அழகியசிங்கர்
குவிகம் இருப்பிடத்தில் நேற்று நண்பர்களைச் சந்தித்தேன். இதுமாதிரியான கூட்டத்திற்கு எத்தனைப் பேர்கள் வருவார்கள் என்பது தெரியும். அதுமாதிரியே வந்திருந்தார்கள்.
கலந்து கொண்டவர்களில் ஒருவர், 'உங்களுக்கு கவிதையா கதையா எதில் விருப்பம்?' என்ற கேள்வி கேட்டார். 'முதலில் எல்லோரும் கவிதைதான் எழுதுவார்கள். அதன்பின்தான் கதை எழுத ஆரம்பிப்பார்கள். பின் கட்டுரைகள் எழுதுவார்கள்..நாவலும் எழுதுவார்கள்,' என்றேன். 'ஆனால் சில எழுத்தாளர்கள்தான் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவார்கள்?' என்றேன்.
இது எல்லோரும் சேர்ந்து பேசுகிற கூட்டம். 'ஒரு புத்தகத்தைப் பற்றி விமர்சனம் செய்யும்போது, எல்லோர் முன்னும் அதை மோசமாக விமர்சனம் செய்யாதீர்கள். உங்கள் கருத்து உங்களுக்கு மட்டும்தான் உண்மை. அதைத் தெரிவிக்கும்போது மற்றவர்களிடம் வைரஸ் மாதிரி பரவி புத்தகம் வாங்குபவர்கள் வாங்காமல் இருந்து விடுவார்கள்,' என்றேன். நான் சொன்னதை அங்குக் கூடியிருந்த நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
Comments