Skip to main content

Posts

Showing posts from 2020

சத்குரு ஸ்ரீ ரமண மகரிஷி அவதரித்த தினம்..

  30.12.2020 துளி : 167  அழகியசிங்கர் இன்று ரமண மகரிஷி அவதரித்த தினம்.  கடந்த சில  நாட்களாகச்  'சரிதமும் உபதேசமும்' என்ற புத்தகத்தின் 3வது பாகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.   கோயிலுக்குப் போய்  கடவுளைக்  கும்பிடுவதை விட  ஆன்மிகமாகச்  செல்வதை நான் விரும்புவேன். அதனால் ரமணர், (அரவிந்தர் எனக்குப் புரியாது) ஆனால் அன்னையைப் புரியும்) ஜே கிருஷ்ணமூர்த்தி, யூ ஜி கிருஷ்ணமூர்த்தி,  சீருடி  சாய்பாபா,  நிசகர்தத்தா   மஹாராஜ் , ஓஷோ என்றெல்லாம் ஆன்மிகவாதிகளை நம்புவேன். அவர்கள் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பது, அவர்கள் சொன்ன தத்துவங்களைக் கேட்பது என் வழக்கம்.   அவர்களைப் படிப்பதால் அரிய ஆன்மிகத் தகவல்கள் கிடைக்குமா என்று பார்ப்பேன்.   அதனால்தான் ஒரு கதைப் புத்தகத்தைப் படிப்பதை விட இதைப் படிப்பதில் விருப்பப்படுவேன். என்னிடம் ஏராளமான ஆன்மிகப் புத்தகங்கள்.  மனம் சோர்வாக இருக்கும்போது இந்தப் புத்தகங்களைப் படிக்கும்போது உற்சாகமாகிவிடுவேன். அவர்களைப் பற்றி எழுதப்படுகிற தகவல்களை நான் நம்புகிறேனோ இல்ல...

துளி : 166

ரஜினி பயந்துவிட்டார் அழகியசிங்கர் நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் நடிகர்களில் ரஜினிகாந்த் ஒருவர். அவர் முன்பே அரசியலுக்கு வந்திக்க வேண்டியவர். ஏன் தயங்கினார் என்பது தெரியவில்லை? நடிகர் விஜயகாந்த் துணிச்சல் அவருக்கு இல்லை. உடம்பு சரியில்லை என்ற காரணத்தைக் கூறி அவர் அரசியலை விட்டு விலகிவிட்டார். ஆனால் தமிழகத்தில் அவர் அரசியல் பிரவேசத்தால் ஒரு பெரிய மாற்றம் கிடைத்திருக்க வேண்டியதை அவர் வேண்டாமென்று உதறி விட்டார். உண்மையில் இரண்டு கழக ஆட்சிகளிலிருந்து மக்கள் விடுபட வேண்டுமென்று எல்லோரும் நினைக்கிறார்கள். அந்த மாற்றத்தை யார் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளலாமென்று தோன்றுகிறது. அதற்கு வழியில்லாமல் போய்விட்டது. ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் நேரிடையாக மக்களைச் சந்தித்திருக்க வேண்டாம். தொற்றுப் பயத்தால் அதைக்கூட மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள். எலக்டிரானிக் வழியாக அவர் கூட்டம் நடத்தியிருக்கலாம். மக்களை நேரிடையாக சந்தித்திருக்க வேண்டாம். அவர் என்ன சொல்ல வருகிறாரோ அதை மற்றவர்கள் மூலம் சொல்லியிருக்கலாம். ஏன் இப்படி அவசரப்பட்டு ஒரு முடிவை வெளிப்படுத்தினார் என்று தெரியவில்லை. அவர் கூப்பிட்ட க...

சூம் மூலமாக 32வது கவிதை வாசிக்கும் நிகழ்ச்சி

 அழகியசிங்கர் 01.01.2020(வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு  சூம்  மூலமாக 32வது கவிதை வாசிப்புக் கூட்டத்திற்கு எல்லோரையும் அழைக்கிறேன். கவிதைகள்  வாசித்துச்   சிறப்புச்  செய்யும்படி.  புத்தாண்டு தினத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எது மாதிரியான வகைகளிலும் கவிதைகள் வாசிக்கலாம்.  2 முதல் 3 நிமிடங்களுக்குள் கவிதை வாசிக்கலாம்.  இக் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளர் யாருமில்லை. ஒவ்வொரு வாரமும் கடவுள் வாழ்த்து குறிப்பிடுவதுபோல் விருட்சம் இதழில் வெளிவந்த கவிதை வாசிக்கப்படும்.  ஒரே ஒரு கவிதை  வாசித்தபிறகு  கவி அரங்கம் தொடங்கும்.  புத்தாண்டு தினத்தை ஒட்டி புத்தாண்டை வரவேற்று கவிதைகள் வாசிக்கலாம் கவிதை மீது ஆர்வமுள்ளவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் இது.  யார் வேண்டுமானாலும் எந்தக் கவிதையும் வாசிக்கலாம்.  உங்கள் கவிதை மட்டுமல்ல.  மொழிபெயர்ப்பு கவிதைகளும் வாசிக்கலாம்.  ஆனால் ஏற்கனவே வாசித்த  கவிதைகளைத்  திரும்பவும் வாசிக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன் கூட்டத்தில் கலந்து  கொள்பவர்கள் ...

ஒரு கதை ஒரு கருத்து - 7

. அழகிரிசாமியின் கல்யாண கிருஷ்ணன் அழகியசிங்கர் அழகிரிசாமியின் நகைச்சுவை கதை. ஒரு நகைச்சுவை கதையை எழுதும்போது படிப்பவருக்கு அது நகைச்சுவை கதை என்ற உணர்வே ஏற்படக்கூடாது. பலர் நகைச்சுவை கதையைச் சொல்லும்போது தேவையில்லாததை நகைச்சுவை என்ற பெயரில் சேர்த்து துணுக்குத் தோரணமாக மாற்றி கதையைப் பலர் வீணாக்கி விடுவார்கள். கு.அழகிரிசாமி இயல்பாகக் கதையைச் சொல்லிக்கொண்டு போகிறார்.தானே கதையைச் சொல்கிறார். உண்மையில் தானே சொல்வதால் கு.அழகிரிசாமி இல்லை. 'நான்' என்பது ஒரு கதைசொல்லிஅந்தக் கதைசொல்லிக்குப் பெயர் கிடையாது. பெரும்பாலான கதைகளில் கு.அழகிரிசாமி இந்த உத்தியைப் பயன்படுத்துகிறார். “ கதைசொல்லி அவன் இருந்த மாம்பலத்திலேயே அவன் கண்ணில் படாமல் ஆர்.எஸ்.ஆர.கல்யாண கிருஷ்ணன் என்பவன் மூன்று வருஷமும் ஏழு மாதமும் உலவியிருக்கிறானாம். கு.அழகிரிசாமி இனிஷியலோடு அடிக்கடி அவன் பெயரைக் குறிப்பிடுகிறார். கதைசொல்லியின் கண்ணில் படாமல் எப்படி அவனால் உலாவ முடிந்தது? எழுதிக்கொண்டு போகிற அழகிரிசாமி கதைசொல்லி வாயிலாக இப்படி எழுதுகிறார் : 'என் கண்ணில் கோளாறா? இல்லை, திடீரென்று மறையும் அபூர்வ சக்தி எதாவது ...