கோடை நகர்ந்த கதை
கனிமொழி ஜி
காற்றில் பறந்து
என் மேசைக்கு வந்த
இலைச்சருகு
கோடை நகர்ந்த
கதையைச் சொல்லி
சரசரக்கிறது
நன்றி : கோடை நகர்ந்த கதை - கனிமொழி ஜி - உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18- பக்கம் : 72 - விலை : 65 - வெளியான ஆண்டு : மார்ச்சு 2016
Comments