Skip to main content

கே.பாலமுருகன் கவிதைகள்





1
முன்பொரு சமயத்தில்
நான் பார்த்து வளர்ந்த
காமம் ஒன்று
சில குட்டி பூதங்களாகவும்
சில கடவுள்களாகவும்
வாழ்ந்து கொண்டிருந்தன

2
சுயம் என்றேன்
இல்லை ஆக்கம் என்றான்
சுயம் என்றேன்
மீண்டும் கண்களை உருட்டி
நாக்கை நீட்டி
‘ஆக்கம்’ என்று
அழுத்திச் சொன்னான்

3
கண்டடைந்த பிறகு
தேடலும்
சோர்வாகிவிடுகிறது.
கண்டடைவதில் ஏன்
இவ்வளவு தேக்கம்?

4
பிட்டத்தையெல்லாம்
அடுக்கி வைத்து

அழகு பார்த்தேன்.
வெறும் குசுவிட்டு
எல்லாவற்றையும்
கெடுத்துக் கொண்டன
பிட்டங்கள்.

5
நீர் கசியும்
பாகங்களையெல்லாம்
சரிப்பார்த்துக் கொண்டேன்.
வழுக்கி விழுந்த
அண்டத்தில் பிறப்பில்
நீரில்லாமல்
ஏது சாத்தியம்.


6
என்னுடன் பழகி
விளையாடி
வளர்ந்த குட்டி பேயொன்று
என்னையறியாமல் துடிக்க
வளர, விரைக்க, நீள,
கசிய, முட்ட
தொடங்கின.

7
நிற்க
சரி நடக்கலாம்
மீண்டும் நிற்க
சரியாமல் நடக்கலாம்.
எல்லாம் ஒழுங்கு.

8
பட்டாம்பூச்சியைப்
பறக்கவிட்டது போதும்
போர்க்களத்திற்கு வாரும்.

9
தற்செயலாக
வயிறு கிழிந்து தொங்கியபோது
தெரிந்துவிட்டது
வயிற்றெரிச்சல்.

Comments

anujanya said…
எல்லாமே நல்லா வந்திருக்கு. எனக்கு, ஒன்று, ஆறு, எட்டு எண்களிட்ட கவிதைகள் மிகப் பிடித்தன

அனுஜன்யா
Unknown said…
முதல் கவிதையின் முடிவில்
'கொண்டிருக்கின்றன' என்றிருக்க
வேண்டுமோ?
நல்லா வந்திருக்கு. எனக்கு, ஒன்று, ஆறு, எட்டு ஒன்பது, எண்களிட்ட கவிதைகள் பிடித்திருந்தன.
Unknown said…
சூப்பர் கவிதைகள்.
The last one is superb..
I have added it to the படித்தது / பிடித்தது series in my website:
http://www.writercsk.com/2009/08/61.html