Skip to main content

Posts

Showing posts from August, 2017

எல்லோரிடமும் ஒரு நிமிடம்தான் பேச முடிகிறது

அழகியசிங்கர் என் அலுவலக நண்பரின் பெண்ணிற்குத் திருமணம்.  பத்திரிகை அனுப்பியிருந்தார்.  பின், போனில் கூப்பிட்டார்.  நானும் அவரும் சீர்காழி என்ற ஊரில் உள்ள வங்கிக் கிளையில் ஒன்றாகப் பணிவுரிந்து கொண்டிருந்தோம்.  அங்கே அதிக நேரம் பேசிக்கொண்டிருப்போம். அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்போது ஒன்றாக கிளம்பிப் போவோம்.  இதோ நான் அலுவலகத்தை விட்டு 4 ஆண்டுகள் முடியப் போகிறது. அவர் இன்னும் ஞாபகம் வைத்துக்கொண்டு எனக்குப் பத்திரிகை அனுப்பியிருந்தார்.  நான் இருக்குமிடம் மாம்பலம்.  திருமணம் நடக்குமிடம் புழுதிவாக்கத்தில் உள்ள மூவரசம் பேட்டை கூட்டு ரோடில் உள்ள ஒரு கல்யாண மண்டபம்.7.30க்கு ரிசப்ஷன்.  நான் மாலை 5.30 மணிக்கே கிளம்பி மடிப்பாக்கத்தில் உள்ள என் பெண் வீட்டிற்குச் சென்றேன்.  அங்கே ஒரு அரை மணி நேரம் இருந்தேன்.  "மழை பெய்யப் போகிறது..சீக்கிரம் போ," என்றாள் பெண். நான் அங்கிருந்து கிளம்பி கல்யாண மண்டபத்தை அடைந்தேன்.  சரியாக 7.15 மணி ஆகிவிட்டது.  அலுவலக நண்பர் வாசலில் நின்று என்னை உபசரித்தார்.  இந்த நான்கு வருடங்களில் அவர் உருவம் முழுவதும் மாறி விட்டது.  முதல் மாடி.

நகுலனும், அப்பாவும், நானும்....

அழகியசிங்கர் நகுலன் சென்னை வரும்போதெல்லாம் என் வீட்டிற்கு வராமல் இருக்க மாட்டார்.  அவர் சென்னையில் தங்கும் இடம் ஆன அவர் சகோதரர் வீடு என் வீட்டிலிருந்து அருகில் இருந்தது.  சகோதரரை அழைத்துக்கொண்டு நடந்தே வந்துவிடுவார்.  ஒருமுறை அவர் வந்திருந்தபோது நான் வீட்டில் இல்லை.   நகுலன் என் அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தார்.  கிட்டத்தட்ட அரை மணி நேரம் மேலேயிருக்கும். நான் வீட்டிற்கு வந்தபோது நகுலனும், அப்பாவும் பேசிக்கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.என்ன பேசிக்கொண்டிருப்பார்கள்? எதைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள்?  என்பதுதான் என் எண்ணமாக இருந்தது. நகுலன் எப்போதும் புத்தகங்களைப் பற்றியும், எழுத்தாளர்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருப்பவர்.  என் அப்பாவிற்கு அதெல்லாம் தெரியாது. மாடியில் உள்ள அறைக்கு நகுலனை அழைத்துக்கொண்டு போனேன்.   "அப்பாவிடம் என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள்?" நகுலன் சிரித்தபடியே,"உங்கள் அப்பா சுவாரசியமான மனிதர். அவர் ஒரு ஹோமியோபதி மருத்துவர்.. அந்த மருந்துகளைப் பற்றி சொன்னார்?" "போச்சுடா..யார் வந்தாலும் இப்படித்தான் ஆரம்பித்து

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 76

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 76 அழகியசிங்கர்   அந்நியன் சிற்பி எப்போதும் என் பின்னால் யாரோ வருகிறார்கள் அவன் முகத்தை நான் அறியேன் ஆயினும் அவன் இருக்கிறான் கண்ணுக்குத் தெரி0யாத மாயாவி அவன் என் அசைவு ஒவ்வொன்றும் அவனுக்குள் பதிவாகி விடுகிறது உண்ண அமர்ந்தால் உடன் அவனும் அமர்வதுபோல் தெரிகிறது தெருவில் நடந்தால் உரசிக் கொண்டே நடப்பதாய் உணர்கிறேன் பத்திரிகை வாங்கினால் எனக்கு முன் அவன் அதைப் படித்து விடுவதாய் பிரமை யாரையேனும் சந்தித்தால் அவர்கள் அடையாளங்களும் குறிக்கப் படுவதாய்த் தெரிகிறது மேடையில் போனிôல் üஜாக்கிரதைý என எச்சரிக்கப்படுவதாய் உள்ளூணர்வு படுக்கை அறையில் மனைவியின் முகம் பார்க்க எத்தனிக்கையில் சுற்றியது இனம்புரியா மூச்சுக் காற்றின் வெப்பம் எப்போதும் என் பின்னால் யாரோ வருகிறார்கள் நன்றி : கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை - சிற்பி - கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123,  8 மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தி நகர், சென்னை 600 017 - தொலைபேசி எண் : 2436423 - வெளியான ஆண்டு : மே 2016 - விலை : ரூ.80

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 75

அழகியசிங்கர்   இருளில் நகரும் யானை மனுஷ்ய புத்திரன் வனப்பாதையின்  இரவுப் பயணத்தில் திடீரென காரோட்டி 'யானை யானை' என்று கிசுகிசுத்தபடி விளக்குகளை அணைத்தான். சாலைக்கு வெகு அருகாமையில் மூங்கில் வனம் நடுவே யானைக் கூட்டம் இருளில் மேகக் கூட்டங்கள்போல நகர்ந்து கொண்டிருந்தன எத்தனை ஆயிரம் ஆண்டுகள் இரவெல்லாம் இதுபோல யானைகள் இருளிலேயே நடந்துகொண்டிருக்கின்றன வேறொரு இடத்தில் காரோட்டி  ஒரு புதருக்குள் ஹெட் லைட்டைத் திருப்பிக்காட்டினான் ஒரு பெரிய ஒற்றை யானை தனியாக நின்றுகொண்டிருந்தது அதன் கண்களில் நீர் 'இருளில் அழும் யானைகள்' ஒரு வாக்கியம் மனதை அழுத்தியது 'நாம் நம் குடிலுக்குத் திரும்பிவிடலாம்'  என்றேன்.  இப்போதெல்லாம் நான் என் அறையில் விளக்கைப் போடாமல் இருளிலேயே குளிக்கிறேன் இருளிலேயே தொலைபேசியில் பேசுகிறேன் இருளிலேயே துணி துவைக்கிறேன் இருளிலேயே மேசையை ஒழுங்குபடுத்துகிறேன் இருளிலேயே தரையை பெருக்குகிறேன் இருளில் ரேடியத்தில் ஒளிரும் கைக்கடிகாரத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறேன் இருளில் ப

ஏ கே செட்டியாரைப் பற்றி கடற்கரையின் நெகிழ்வான பேச்சு

அழகியசிங்கர் ஏ கே செட்டியார் படைப்புகளைப் பற்றி கடற்கரை 19.08.2017 சனிக்கிழமை அன்று விருட்சம் இலக்கியச் சந்திப்பு சார்பில்  பேசிய பேச்சை இங்கே ஒலிபரப்புகிறேன்.

40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்...

அழகியசிங்கர் கேள்வி கேட்பவர் : இப்போது என்ன புத்தகம் படித்து முடித்துள்ளீர்கள்? நான் : அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள். கே கே : 40 ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாவல் ஆயிற்றே? நான் : ஒரு கூட்டத்தில் எனக்கு அசோகமித்திரனைப் பற்றி பேச வாய்ப்பு கிடைத்தது.  அப்போது அவருடைய சில சிறுகதைகளையும், நாவல் ஒன்றையும் படித்தேன்.  கரைந்த நிழல்கள்தான் அந்த நாவல். கே கே :  முன்பே படிக்கவில்லையா? நான் : படித்திருக்கிறேன்.  சினிமா சநம்பந்தமான நாவல் என்ற ஞாபகம் மட்டும் இருந்தது.  ஆனால் நாவல் முழுக்க மறந்து போய்விட்டது. கே கே : நாவலில் என்ன விசேஷம். நான் : அவர் நாவலை எடுத்துக் கொண்டு போகும் பாங்கு.. கே கே : சினிமா சம்பந்தமான நாவல்தானே இது,.. நான் : உண்மைதான்.  இந் நாவலை இப்போது படித்தாலும், சினிமாவில் நடக்கும் எந்த விஷயமும் பெரிதாக மாறவில்லை என்று தோன்றும். கே கே : இந்த நாவலில் என்ன விசேஷம்? நான் : பலதரப்பட்ட கதாபாத்திரங்களை அசோகமித்திரன் உருவாக்கியிருக்கிறார்.  ஒரு சினிமா அவுட்டோர் ஷ÷ட்டிங் நடப்பதிலிருந்து இந்தக் கதை ஆரம்பமாகிறது.  அதை நடத்த எத்தனைப் பேர்கள் ஈடுபடுகிறார்க

விருட்சத்தில் வெளிவந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள் - 2

அழகியசிங்கர் ஜோர்ஜ் லூயி போர்ஹே தற்கொலை                                                                         தனித்த ஒரு நட்சத்திரத்தைக்கூட விட்டுவைப்பதாயில்லை  இரவில் இந்த இரவையும் விட்டுவைப்பதாயில்லை நான் மடிந்து விடுவேன்.  என்னுடன் சகிக்க முடியாத இந்த அண்டத்தின் சுமையும். பிரமிடுகளையும், பெரும் பதக்கங்களையும், கண்டங்களையும், வதனங்களையும் நான் துடைத்துவிடுவேன். சேமிக்கப்பட்ட கடந்த காலத்தையும் நான் துடைத்துவிடுவேன் நான் உண்டாக்குவேன் புழுதியை, வரலாற்றிலிருந்து,                          புழதியிலிருந்து இப்போது நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் அந்திமகால                                       அஸ்தமனத்தை நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் இக் கடைசிப் பறவையை. நான் தருகிறேன் சூன்யத்தை இங்கு ஒருவருமே இல்லாதபோது மூலம் : ஸ்பானிய மொழி ஆங்கிலம் வழி தமிழில் : அஷ்டாவக்ரன்   (நவீன விருட்சம் ஜனவரி - மார்ச்சு 1989)

விருட்சத்தில் வெளிவந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள்

விருட்சத்தில் வெளிவந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள் அழகியசிங்கர் விருட்சம் ஆரம்பித்த 1988ஆம் ஆண்டிலிருந்து மொழிபெயர்ப்புக் கவிதைகளும் விருட்சத்தில் பிரசுரம் ஆகிக் கொண்டிருந்தன.  பலர் மொழிபெயர்ப்புக் கவிதைகளை விருட்சத்தில் எழுதி உள்ளார்கள்.  அவற்றை எல்லாம் தொகுக்கும் எண்ணம் உள்ளதால், ஒவ்வொன்றாய் முகநூலிலும், பிளாகிலும் வெளியிடுகிறேன். நார்மன் மேக்கே  கவிஞன் சம்பவங்கள் அவனை நெருக்கடியான நிலையில் தள்ளித் துன்புறுத்தின. வறுமை, சமுகம், நோய் - எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவனைத் தாக்கின. அவற்றால் அவனை மௌமாக்க முடியவில்லை கல்லெறியப்பட்ட காக்கை முன்பு ஒரு போதும் நினைத்தேயிராத வகையில் எல்லாம் தப்பிப் பிழைக்க வழிகாண்பது போல முன்னைவிட மேலும் பல கவிதைகள் அவன் எழுதினான் எல்லாம் வெவ்வேறாக இப்போது சிரமமில்லாது சமநிலையில் பறப்பதைத் தொடருமுன் மக்களின் தலைகளுக்கு மேலே அவர்கள் வீசியெறியும் கற்கள் தன் மீத படாத உயரத்தில் சில சமயங்களில் திடீரென அவன் தடுமாறுகிறான் தடைப்பட்டு நிற்கிறான் பக்கவாட்டில் சுலு;கிறான் இதில் என்ன ஆச்சர்யம்! மூலம் : ஆங்கிலம் தமிழில்

ஏ கே செட்டியாரைப் பற்றி நெகிழ்வான பேச்சு

அழகியசிங்கர்                                                                                                          சமீபத்தில் நான் மூன்று கூட்டங்களை நடத்தி உள்ளேன். இந்த மூன்று கூட்டங்களிலும் பேசியவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தப் பேச்சுக்களைக் கேட்க வந்தவர்களுக்கு அதிகப்படியான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல் கூட்டம் ஜøன் மாதம் நடந்தது.  திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தி ஜானகிராமனைக் குறித்துப் பேசினார்.  உண்மையில் அன்று தி ஜானகிராமனை நேரில் அழைத்து வந்து அவர் பக்கத்தில் உட்கார வைத்து உரையாடியது போல் தோன்றியது.  இரண்டாவது கூட்டம் ஜøலை மாதம் நடந்தது.  இக் கூட்டத்தில் பெருந்தேவி அவர்கள் புதுமைப்பித்தன் படைப்புகளைப் பற்றிப் பேசினார்.  பெருந்தேவியின் பேச்சைக் கேட்டு புதுமைப்பித்தனே நெகிழ்ந்து போனதுபோல் உணர்வு ஏற்பட்டது.   மூன்றாவது கூட்டமாக இன்று கடற்கரை ஏ கே செட்டியாரைப் பற்றி பேசினார்.  அவருடைய பேச்சை ஏ கே செட்டியார் கேட்டிருந்தால், அவரை மனமுவந்து ஆசிர்வாதம் செய்திருப்பார்.  எனக்கு என்ன மலைப்பு என்றால் 2000 பக்கங்களுக்கு மேல் உள்ள

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 28

                 ஏ கே செட்டியாரும் நானும்  சிறப்புரை :  கடற்கரய் மந்தவிலாச அங்கதம்   இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்     மூகாம்பிகை வளாகம்     4 லேடீஸ் தேசிகர் தெரு     ஆறாவது தளம்     மயிலாப்பூர்     சென்னை 600 004 (சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)     தேதி 19.08.2017 (சனிக்கிழமை) நேரம் மாலை  6 மணிக்கு பேசுவோர் குறிப்பு :  கவிஞர், பத்திரிகையாளர், தொகுப்பாளர் அனைவரும் வருக, அன்புடன் அழகியசிங்கர் 9444113205

இரண்டு மூன்று நாட்கள்......

அழகியசிங்கர்                                                                                                                                      இரண்டு மூன்று நாட்கள் சென்னையை விட்டு மயிலாடுதுறைக்குச் சென்று விட்டேன். அதனால் முகநூல் பக்கம் வரவில்லை.  வரும் சனிக்கிழமை அதாவது 19ஆம் தேதி ஏ கே செட்டியார் படைப்புகளைப் பற்றி கடற்கரை அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.  தவறாமல் கலந்துகொண்டு கூட்டத்தை மேன்மை படுத்துங்கள்.  6 மணிக்கு ஆரம்பித்து 7.30 மணிக்குள் கூட்டம் முடிந்துவிடும்.  தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமை இதுமாதிரியான கூட்டத்தை நடத்த உத்தேசம்.  உங்கள் அறிவுரையை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  இக் கூட்டத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 28வது கூட்டம்

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 28வது கூட்டம் அழகியசிங்கர்                                                                   விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 28வது கூட்டம் இந்த மாதம் மூன்றாவது சனிக்கிழமை வழக்கம்போல் நடைபெற உள்ளது.  ஒவ்வொரு முறையும் இக் கூட்டத்திற்கு வருபவர்களை நான் வரவேற்கிறேன்.  இந்த முறை ஏ கே செட்டியார் பற்றிய கூட்டம்.  சந்தியா பதிப்பகம் மூலம் வெளிவந்த ஏ கே செட்டியார் புத்தகத்தைத் தொகுத்து அளித்தவர், கடற்கரை மந்தவிலாச அங்கதம்.  இத் தொகுப்பு 2000 பக்கங்களைக் கொண்டது.  அவர் தன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள உள்ளார்.  இக் கூட்டம் பற்றிய தகவலை எல்லோரும் பகிர்ந்து அளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். காந்தியைப் பற்றி ஏ கே செட்டியார் எடுத்த ஆவணப்படமும் தி நகரில் உள்ள தக்கர் பாபா கல்வி நிலையத்தில் விற்பனைக்கு உள்ளது.  விலை ரூ.100 தான்.  ஒவ்வொருவரும் வாங்கிப் பாதுகாக்க வேண்டிய ஆவணப்படம்.  இதோ கூட்டத்திற்கு ஆன அழைப்பிதழை உங்களுக்கு அளிக்கிறேன்.  அழைப்பிதழைத் தயாரித்து அளித்தவர் என் நண்பர் கிருபானந்தன்.  அவருக்கு நன்றி பல. 

புத்தகங்களைப் படிக்காமல பார்த்துக் கொண்டிருக்கிறேன்...

அழகியசிங்கர்                                                                                 தமிழ் பேசுபவர்களை எடுத்துக்கொண்டால் பாதிக்கு மேல் படிக்காதவர்கள்தான் இருப்பார்கள்.  பெரும்பாலும் பேசுபவர்களாகத்தான் இருப்பார்கள்.  தமிழ் எழுதத் தெரியாது, படிக்கத் தெரியாது என்று பலர் இருப்பார்கள்.  இப்படிப் படிக்கவும் எழுதவும் தெரிந்தவர்களில் பலர் தமிழ்ப் புத்தகங்களைப் படிக்கவே மாட்டார்கள்.  என் குடும்பத்தில் நான் ஒருவன்தான் தமிழ் புத்தகம் படிக்கிறவன்.  என் மனைவி எப்பவாவது லக்ஷ்மி புத்தகங்களைப் படிப்பார்.  யாரும் தமிழ்ப் பத்திரிகைகளை வாங்கிப் படிக்க மாட்டார்கள். நான் அந்தக் காலத்திலிருந்து தமிழ் புத்தகங்களைப் படிக்கிறவன். ஆங்கிலம் படித்தாலும், தமிழ் புத்தகம் படிக்கிற அளவிற்கு ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கிற ஆர்வம் இல்லாதவன்.  ஆனால் புத்தகங்களை வாங்கி வாங்கி வைத்துக்கொள்வேன். ஒருநாள் நான் வைத்திருக்கும் புத்தகங்களைப் பார்த்து பயந்து விட்டேன். நமக்கோ வயது கூடிக்கொண்டே போகிறது, எப்போது இந்தப் புத்தகங்களைப் படிக்கப் போகிறோம் என்ற பயம் என்னை பற்றிக்கொண்டது.  வாரம் ஒருநாள் புத்தகங்

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 74

அழகியசிங்கர்    ஒழிந்த நேரங்கள்  காளி-தாஸ் நான் ஒழிந்த நேரத்தில் பிறந்தேன் நான் ஒழிந்த நேரத்தில் வளர்ந்தேன் நான்  ஒழிந்த நேரத்தில் படித்தேன் நான்  ஒழிந்த நேரத்தில் எழுதினேன் நான் ஒழிந்த நேரத்தில் விளையாடினேன் நான்  ஒழிந்த நேரத்தில் காதலித்தேன் நான் ஒழிந்த நேரத்தில் சம்பாதித்தேன் நான் ஒழிந்த நேரத்தில் கல்யாணம் செய்தேன் நான்  ஒழிந்த நேரத்தில் புணர்ந்தேன் நான்  ஒழிந்த நேரத்தில் பிள்ளை பெற்றேன் நான்  ஒழிந்த நேரத்தில் குடித்தேன் நான் ஒழிந்த நேரத்தில் தூங்கினேன் நான்  ஒழிந்த நேரத்தில் சாமி கும்பிட்டேன் நண்பர்களே வாருங்கள் ஒழிந்த நேரம் பார்த்து ஒழிந்த நேரம் ஒன்றில் நான் செத்துப் போகும் முன்....... நானும் நானும் - காளி-தாஸ் - கவிதைகள் - மொத்தப் பக்கங்கள் : 48 - விலை : ரூ.50 - முதல் பதிப்பு : மையம் வெளியீடு - இரண்டாம் பதிப்பு : விருட்சம், 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை - 33 - தொடர்புக்கு : 9444113205 பின் குறிப்பு : காளி-தாஸ் என்ற பெயரில் கவிதைகளை எழுதியவர் ஸ்டெல்லா ப

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 73

அழகியசிங்கர்   கொள்கை  சுந்தர ராமசாமி                                                                                                                                                    மேற்கே ரொமான்டிசிஸம் நாச்சுரலிஸம் ரியலிஸம் அப்பால் இம்பிரஷனிஸம் என் மனைவிக்குத் தக்காளி ரஸம். அப்பால் ஸிம்பலிஸம் கூபிஸம் ஸர்ரியலிஸம் மீண்டும் வெறும் ரியலிஸம் அப்பால் அதற்கும் அப்பால்? சொல்லும் எட்மண்ட் வில்சன் நீர் சொல்லும் கனிவாய். சொல்லும் மிஸ்டர் பிரிச்செட் நீர் சொல்லும் தயைகூர்ந்து ஸôத்ரேக்கு எக்ஸிஸ் - டென்ஷலிஸம் காமுவுக்கு இன்னொன்று பின்னால் வேறொன்று. காமுவின் விதவைக்கு மற்றொன்று. பிறிதொன்று அவள் அருமைப் பாட்டிக்கு. கரடிக்கு கம்யூனிஸம் கதர்க் குல்லா சோஷலிஸம் டாலர் ஹ÷மனிஸம் பீக்கிங்கு என்ன? சொல்லும் ஏ.ஐ.ஆரே சொல்லும் மிக விரைவாய். நாம எல்லாம், டமில் எழுத்தாளர் நமக்கோ பிளேஜியரிஸம் நன்றி : நடுநிசி நாய்கள் - கவிதைகள் - சுந்தர ராமசாமி - வெளியீடு : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் பி லிமிடெட் -669 கே பி சாலை, நாகர்கோவில் 629001 - பக்கங்கள் : 72 - வி
பத்து கேள்விகள் பத்து பதில்கள் .....10 பாவண்ணன் பேட்டி அளிக்கிறார் இந்தத் தலைப்பில் இதுவரை பாவண்ணனையும் சேர்த்து பத்து  பேர்களை பேட்டி எடுத்துள்ளேன்.  எல்லாம் எளிமையான கேள்விகள் எளிமையான பதில்கள்.  சமீபத்தில் நான் பங்களூர் சென்றேன்.  அங்கு பாவண்ணனை அவர் அலுவலகத்தில் சந்தித்துப் பேட்டி எடுத்தேன். அவர் அலுவலகத்தை ஒட்டி வெளிபுறத்தில் இந்தப் பேட்டி பதிவாகி உள்ளது.  உங்களைப் போன்று நானும் ஆவலுடன் இந்தப் பேட்டியைப் பார்க்க விரும்புகிறேன்.  

ஸ்டால் எண் 12..

ஸ்டால் எண் 12... அழகியசிங்கர் இரண்டு சென்னை புத்தக திருவிழாவிற்கு நான் கொண்டு வந்த புத்தகங்கள் இரண்டு இரும்பு அலமாரிகளில் அடங்கி விட்டன.   மீதமுள்ள ஐந்து அலமாரிகளுக்கு வெளி இடத்திலிருந்து புத்தகங்கள் தேடி வரவேண்டும். எல்லாம் கிடைத்துவிட்டன.  நாங்கள் மூவரும் மூன்று நாற்காலிகளில் உட்கார்ந்து விட்டோம்.  முதலில் காற்றோட்டம் இல்லாத இடத்தில் உட்கார்ந்து கொண்டோம்.  பின் இடத்தை மாற்றிக்கொண்டோம்.  நாங்கள் இருந்த பகுதிக்கு அடுத்து போகிற வழி.  வெளியே போய் விடலாம்.  அந்தத் திறந்த வெளியிலிருந்து காற்று பிரமாதமாக வந்து கொண்டிருந்தது.   நான் அதை பீச் என்று அழைத்தேன். கிருபா செல்போன் போனதுபோல் இன்னும் பலருடைய செல்போன் போய்விட்டன.  அலுவலகத்திலிருந்து செல்போன்களை ஜாக்கிரதையாகப் பாதுகாக்கும்படி எச்சரிக்கை வந்து கொண்டிருந்தன. நாங்கள் மூவரும் ஒரே வயதுக்காரர்கள்.  வேற வேற வங்கியிலிருந்து ஒவ்வொருவரும் ரிட்டையர்டு ஆனவர்கள்.  நான் கொஞ்சம் வயதில் பெரியவன்.  என்றாலும் மதியம் ஒரு மணிக்கு நல்ல வெயிலில் அங்கு வந்து அமரும்போது ஒரு மாதிரியாகத்தான் எனக்கு இருந்தது.  வந்த வேகத்தில் பல ஸ்டால்

ஸ்டால் எண் 12...

அழகியசிங்கர்                                       ஒன்று நடந்து முடிந்த புத்தகக் காட்சியைப் பற்றி நடந்து முடிந்த அடுத்த நாள் சொல்வது சரி என்று தோன்றுகிறது.  சென்னை புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்வது பற்றி விளையாட்டாகத்தான் ஆரம்பித்தது.  போஸ்டல் காலனி வீட்டில் புத்தகத்தை அடுக்கிக் கொண்டிருந்தபோது, கீழே உள்ள குடியிருப்பவர், ஒரு கவரை கொண்டு வந்தார்.  அந்தக் கவரை திறந்து பார்த்தால் சென்னை புத்தகத் திருவிழாவின் விண்ணப்பம்.  ஜøலை 21ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை. அந்தச் சமயத்தில் நானும் என் நண்பர் கிருபானந்தனும் எம்ஜி ஆர் ஜானகி கல்லூரியில் நடந்த 3 நாட்கள் புத்தகக் காட்சியில் கலந்து கொண்டிருந்தோம். அது மோசம்.  இந்தக காலத்து கல்லூரி மாணவிகள் தமிழ் புத்தகங்களை வாங்கிப் படிக்க விரும்புவதில்லை.  வேடிக்கைப் பார்க்க வருகிறார்கள்.  செல்போனை திருகுகிறார்கள்.  கூட்டமாக நின்று காஸ்மாடிக் கடையில் நின்று காஸ்மாடிக் வாங்குகிறார்கள. புத்தகக் கடையில் நிற்கக் கூட இல்லை.  என்ன சொல்கிறார்கள் என்றால் வீட்டில் புத்தகம் வாங்க பணம் கொடுப்பதில்லை என்கிறார்கள்.  உண்மையா என்பது தெரியவி