Skip to main content

Posts

Showing posts from April, 2021

49வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 01.05.2021 அன்று சனிக்கிழûமை மாலை 6.30 மணிக்கு.

அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 49வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு ( 01.05.2021) நடைபெற உள்ளது. இந்த வாரம் கவிதையைக் குறித்து உரையாடல் நிகழ்த்த உள்ளேன். கவிதையைக் குறித்து பல கேள்விகள் எழுப்பப்படும். அக் கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டும். 2 நிமிடங்களுக்குள் பதில்கள் கூற வேண்டும். எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 49வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி Time: May 1, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/86461243499?pwd=aVIxS050aktJR3hiNStwWXJGRjNCUT09 Meeting ID: 864 6124 3499 Passcode: 303904

என் ஞாபகத்திலிருந்து பெ.சு மணி..

துளி - 191 அழகியசிங்கர் நாங்களிருந்த எதிர் தெருவில்தான் பெ.சு.மணியின் வீடு.  பெரும்பாலும் தெருவில்தான் அவரைச் சந்திப்பேன்.  இன்று மாலை 4 மணிக்கு அவர் இறந்து  விட்டதாகச்  செய்தி வந்தது.  முகநூலில்  அவர் மனைவி உயிரோடு இருந்தபோது அவருடைய சென்னை வாழ்க்கை சிறப்பாகப் போய்க் கொண்டிருந்தது.  அவர் மனைவி இறந்தவுடன் அவர் பாடு திண்டாட்டமாகப் போய் விட்டது.   அவருடைய மூத்தப் பெண்  தில்லியிலும் , இரண்டாவது பெண்  பெங்களூரில்  வசிக்கிறார்கள் . இவர் தனியாக இருக்கிறேன் என்று  சென்னையில் இருந்தார் .  அவர்களுக்கு இவரைத் தனியாக இங்கு விட விருப்பமில்லை. பல மாதங்கள் இவர் சென்னையிலும், மற்ற இடங்களிலும் வசித்து வந்தார். சென்னையில் இருக்கும்போது அவருக்கு மனைவியின் நினைவுதான்.  அவருடைய ஆசை எப்படியாவது 100 புத்தகங்கள் எழுத வேண்டும் என்பது. நான் அவருக்காக  அவருடைய  மூதாதையர் கொண்டு வந்த  சம்ஸ்கிரதப்  புத்தகம் கொண்டு வந்தேன்.  அது சாத்தியமே இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்தார்.  அந்தப் புத்தகம் அச்சானது...

விளம்பர காக்கைகள்..

  துளி - 190    அழகியசிங்கர்           ஒரு காலத்தில் எனக்கு நண்பர்களாக இருந்தவர்கள்தான் இப்போது விரோதிகளாக மாறி விடுகிறார்களோ என்று தோன்றுகிறது.  இது இயல்பு. நேற்று (25.04.2021)  குவிகம்  இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.  திருப்பூர் கிருஷ்ணன் உரை.  தி.  ஜானகிராமன்  பற்றி அவர் பேசினார். ஜானகிராமனை  நேரிடையாகவும், படைப்புகள் மூலமாகவும் அறிந்தவர்.  அக் கூட்டத்திற்கு  ஜானகிராமன்  பெண் உமா சங்கரி வந்திருந்தார். வழக்கம்போல் திருப்பூர் கிருஷ்ணன் சிறப்பாகவே பேசினார்.  ஆனால் ஒரு நல்ல கூட்டம் நடைபெறும்போது திருஷ்டியாக எதாவது நடந்து விடும். கல்யாணராமன் என்கிற கல்லூரி முதல்வருக்குக் கருத்துச் சொல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது.  அவர் மூன்று கருத்துக்களைக் கூறினார். ஒரு  பொதுவான இடத்தில் பேராசிரியருக்கு எப்படிப் பேச வேண்டுமென்று தெரியவில்லை.  மாணவராக இருந்தபோது தன் கவிதை,  கதைகயை  விருட்சம் இதழில் பிரசுரம் செய்வதற்கு இவரும் இவர் நண்பர்களும் என் இருப்பிடத்திற்கு வருவ...

48வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 24.04.2021

  48வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 24.04.2021 அன்று சனிக்கிழûமை 6.30 மணிக்கு இனிதாக நடந்து முடிந்தது. அழகியசிங்கர் கலந்துகொண்டவர்கள் மொழிபெயர்ப்பு கவிதைகளை வாசித்தார்கள். அந் நிகழ்ச்சியின் ஒளிப்பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்குப் பெருமை படுகிறேன்.

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் பத்தாவது கதை வாசிக்கும் நிகழ்ச்சி

 அழகியசிங்கர் லா.ச.ரா குறித்து பத்தாவது கதை வாசிக்கும் கூட்டம் 23.04.2021 அன்று நடந்தது.  15 பேர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.  அதன் ஒளிப்பதிவை இங்கே பகிர்கிறேன்.   

இன்று உலகப் புத்தகத் தினம்

துளி - 189 அழகியசிங்கர் இன்று உலகப் புத்தகத் தினம். நான் தினமும் 2 சிறுகதைகள் சில கவிதைகள் வாசிப்பது வழக்கம். உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு லாசராவின் கதைகளை எல்லாம் வாசிக்கலாமென்று நினைக்கிறேன். உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளேன். அது ஒரு சிறுகதைத் தொகுப்பு. ரஸவாதி கதைகள் என்ற தொகுப்பு. 447 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் 37 கதைகள் உள்ளன. விலை ரூ.400. உலகப் புத்தகத் தினத்தை ஒட்டி சலுகை விலையாக ரூ.350க்கு இந்தப் புத்தகம் கிடைக்கும். தபால் செலவு இலவசம். இந்த மாதம் முழுவதும் இந்தச் சலுகை. பிரதி வேண்டுபவர் கீழ்காணும் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்துவிட்டு முகவரியை அனுப்பவும். NAVINA VIRUTCHAM OD Account NUMBER 462584636, IDIB000A031 INDIAN BANK, Ashoknagar Branch 1 Chandramouli Azhagiyasingar

48வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 24.04.2021 அன்று சனிக்கிழமைûமை 6.30 மணிக்கு.

  22.04.2021 48வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 24.04.2021 அன்று சனிக்கிழமைûமை 6.30 மணிக்கு. அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 48வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 24.04.2021 நடைபெற உள்ளது. நிகழ்ச்சியைச் சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.இந்த முறை மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன். தமிழில் ஏகப்பட்ட மொழிபெயர்ப்புக் கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன. அதுமாதிரியான கவிதைகளை வாசிப்பது நம்முடைய கவிதை பற்றிய அறிவை மேன்மைப் படுத்தும். எல்லோரையும் அழைக்கிறேன். புதிதாக இந்தக் குழுவில் வாசிக்க வருபவர்கள் தங்கள் கவிதைகளை வாசிக்கலாம். அவர்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு. Topic: 48வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி Time: Apr 24, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/82205545011?pwd=N1lSRlNzL3JZM3VLOGx1dldzYjZlQT09 Meeting ID: 822 0554 5011 Passcode: 029460

ஜெயமோகனின் பிறந்ததினம் இன்று

  துளி - 188 ஜெயமோகனின் பிறந்ததினம் இன்று அழகியசிங்கர் லக்ஷ்மி மணிவண்ணன் முகநூலில் பதிவு செய்ததைப் படித்தேன். இன்று ஜெயமோகன் பிறந்தநாள். அவருக்கு என் வாழ்த்துகள். தமிழ் எழுத்தாளர்களிடையே வித்தியாசமானவர் ஜெயமோகன். விஷ்ணுபுரம் என்ற அமைப்பின் மூலம் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கௌரவித்துப் பரிசு கொடுக்கிறார். இதை விளம்பரப்படுத்துவதற்காக அவர் செய்வதில்லை. ஒரு முறை தேவதச்சனுக்குப் பரிசளிக்கும் விழாவிற்குப் போயிருந்தேன். எழுத்தாளர்களைக் கொண்டாடுதல் என்பதை நேரில் கண்டு கொண்டேன். சதா எழுத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பவர். அவர் மகாபாரதத் தொடரை எழுதிக்கொண்டிருந்தபோது அவர் பெயரிட்டு ஒரு கவிதை எழுதினேன். கவிதையின் தலைப்பு: ஜெயமோகன். ஜெயமோகன் ஆயிரக்கணக்கான பக்கங்களில் மஹாபாரதம் எழுதிக்கொண்டே போகிறார் படிக்கப் படிக்க வளர்ந்துகொண்டே போகிறது எது மாதிரியான எழுத்தாளர் இவர் எப்படியெல்லாமோ யோசனை செய்கிறார் என்பது ஆச்சரியம்தான் எழுத்து அவரை எழுதிக்கொண்டே போகிறதா ஆனால் என்ன செய்வது அவர் எழுதும் வேகத்திற்கு என்னால் படிக்க முடியவில்லையே....... துளி - 188 ஜெயமோகனின்...

ஒரு கதை ஒரு கருத்து

பி.எஸ் ராமையாவின் ‘மலரும் மணமும்’ அழகியசிங்கர் நான் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். புத்தகம் பெயர் ராமையாவின் சிறுகதை பாணி. இதை எழுதியவர் சி.சு செல்லப்பா. சி.சு செல்லப்பா ராமையாவை தன் குருநாதராக ஏற்றுக் கொண்டிருந்தார். சி.சு.செல்லப்பா சொல்கிறார்: பாரதி மகாகவி என்றால் ராமையா மகா கதைஞன். அவரை போன்ற மேதைப் படைப்பாளிகள்தான் எதிர்கால இலக்கியத்துக்குத் தேவை. ராமையாவின் கதையான ‘மலரும் மணமும்’ கதையைப் படித்துப்பார்த்தேன். சி சு செல்லப்பா அப்படிக் கூறுவதில் எந்தத் தவறும் இல்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது. பொதுவாக ஒரு கதையைப் படிக்கும்போது நாம் கதையைப் படிக்கிறோம் என்ற நினைப்பு நமக்கு வரக்கூடாது என்று நினைப்பவன் நான். இந்தக் கதையைப் படிக்கும்போது அதுமாதிரியான எண்ணம் நமக்கு ஏற்படாமலிருக்காது. கதையில் நாலைந்து பாத்திரங்கள்தான். சானுப்பாட்டி, செல்லம், ராமதாஸ், ராமதாஸ் அப்பா. செல்லம் அவளுடைய மாமா பையன் ராமதாஸ் மீது அளவு கடந்த பிரியம். ‘கடைசி கட்டி மாம்பழம் யாருக்கு?’ என்று கேட்கிறாள் சானுப்பாட்டி...