Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 111

அழகியசிங்கர்  


வீதிக்காட்சி



எம் யுவன்





தனக்குத் தானே பேசிக்
கொள்ளும் கலையை ஒரு
குழந்தையிடம் கற்றேன்.
ஜனம் நெரியும் வீதியில்
தானறியாது
யாவரும் கைவீசி
நடக்கும் மாய
நாட்டியத்தில் நானும்
கைவீசிப் பங்
களித்தேன்.
திகம்பரமாய்க்
கடந்து போன
ஜைனத் துறவி
உடை அணிந்து
உடை விலக்கத் துடிக்கும்
என்னை நொறுக்கிப் போனான்.
கைதட்டும் கடைசிப்
பார்வையாளன் மறைந்ததும்
தொடங்கிவிட்டது
முற்றிலும் புதிய
நாடகம்.


நன்றி : வேறொரு காலம் - எம் யுவன் - மையம் - 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 600 033 - பக்: 64 - முதல் பதிப்பு : டிசம்பர் 1999 விலை : ரூ.30  


Comments