Skip to main content

அறியாப் பிறவி

நான் கோபக்காரன்

கொலைகாரன்

காட்டுச் சிங்கமென்று

எனது கவிதை

நாயகனுக்குத் தெரியாது.


அப்பாவியாய்

அபகரிக்க வல்லவனாய்

எண்ணி என்னை

அன்றாடம் அலைக்கழிக்கும்

சூன்யக்காரனான

அவனறிய மாட்டான்

நான் அவனை

அவ்வப்போது எழுத்தால்

கண்டந்துண்டமாய்

வெட்டிப் பிளப்பதை.


பாவம் அவன்

என் கவிதைகளைப்

படிப்பதில்லை.

கவிதைகளும்

அவனுக்குப் பிடிப்பதில்லை.

Comments

கடைசி பத்தி மிகவும் அருமை. நல்ல கவிதை.