Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 61


அழகியசிங்கர்  

 பயிற்சி


ஞானக்கூத்தன் 




மனிதன் எங்கும் போக விரும்பவில்லை
ஆனால் போய்க்கொண்டுதான் இருக்கிறான்
மனிதன் யாருடனும் போக விரும்பவில்லை
ஆனால் யாருடனாவது போய்க் கொண்டிருக்கிறான்
மனிதன் எதையும் தூக்கிக் கொண்டு போக விரும்பவில்லை
ஆனால் எதையாவது தூக்கிக் கொண்டுதான் போகிறான்
குன்றுகளைக் காட்டிலும் கனமுள்ள சோகங்களைத்
தூக்கிக் கொண்டு நடக்க மனதில் பயிற்சி வேண்டாமா?


நன்றி : இம்பர் உலகம் - கவிதைகள் - ஞானக்கூத்தன் - பக்கங்கள் : 182 - விலை : ரூ.170 - விருட்சம் வெளியீடு, சீத்தாலட்சுமி அபார்ட்மென்ட்ஸ் , 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 33 - தொலைபேசி எண் : 9444113205 



Comments