1.
நான் பஸ்ஸில்
வந்து கொண்டிருந்தேன்
இருக்கை எதுவும் தட்டுப்படவில்லை
பஸ்
ஊர்ந்து ஊர்ந்து
சென்று கொண்டிருந்தது
பல ஊர்களைத் தாண்டியது
பல மனிதர்களைச் சுமந்து சென்றது
வயல்களைத் தாண்டியது
உயரமான மரங்களைத் தாண்டியது
கூட்ட நெரிசலில்
ஒழுங்கற்ற சப்தம் பஸ்ஸில்
சுழன்றபடி சென்றது
ஊர்ந்து ஊர்ந்து
பஸ் நகர்கிறது
நான்
பஸ்ஸில்
பயணித்துக்கொண்டிருக்கிறேன்.
2.
இந்த இடத்திற்கு
நான் வருவதற்கு முன்
இந்த இடம்தானா
என்று எனக்குத் தெரியாது.
Comments
நான் வருவதற்கு முன்
இந்த இடம்தானா
என்று எனக்குத் தெரியாது//
பயணத்தின் வழியே அடைய நேரும் சூழலை வெகு நிதானமாக இழைப் பிரிக்கப் பழக்குகிறது இவ்வரிகள்..
அப்படியே வாழ்வின் நிழல் பகுதியையும் விசாரிக்கும்படித் தூண்டுகிறது..
மிகவும் பிடித்திருந்தது..