Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 11

அழகியசிங்கர் 


கிணற்றிரவு

    ஜி எஸ் தயாளன்



நடுகச்சாமத்தில்
அம்மாவை இறுக அணைத்தபடி
சஹானா அயர்ந்து உறங்குகிறாள்

சன்னலைத் திறந்ததும்
அறையின் இறுக்கம் தளர்கிறது
இனி அவள் தனித்தே தூங்குவாள் போலிருக்கிறது

அறைக்கு வெளியே
மரக்கிளைகளில் எந்த அசைவுமில்லை
வானம் இயல்பாய் இருந்தது
தூரத்துச் சுவரில்
வாகன ஒளி தோன்றுவதும்
மறைவதுமாக இருக்கிறது
எங்கும் நிலவின் மௌனம்

சலனமற்ற ஒரு கிணறு
வேறு வழியின்றி
விண்ணையே பார்த்துக்கொண்டிருக்கிறது



நன்றி : வேளிமலைப் பாணன் - கவிதைகள் - ஜி எஸ் தயாளன் - விலை ரூ.90 - பக் : 95 - முதல் பதிப்பு : டிசம்பர் 2014 காலச்சுவடு பதிப்பகம், 669 கே பி சாலை, நாகர்கோவில் - போன் : 04652 - 278525

Comments