம் ஓவியர் விஸ்வம் மூலம் எனக்குக் கிடைத்தது.  நவீன விருட்சத்தின் அட்டைப் படமாக அதை பயன்படுத்தினேன்.  

60 பக்கங்கள்.  அந்த இதழ் விருட்சம் விலை ரூ.10.  அதில் முக்கியமான கவிதையாக ரா ஸ்ரீனிவாஸன் கவிதையை நான் கருதுகிறேன்.  அந்த அட்டை ஓவியத்துடன் அவர் கவிதையையும் இங்கு அளிக்கிறேன். 



 ரா ஸ்ரீனிவாஸன்



தற்பொழுது

1)

வேறெப்பொழுதுமில்லாத 
தற்பொழுதின் வாசல் 
திக்கெல்லாம் திறந்தே இருக்கிறது - 
உட்புகுக,


இப்பொழுது திறந்தது 
உள்ளேயிருந்தா வெளியேயிருந்தா  - 
காண்க,

எல்லாம் உருமாறிக் கொண்டிருக்கும் தற்பொழுது - 
அறிக.

தற்பொழுதை விட்டு விலகிச் செல்கின்றன
எல்லாப் பயணங்களும் - 
பிரிகின்ற பாதைகளெல்லாம் தற்பொழுதிலிருந்து 
அப்பால் இட்டுச் செல்கின்றன - 
உணர்க.

எப்பொழுதுமான தற்பொழுதிற்குத் 
தலை வணங்குகிறேன், 
தாள் பணிகிறேன்,



Comments