1 சற்றைக்கு முன்
ஜன்னல் சட்டமிட்ட வானில்
பறந்து கொண்டிருந்த
பறவை
எங்கே?
அது
சற்றைக்கு முன்
பறந்து கொண்
டிருக்கிறது.
2 பறந்து செல்லும்
பறவையை
நிறுத்திக் கேட்டான்:
பறப்பதெப்படி?
அமர்ந்திருக்கையில்
சொல்லத் தெரியாது கூடப்
பறந்து வா
சொல்கிறேன் என்றது.
கூடப் பறந்து கேட்டான்:
எப்படி?
சிரித்து உன்போலத்தான்
என்றது.
அட ஆமாம்
ஆனால் எப்படி
எனக் கீழே கிடந்தான்
பறவை
மேலே பறந்து
சென்றது.
Comments
அருமைக்கவிதை வாழ்த்துகள்