'உலோக ருசி' - பெருந்தேவி அழகியசிங்கர் சமீபத்தில் நான் படித்தப் புத்தகம் 'உலோக ருசி' என்ற பெருந்தேவியின் கவிதைப் புத்தகம். பொதுவாக நான் கவிதைத் தொகுதியைப் படிக்கும்போது ஒரே அமர்வில் எல்லாவற்றையும் படித்து விடுவேன். ஆனால் சில புத்தகங்களை மட்டும் யோசித்து யோசித்து திரும்பவும் எடுத்து வைத்துக்கொண்டு படிப்பேன். உண்மையைச் சொல்லப் போனால் ஒரு நாவல் படிப்பது, ஒரு சிறுகதையைப் படிப்பது, ஒரு கட்டுரையைப் படிப்பது போல் சுலபமானதல்ல கவிதையைப் படிப்பது. நாவலாகட்டும், சிறுகதை ஆகட்டும், கட்டுரை ஆகட்டும் நம்முடன் உடனடியாக அதன் அடுத்த அடுத்த நிகழ்ச்சிகள் உரையாடிக் கொண்டிருக்கும். ஆனால் 1000 பக்கங்கள் உள்ள மெகா நாவலைப் படிக்க ஞாபக சக்தி அவசியம் தேவை. கவிதையைப் படிப்பதில் வேறு பிரச்சினை வருகிறது. அதாவது ஒவ்வொரு கவிதையைப் படிக்கும்போது ஒரே மாதிரியான தோற்றத்தைத் தருகிறது போல எண்ணம் ஏற்படும். திரும்ப திரும்ப ஒரே விஷயம் போர் என்று கூட தோன்றும். மேலும் நாம் விரும்பும் விஷயத்தை கவிதை எப்போதும் சொல்வதில்லை. நாவலாகட்டும், சிறுகதை ஆகட்டும், கட்டுரை ஆகட்டும் ஒர