Skip to main content

அறிந்தரகசியம் போல

***அறிந்தரகசியம் போல


என் படுக்கையறைச்சன்னலோரம்
புறா ஒன்று அமர்ந்திருக்கிறது
நெடு நேரமாய்
அது
இருப்பது இல்லாதது போல்
இருக்கிறது.
ஒரு அந்தரங்கத்தை அறிந்த
ரகசியம் போல
அவ்வளவு அமைதி
அவ்வளவு சாந்தம்
எப்பொழுதாவது
தன் இணைக்கு மட்டும்
அனுப்புகிறது. தனது  தனிமையை
குறுஞ்செய்தியாக்கி
க்கும்...  க்கும்...


ரவிஉதயன்.

Comments

க்கும்... க்கும்... ரசித்தேன்...