- வைதீஸ்வரன்
--------------
          ஆமையைப் பார்த்தால்
          பொறாமையாக  இருக்கிறது.
           நத்தையைப் பார்த்தால் 
           அதை விட  அசூயை.
          பூமியில்  ஆனந்தமாக  இடம்மாறுகின்றன
          அவைகள்....வீட்டையும்  மூட்டை கட்டிக் கொண்டு.
          ஆறுமாதத்துக்கு  ஒரு முறை 
          விரட்டுகிறான் வீட்டுக் காரன்...
          அடுத்த வீட்டைத் தேடிக் கொண்டு 
           ஓட வேண்டியிருக்கிறது,  பூமியின் ஓரத்துக்கே
           சாமி   ரொம்ப ஓர வஞ்சகன்.
Comments