Skip to main content

ஒரு கவிதை






சைக் கருவி செய்திருக்கும்
மரத்தில் மீதமிருக்கும் பறவையின் பாடல்
கேட்கும் ப்ளுட்டோ இரவில்

சோதனைக் குழாய் குழந்தையின்
இதயம் துடிக்கத் துவங்குகிறது

அலை
தோலுரிக்கும்
கடல் அரவத்துடன்

கனவுகள் தோறும்
அலைந்து கொண்டிருக்கிறது
உடல் கொள்ளத் துவங்கும் உயிர்

முயலின் காதுகளாய் வளர்ந்து கொண்டிருக்கிறது
பற்றிக் கைக்கொள்ள யேதுவாய்

கடல் தாவரத்தின் சுவாசம்
மீளுருக் கொள்ளுதல்

Comments

அன்புள்ள அழகியசிங்கர் அய்யா,

மிக்க நன்றி, மிகவும் மகிழ்ச்சியாய் உணர்கிறேன்

எனது கவிதையை தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் நன்றி.

சக படைப்பாளிகளுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் நேசன் சார்!
Chandran Rama said…
அலை
தோலுரிக்கும்
கடல் அரவத்துடன்

fantastic metaphor...
congrats..

keep writing...
all the best Nesamithran
//அலை
தோலுரிக்கும்
கடல் அரவத்துடன்

ரசித்தேன். வாழ்த்துக்கள் நேசமித்ரன்.