Skip to main content

தோப்பீல் முஹம்மது மீரான்




அழகியசிங்கர்





ரொம்ப ஆண்டுகளுக்கு முன்னால் தோப்பில் முஹம்மது மீரான் அவர்களை விஜயா பதிப்பகத்தில் சந்தித்தேன்.  வேலாயுதம் அவர்கள்தான் முஹம்மது மீரானை எனக்கு அறிமுகப்படுத்தினார்.  
மீரான் வியாபாரம் செய்பவர்.  அவருடைய புத்தகத்தை அவரே ஜலீலா பப்ளிஷிங் ஹவுஸ் என்ற பெயரில் பதிப்பகம் ஆரம்பித்து புத்தகத்தை விற்றுக்கொண்டிருந்தார். அவர் புத்தகங்களை வெற்றிகரமாக விற்றவர்.  இது புதிய தொழில்.  அவர் ஏற்கனவே மேற்கொண்ட வியாபாரம் இல்லை இது. 
அன்று அவருடைய புத்தகங்களை வெற்றிகரமாக விற்றதைப் பற்றி சொன்னதை இன்னும் கூட என்னால் மறக்க முடியாது.  நான் ஒரு கடலோர கிராமத்தின் கதை என்ற நாவலைத்தான் படித்திருக்கிறேன்.  கூனன் தோபபு, துறைமுகம் நூலகள் என்னிடம் உள்ளன.  இனிமேல்தான் எடுத்துப் படிக்க வேண்டும்.
ஒரு எழுத்தாளரைப்பற்றிய ஞாபகம் அவர் மறைந்த பிறகுதான் நமக்கு ஏற்படுகிறது.  மீரானுக்கு அளிக்கும் அஞ்சலி அவர் புத்தகங்களை எடுத்து வாசிக்கும்போதுதான் நிறைவேறும் என்று தோன்றுகிறது.  இதோ வாசிக்கிறேன்..

Comments