அழகியசிங்கர்
சமீபத்தில் ஒரு சிற்றிதழை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். அச்சிற்றிதழில் பெரும்பாலான பக்கங்களில் புத்தக மதிப்புரைகள் வெளிவந்திருந்தன. எனக்குத் திகைப்பாக இருந்தது. என் வெளியீடாகக் கொண்டு வந்துள்ள நான்கு கவிதைப் புத்தகங்களுக்கு மதிப்புரை வழங்கியிருந்தார்கள். என் கண்ணை என்னால் நம்ப முடியவில்லை. உண்மைதானா என்று யோசித்தேன். ஆமாம் உண்மைதான். ஏனென்றால், அப் புத்தகங்களை நான் பல பத்திரிகைகளுக்குக் கொண்டு சென்றிருக்கிறேன். அவர்கள் எல்லாம் கண்டுகொள்ளவில்லை. ஒரு சேர எல்லாக் கவிதைப் புத்தகங்களுக்கும் விமர்சனம் வந்தால் நீங்கள் சந்தோஷம் அடைவீர்களா மாட்டீர்களா? ஆனால் எனக்குச் சந்தோஷம் ஏற்படவில்லை. ஏன்? இந்தக் கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கும். அதற்குமுன் இன்னும் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்.
விருட்சம் பத்திரிகை ஆரம்பித்தபோது என் நண்பர் ஒருவர் புத்தக விமர்சனம் அதில் வெளியிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அவரே ஒரு புத்தகத்திற்கு மதிப்புரை எழுதிக்கொடுத்தார். பின் வேறு எழுத்தாள நண்பர்களும் எழுத ஆரம்பித்தார்கள். நானும் எழுத ஆரம்பித்தேன். ஒருமுறை நானும் ஒரு சிறுகதைத் தொகுதிக்கு மதிப்புரையை விருட்சத்தில் பிரசுரம் செய்திருந்தேன். அப் புத்தகத்தை எழுதிய சிறுகதை ஆசிரியர் வங்கியில் பணி புரிபவர். அவரை பீச் ரயில்வே ஸ்டேஷனலில் தற்செயலாகச் சந்தித்தேன். அவர் என்னை டீ சாப்பிடக் கூப்பிட்டார். ஒரு ஹோட்டலுக்குச் சென்றோம்.
"யாரது அந்த ஹரிஹரன்?" என்று கேட்டார் அந்த ஆசிரியர். விருட்சத்தில் நான் அந்தப் பெயரில்தான் எழுதியிருந்தேன்.
"யாரோ? என்ன விஷயம் சொல்லுங்கள்?" என்று கேட்டேன்.
திடீரென்று அந்தக் கதை ஆசிரியர் குரலை உயர்த்தி, "அவனை செருப்பால அடிப்பேன்," என்று கத்தினார். கேட்கும்போது எனக்குத் திகைப்பாக இருந்தது.
உடனே அவர் வைத்திருந்த சூட்கேûஸத் திறந்து, சில கடிதங்களை எடுத்துக் காட்டினார். அக் கடிதங்கள் குமுதம், ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகளில் வந்திருந்தன.
"விருட்சத்தை எத்தனைப் பேர் படிப்பாங்க? இதப் பாருங்க இந்தக் கடிதங்களை. என்னிடம் கதை கேட்டு கடிதங்கள் எழுதியிருக்காங்க.... என் மதிப்பு தெரியுமா உங்களுக்கு... நூறு பேர் கூட படிக்காத பத்திரிகையில் விமர்சனமா எழுதியிருக்கீங்க.." என்று சத்தம் போட்டார். இப்படி அவர் கத்தும்போது அவருடைய கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. மெதுவாக அவரை சமாதானப்படுத்தினேன். ரயிலில் நானும் அவரும் வந்து கொண்டிருக்கும்போது, அவர் அசோகமித்திரனை விட சிறந்த எழுத்தாளர் என்ற ரீதியில் பேசிக்கொண்டு வந்தார். நான் எதுவும் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தேன்.
இந்த அனுபவத்தை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், 4 கவிதைத் தொகுதிகளுக்கு மதிப்புரை வழங்கிய சிறுபத்திரிகையைப் பார்த்து என்னால் சந்தோஷப்பட முடியவில்லை என்பதற்காகத்தான். மேலே குறிப்பிட்டபடி அந்த நாலு புத்தகங்களும் கவிதைப் புத்தகங்கள். அப் புத்தகங்களில் என் கவிதைப் புத்தகத்தைத் தவிர எல்லா புத்தகங்களுக்கும் மதிப்புரை எழுதப்பட்டிருந்தது. என் கவிதைப் புத்தகத்திற்கு ஏன் மதிப்புரை எழுதவில்லை என்றால், நான் பத்திரிகை ஆசிரியர் அதனால் மனசு புண்படுத்த வேண்டாமென்று விட்டிருப்பார்கள். அல்லது என் பத்திரிகையில் விமர்சனம் பார்த்துவிட்டு எதாவது எழுதிவிடுவேனென்று பயந்திருக்கலாம். அல்லது என் தயவு தேவைப்படலாமென்று நினைத்திருக்கலாம். அப் புத்தகங்களுக்கெல்லாம் மதிப்புரை வழங்கியவர்களை எனக்கு நன்றாகத் தெரியும். விருட்சத்தில் கவிதைகள் எழுதியவர்கள்தான் அவர்கள்.
அதில் எழுதிய ஒவ்வொருவரும் இரண்டு மூன்று புத்தகங்களுக்கு மதிப்புரை வழங்கியிருக்கிறார்கள். விருட்சம் வெளியீடு தவிர வேறு புத்தகங்களுக்கும் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள். அப்படி வேறு புத்தகங்களுக்கு மதிப்புரை வழங்கும்போது அப்புத்தகங்களை பாராட்டி எழுதியிருக்கிறார். உதாராணமாக ஒரு வரியை இங்கு படிக்கிறேன்.
'பல மலைகள் கடந்து பயண முடியில் எனக்குள் பாயும் ஆறு' என்ற வரிகளின் வழியான உணர்வு வெளிப்பாடு என்னைப் பிரமிக்க வைத்தது.. இன்னொரு வரி.
'தொடர்ந்து கவிதைகளை வாசிக்க þ சுகிக்கத் தொடங்கியது.'
அதே என்னுடைய வெளியீடுகளைப் பற்றி அவர் குறிப்பிடும்போது, கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்கியிருக்கிறார்.
'இன்றைய நவீன கவிதையானது, இன்றைய வாழ்க்கையின் துயரத்தையும், சலிப்பையும் அப்படியே பதிவு செய்யாமல், சுயப்பச்சாதாபத்தையும் உருவாக்காமல், கலையை ஓவியத்தை உருவாக்கும் மனோபாவத்தைக் கொண்டதாக வெளிப்படுத்துவதாக இருக்கிறது...
'கவிதை எந்திரத்ó தன்மை சிறுபத்திரிகைகளிடம் இருப்பதில்லை. சிறுபத்திரிகையில் கவிதை எழுத பயின்றுவரும் கவிஞர்கள் (?) பலர் பொழுதுபோக்கு இதழ்களில் எந்திரர்களாகி வருகின்றனர். ஆக லாவண்யாவின் கவிதைகள் மதில்மேல் பூனையாக நின்று கொண்டிருக்கின்றன.
ஞானக்கூத்தன் கவிதைகளைக் குறித்துக் குறிப்பிடும்போது, ஞாகூ மேற்புறத்தில் நிற்க, விஷயத்ததை அகவயமாய் புரிந்துகொள்கிற ஆத்மாநாம் அடுத்தத் தளத்திற்கு நகர்கிறார்.
இவர் இன்னொரு புத்தகத்திற்கு எழுதிய மதிப்புரையைப் பாருங்கள். அவர் விருட்சம் புத்தகங்களுக்கு எழுதுவதுபோல் எழுதினால் தொலைத்துக்கட்டிவிடுவார்கள் என்ற பயத்தில் எழுதியது போல் தோன்றுகிறது.
அக்காலத்தில் நான் போர்ஹேயின் கவிதைகளைப் படித்துக்கொண்டிருந்தேன். தீராக் காதல் என்ற தலைப்பிலான இவரின் கவிதைகளின் வரிகளாக கண்ணாடி நீலச் சொரூபமாய்த் தளும்ப ஆரம்பித்தது என்ற வரி போர்ஹேயின் பட்ங் ஸ்ண்ர்ப்ண்ய் ங்ழ்ழ்ங்ஸ்ரீற் ண்ய்ற்ர் ற்ட்ங் க்ஷப்ன்ங் என்ற வரியை நினைவுப் படுத்தியது. இவ்வரியை போர்ஹேயின் வரிக்கு இணையானதாகவே கருதுகிறேன். இதுபோன்று நம் நந்தவனங்கள் கடலில் அமிழ்ந்து விட்டன, ஒரு பறவையின் முணுமுணுப்புக்கும் நான் உதிர்க்கும் சாம்பலும் விழுந்து கொண்டிருக்கிறது. ஒரு மாபெரும் ஆஷ்ட்ரேக்குள் என்ற வரிகள் என்னை உற்சாகப்படுத்தின..
பாருங்கள் எப்படியெல்லாம் புகழ்ந்து எழுதியிருக்கிறார். இன்னும் அவர் எழுதியதை இங்கு தருகிறேன்.
இவருடைய தொகுப்பை வாசித்தபோது சில விஷயங்கள் தெரியவந்தன. தனக்கான பிரத்யோக மொழியையும், வடிவத்தையும், ஆளுமையையும், சொல்லல் முறையையும் அவர் பெற்றிருப்பதை - அவரின் கவிதைகள் வழியாக வெளிப்படுகின்றன. இவர் கவிதைகளை வாசிக்கும்போது போதைத் தன்மையும், வசீகரமும் தொடர்ந்து இயங்குவதை உணருகிறேன்.
மேலே குறிப்பிட்டவைகளை அவர் விருட்சம் வழங்கிய நான்கு கவிதைத் தொகுதிகளுக்கு எழுதவில்லை. ஆனால் விருட்சம் அல்லாத வேறுபுத்தகங்களுக்கு அவர் எழுதி உள்ளார்.
இப்படி அவர் சொன்ன விஷயங்களை எடுத்துக்கொண்டு மகுடேசுவரனின் சமீபத்தில் வந்த கவிதைத் தொகுதியைக் குறித்து இப்படி எழுதலாம்.
==இக் கவிதைகளில் நிலவும் மொழித் தளத்தையும் இங்கு சொல்ல வேண்டியிருக்கிறது. அவருடைய பிரத்யேக மனோ நிலைபடியே கவிதையின் மொழி þ இன்று இருக்கிறது. கவிதையின் ஊடாகச் சலனத்தை உருவாக்குபவை என பலவரிகளைக் கோடிட்டுக் காட்டலாம்.
மேலே குறிப்பிட்ட வரிகளை நான்சொன்ன மதிப்புரையாளர் எழுதியவை. இது பொதுவான வரிகள். இந்த வரிகளை நான் மகுடேசுவரன் கவிதைகளுக்கு எழுதுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். மகுடேசுவரன் மகிழ்ந்து விடுவார். நான் வேறுமாதிரியாகவும் எழுத முடியும்? மகுடேசுவரன் தொகுதியைக் கவிழ்க்க.
இதிலிருந்து என்ன தெரிகிறது? கவிதையைக் குறித்து எழுதப்படுகிற பெரும்பாலான மதிப்புரைகள், மதிப்புரையாளர்களின் விருப்பு வெறுப்புகளுடன், அரசியல்தனத்துடன்தான் செயல்படுகின்றன.
இந்த மதிப்புரைகளைக் குறித்து அடிப்படையான சில கேள்விகளை எழுப்பலாமென்று நினைக்கிறேன். கவிதையைக் குறித்தோ, சிறுகதைத் தொகுதியைக் குறித்தோ, நாவலைக் குறித்தோ எழுதுகிற மதிப்புரையாளர்களுக்கு எந்த விதமான அருகதை அதை எழுத இருக்கிறது. உதாரணமாக கவிதை, கதை எழுதத்தெரியாத ஒருவர் ஒரு படைப்பாக்கத்திற்கு மதிப்புரை வழங்க முடியுமா? வழங்க முடியும் என்று தோன்றுகிறது. கவிதை, சிறுகதை எழுத வராதவர்கள்கூட விமர்சனம் செய்யலாம். ஆனால், ஆழ்ந்த படிப்பு அவசியம் வேண்டும். கவிதைகள் குறித்தும், சிறுகதைகள் குறித்தும் தீர்மான அபிப்பிராயங்கள் இருக்க வேண்டும்.
நம்மில் பெரும்பாலோருக்கு அந்த மாதிரியான திறமையே இல்லாமல் புத்தகங்களை மேலோட்டமாகப் பார்த்து மதிப்புரை எழுதுவதாகத் தோன்றுகிறது.
Comments
வணக்கமுடன் உறரணி. வெகு நாட்களாகிவிட்டது உங்களுடன் தொடர்பு கொண்டு.
மதிப்புரைகள் மதிப்புரையாளர்களின் சுயவிருப்பு அரசியல்தனத்துடன் வருவது என்பது உண்மைதான். ஆனாலும் சிற்றிதழ்களில் சரியான மதிப்புரைகள் அதிகமும வருவதெனப்தும் உண்மை. தங்களைப் பாதித்த படைப்புக்களைப் பற்றிப் பகிர்ந்துகொள்கிற நிலையில் அனுப்பப்படும் கருத்துக்கள் மதிப்புரைகளாக இடம்பெற்றுவிடும் சூழலும் உண்டு.
இந்த மதிப்புரைகள் பற்றி ஒரு மதிப்புரை நுர்லாக எழுதவேண்டும் போலிருக்கிறது.
சந்திப்போம்.