Skip to main content

நிசி

இலைகளற்று
மூளியாய் நிற்கும் மரம்
பீதியைக் கிளப்பியது
கும்மிருட்டில்
கள்வனைக் கண்டது போல்
வெற்று வெளியைப்
பார்த்து
நாய்கள் குரைத்துக்
கொண்டிருந்தன
தாகம் தணிக்க
அடுக்களைக்கு
போன என்னை
வரவேற்றது
திருட்டுப்பூனை
தூக்கம் வராத
இரவுகளில்
மொட்டை மாடியில்
வானம் பார்த்துக் கிடப்பது
வழக்கம்
படுக்கையில்
தலையணை மட்டும்
இருக்கட்டும்
மனதிற்கு சஞ்சலம் தரும்
நிகழ்வுகள் வேண்டாமென்று
வானம் போதனை செய்தது
தூக்கம் வராமல்
புரண்டு படுத்துக் கொண்டிருக்கும்
எல்லோரிடமும்
எப்படி இந்தச்
சங்கதியை சொல்வது
எனத் தெரியாமல்
பள்ளிக்கூட மாணவனைப் போல்
மலங்க மலங்க
விழித்தேன் நான்.

Comments

சப்தமற்ற நிசியில் வானத்தின் போதனையுடனான வளமான கவிதை... வாழ்த்துக்கள் மதியழகன்