என் அரங்கில் புத்தகம் திருட்டுப் போகிறது..
45வது புத்தகக் காட்சி ஒரு வழியாக முடிந்தது. ஆரம்பத்தில் சுறுசுறுப்பில்லாமல் இருந்தது. சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
நான் ஒரு வழியாக யு டர்ன் எடுத்துச் சுற்றிச் சுற்றி 17 எண்ணுள்ள ஸ்டாலுக்கு வந்துவிடுவேன்.
பின் மாலை வரை இருப்பேன். என் நண்பர்களின் உதவியுடன்.
“ வழக்கம்போல புத்தகக் காட்சியில் இந்த முறையும் என் ஸ்டாலில் புத்தகம் திருட்டுப் போனது.
மற்ற அரங்குகளிலிருந்து புத்தகங்கள் ஒரு பகுதியும், என் புத்தக ஸ்டாலில் விருட்சம் புத்தகங்களையும் வைத்து விற்பேன்.
இந்த முறையும் அப்படித்தான் செய்தேன்.
அடையாளம் பதிப்பகம் கொண்டு வந்த 'சலூன் நாற்காலியில் சுழன்றபடி' என்ற 1000 பக்கங்கள் கொண்ட கோணங்கியின் புத்தகத்தைப் பார்த்தவுடன் வாங்கிக்கொள்ள வேண்டுமென்று தோன்றாமல் இருக்காது.
நான் வாங்கி என் ஸ்டாலில் விற்பதற்கு வைத்திருந்தேன். கடைசி நாளில் அந்தப் புத்தகம் காணாமல் போய்விட்டது.
அப் புத்தகத்தை விற்கவே இல்லை. அப் புத்தகம் எப்படியோ போய் விட்டது.
ஒவ்வொரு முறையும் இப்படித்தான் புத்தகங்கள் என் அரங்கிலிருந்து திருட்டுப் போகமலி ருப்பதில்லை .
நான் கொண்டு வரும் புத்தகங்கள் தொலைந்தாலும் பரவாயில்லை . ஆனால் மற்ற பதிப்பகங்களிலிருந்து விற்கக் கொண்டு வரும் புத்தகங்கள் போவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இந்தப் புத்தகத்தைத் திருடிக்கொண்டு போனவர்கள் நிச்சயமாக இந்தப் புத்தகத்தை பிளாட்பார கடையில் விற்று விடுவார்கள். அங்கு வாங்க வருபவர்கள் அதிக விலை கொடுத்துத்தான் வாங்க முடியும்.
என் கணக்கில் இப்படிப் போகிற புத்தகத்தால் ரூ.2000 வரையாவது குறையும்.
புத்தகத்தைத் திருடிக்கொண்டு
போகும் திருடர்களே
நீவிர் வாழ்க.
நீங்கள் படிப்பதற்காக
திருடிக்கொண்டு போனால்
புத்தகம் வாங்க முடியாத
உங்கள் நிலையை நினைத்து
சற்று வருந்துவேன்.
Comments