Skip to main content

கண்ணீரின் புனிதம்

உப்பெல்லாம் கண்ணீரில்

கரைந்து விடுவதால்

உணர்வுகளும் கண்ணீரோடு

கரைந்து விடுமாவெனத்

தெரியவில்லை.


கன்னத்தில் சொட்டுகிற

கண்ணீர் சுத்தமானதா

அசுத்தம் கலந்ததாவென

அறிய இயலவில்லை.

தோண்டி விட்டார்களா

ஊற்றாய் ஊறி

வந்ததாவெனவும்

தெரியவில்லை.


ஆனால் அனுதாப

அலைகளால்

அனைவரையும்

சுனாமியாய் அபகரிக்க

இயல்கிறது சில துளி

சொட்டும் கண்ணீரால்.

Comments

கடைசி பத்தி...

அது என்னவோ உண்மை.

கவிதை நன்று நீலகண்டன்.
புனிதம் கண்ணீருக்குப் பொருந்துமா எனக் கேள்வி எழுப்பிச் செல்லுகிற கவிதை. நன்று நீலகண்டன்.