Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 138


அழகியசிங்கர்



எனக்கான காலம்



ஆசு



எல்லாருக்கும் உண்டு
ஒரு காலம்

நடை பழக
ஒரு வண்டி

அரவணைக்க
ஓர் அம்மா

இளைப்பாற
ஓர் அப்பா

தாங்கி நிற்க
ஓர் அன்புத் துணைவி

எல்லாருக்கும் வாய்த்திருக்கும்
இப்படியாக காலம்

எனக்கும் வாய்த்திருக்கிறது
என் கைபிடித்தவள்
வாழ்வின் தணலில் உருக

தோள் சுமக்கும்
என் மழலைகள்
நாளும் பசி உண்ண

எனக்கும்
இப்படியாகத்தான் உண்டு
எனக்கான காலம்



நன்றி : என்றொரு மௌனம் - ஆசு - தவம் வெளியீடு, 4 கந்தப்பன் குடியிருப்பு, சூளை மேடு, சென்னை -94 - வெளியான ஆண்டு : 1999 - விலை : ரூ.15 - பக்கம் : 112

Comments

Popular posts from this blog