Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 60


அழகியசிங்கர்  


 வாழ்க்கைப் பிரச்சினை


தாமரை 
                                                                                                                       



அந்த மழைநாள் இரவை
எங்களால் மறக்கவே முடியவில்லை

கோடை மழையல்ல அது
கொட்டும் மழை!

நானும் குட்டித் தம்பியும்
கடைசித் தங்கையும்...
எனக்குதான் வயது அதகிம்
எட்டு!

ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன்
தெருவெல்லாம் ஆறாக நீர்...
மின்னலும் இடியுமாய்
வானத்திலே வன்ம யுத்தம்!
எதிர்சாரியிலிருந்த குடிசைகளெல்லாம்
மூழ்கிக் கொண்டிருந்தன
கூச்சலும் குழப்பமும் எங்கெங்கும்...

உயிர்ப் பிரச்சினையும் வாழ்க்கைப்
பிரச்சினையுமாக
ஊரே ரெண்டுபட்டது

வேடிக்கை பார்த்த என்னை
எட்டி இழுத்தாள் குட்டித் தங்கை
'உள்ளே வா அண்ணா'...

அந்த மழைநாள் இரவை
எங்களால் மறக்கவே முடியவில்லை
அன்றுதான் அப்பா
எங்களுடன் இருந்தார்
அம்சவேணி வீட்டுக்குப் போகாமல்!

நன்றி : ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் - தாமரை - கவிதைகள் - காந்தளகம், 834 அண்ணாசாலை, சென்னை 600 002 - தொலைபேசி : 8354505 - விலை : ரூ.25 - வெளியான இரண்டாம் பதிப்பு : 30.6.2000



Comments

Popular posts from this blog