1 சற்றைக்கு முன் ஜன்னல் சட்டமிட்ட வானில் பறந்து கொண்டிருந்த பறவை எங்கே? அது சற்றைக்கு முன் பறந்து கொண் டிருக்கிறது. 2 பறந்து செல்லும் பறவையை நிறுத்திக் கேட்டான்: பறப்பதெப்படி? அமர்ந்திருக்கையில் சொல்லத் தெரியாது கூடப் பறந்து வா சொல்கிறேன் என்றது. கூடப் பறந்து கேட்டான்: எப்படி? சிரித்து உன்போலத்தான் என்றது. அட ஆமாம் ஆனால் எப்படி எனக் கீழே கிடந்தான் பறவை மேலே பறந்து சென்றது.