Skip to main content

ஊழிக் காலம்


காய்ந்துபோன ஏரிகளில்

காலம் தன்முகம் பார்த்துக் கொண்டது

சுருக்கங்களின்றி

பருவம் பூரித்துச் செழித்த தன்

முன்பொரு யுகத்தின் யௌவனம் பற்றி

பார்த்திருந்த வானத்திடம்

தன் முறைப்பாட்டையும் நெடுமூச்சையும்

ஒருசேரக் கொடுத்தது

எதையும் கண்டுகொள்ளாச் சூரியன்

வழமைபோலவே

காற்றைச்சுட்டெரித்தது

இருக்கும் விருட்சங்களை வெட்டியபடியும்

பிளாஸ்டிக் குப்பைகளைப் புதைத்தபடியும்

எதுவுமே செய்யாதவன் போல

முகம்துடைத்துப் போகிறேன் நான்

உங்களைப் போலவே வெகு இயல்பாக

-


Comments

Chandran Rama said…
I love this poem.... its contents touched my heart.. maybe because it spoke the truth..!!
மிக அருமை
அன்பின் ஆறுமுகம், உழவன்,

கருத்துக்கு நன்றி நண்பர்களே !
sivakumar said…
மிக அருமை...

அனைத்தையும் கொன்ரூ விட்டு
இயல்பாய் இருக்கும் எனக்கும் புரிகிரது
உங்கல் விசனம்

-சிவகுமார்