தொகுப்பாசிரியர் : வானமாமலை மாரியம்மன் 3 தேசமாளும் முத்தம்மா முத்தாரம்மன் தென் பாண்டி நாட்டில் உழவர் பெரு மக்களால் வணங்கப்படும் தெய்வம். சில சிற்றூர்களில் இவருக்குப் பெரிய கோவிலும், தேரும் திருவிழாவும் உண்டு. இவள் பிறப்பு முத்தாரம்மன வில்லுப்பாட்டில் சொல்லப்படுகிறது. ஏழ் கடலுக்கும், அப்பாலுள்ள, மணி நாகப்புற்றிலுள்ள நாகம் மூன்று முட்டைகளிட்டது. பார்வதியின் அருளால் முட்டைகளிலிருந்து மூன்று பெண்கள் தோன்றினர். அவர்கள் பிரம்ம ராக்குசக்தி, சின்ன முத்தார், பெரிய முத்தார் என்பவர்கள். அவர்கள் மூவரும் தவம் செய்து சக்தி முனியின் அருளால் குழந்தைகள் பெற்றார்கள். அனைவரையும் அழைத்துக் கொண்டுபோய் கயிலையில் சிவபெருமானை வணங்கினர். நாட்டிலுள்ள கொடுமைகளை அழிப்பதற்கு, மூவரும் கொடும் வியாதிகளை வரமாகக் கேட்டார்கள். பிரம்ம ராக்கு - சக்திக்குக் குணமாகாத பல நோய்களையும், சின்ன முத்தாருக்கும், பெரிய முத்தாருக்கும், சின்னம்மை, பெரியம்மை என்ற வியாதிகளையும் கயிலையங் கடவுள் வரமாக அளித்தார். இவ்வாறு கொடிய நோய...