Skip to main content

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......




பாவண்ணன்



பூனை


காவல் பலிக்கவில்லை


தினமும் பால்திருட்



எதேச்சையாய்ப் பார்த்ததும் நின்று முறைக்கிறாய்


முன்வைக்கவோ


பின்வைக்கவோ


உனது தந்திரம் புரியவில்லை



துடிக்கும் மீசையில் கர்வம்


கண்களில் கவியும் குரூரம்


உடம்பில் புரளும் முறுக்கு


உன் கண்களுக்கு எதுவாய்த் தெரிகிறேன் நான்


எலியாகவா


எதிரியாகவா


@@


சாத்திய ஜன்னல்கள் நடுவில்


கசியும் உன்குரல் இரக்கம் மிக்கது


சோறு உனக்குப் பிடிப்பதில்லை


கறி நான் சமைப்பதில்லை



குழந்தையிருக்கும் வீடு


பால் மிஞ்சினாலும் கொடுப்பதற்கில்லை


நேற்றுவரைக்கும் உன் திருட்டின் ஆட்டத்தால்


எச்சரிக்கையானது வீடு


இன்றுமுதல்


இன்னொரு வீட்டுக்குத் திருடப்போ


@@


எச்சில் மீன் தலையைத் துப்ப


என் வாசலா கிடைத்தது


அதட்டலின் அர்த்தம் குழப்பிவிட்டது


உன் நகங்களின் ஆத்திரப்பதிவில்


பாதத்தில் கசியும் ரத்தக்கோடுகள்


என்ன புரிந்து எகிறினாய்


உன் மீன் எனக்கு இரையாகுமா


என் வாசல் தூய்மை தவறாகுமா


Comments

selventhiran said…
இரண்டு வருடங்களாக வலையில் இயங்கியும், இந்த அருமையான வலைப்பதிவை இன்றுதான் கண்டுகொண்டேன் என்பது மெல்லிய அவமானத்தைக் கொடுக்கிறது.