பகலின் சுவர்களில்
பட்டுத் தெறிக்கும்
வெயில்
வாலாட்டுகிறது
ஒரு நாயின்
நிழலில்
சித்திரக்கோடுகளை தீட்டி
நெளிகிறது
ஒரு சாளரத்தின்
நிழலில்
மரத்தில் இருந்து
ஒரு துண்டாய் உடைந்து
ஊர்ந்து பறக்கிறது
ஒரு பறவையின்
நிழலில்
அன்பொழுக
தன் குட்டியை நக்கி
கொஞ்சி மகிழ்கிறது
ஒரு பூனையின்
நிழலில்
கருவை சுமந்தபடி
பெருமூச்செடுத்து நடக்கிறது
ஒரு கர்பிணியோடு
ஒன்றிலிருந்து மற்றொன்றாக
மாறி மாறி
பயணித்த வெயில்
கடலில் விழுந்து
பிரசவிக்கிறது
எண்ணிக்கையற்ற விண்மீனை
Comments