அழகியசிங்கர்
பிரதிபலிப்பு
நாரணோ ஜெயராமன்
குருவி தத்தி நுழையும் - அந்தர
மூலைகளில் கண்ணாமூச்சி ஆடும்.
கிணற்று ராட்டை கிறீச்சிடும்,
வலியுடன்.
கொசுக்கள் நமைச்சல் தந்தது
போதாவென்று
காதுகளில் ஓலமிடும்.
நாய்
எதிர்குரைப்புக்கு அவசியமற்று,
வாலாட்டி ராஜநடை போட்டுச் செல்லும்.
விமானம் உறுமி ஏகும்,
மண்டையிலடித்து.
நினைத்துக் கொண்ட காற்று,
உற்சாகப் போர்வை போர்த்தி
விசிறி மேவும், இப்படியாக
வாழ்வு
உள்ளேயுந்தான், வெளியேயுந்தான்!
Comments