Skip to main content

Posts

Showing posts from 2019

துளி - 85- வீட்டில் காலியாக இருக்கின்றன நாற்காலிகள்

அழகியசிங்கர் புத்தகக் காட்சிக்காகக் கொண்டு வரும் என்னுடைய 3வது புத்தகம். கடந்த ஓராண்டுக்கும் மேலாக குமுதம் தீராநதியில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. ஐந்தாண்டுகளுக்கு முன் அம்ருதா  பத்திரிகையில் எதையாவது சொல்லட்டுமா என்ற தலைப்பில் கடைசிப் பக்கக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.  அக்கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாகப் போன ஆண்டு எதையாவது சொல்லட்டுமா என்ற பெயரில் புத்தகம் கொண்டு வந்துள்ளேன். இத் தொகுப்பு தீராநதியில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.  தொடர்ந்து ஒரு பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் கட்டுரை எழுதுவது அவ்வளவு சுலபமில்லை.  புதுசு புதுசாக கட்டுரைகள் எழுதப்பட வேண்டும்.  சொன்னதையே சொல்லக் கூடாது. இந்த ஆபத்து நம்மை அறியாமல் ஏற்பட்டு விடும். நான் சமாளித்துக்கொண்டு 15 மாதங்கள் கட்டுரைகள் எழுதினேன்.  ரா.கி டைம்ஸ் என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். ரா.கி ரங்கராஜன் அண்ணாநகர் டைம்ஸ் என்ற பத்திரிகையில் வாரம் வாரம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சமீபத்தில்தான் அதைப் படிக்க முடிந்ததால் அவர் எப்படியெல்லாம் எழுதியிருக்கிறார் என்று புரிந்துகொள்ள முடிந்தது.   இதில் பெர

துளி - 84- மேற்கு மாம்பலத்தில் வீட்டில் சமையல் செய்ய வேண்டாம்.

அழகியசிங்கர் நேற்று என் பேரன் பிறந்தநாள்.  மாம்பலத்தில் உள்ள சாய்பாபா கோயிலுக்குச் சென்று அன்னதானம் செய்தேன்.  சரியாக 10.30 க்கு அன்னதானம் ஆரம்பமாகிவிடும்.  200 பேர்களுக்கு மேல் அன்னதானத்தைப் பெற்றுச் செல்வார்கள்.  ஒரு பொட்டலமதான்.  நேற்று வெத்தக் குழம்பு சாதம். அன்னதானம் செய்பவர்களுக்கு 2 பொட்டலங்கள் கிடைக்கும். நானும் மனைவியும் ஒரு பொட்டலத்தை எடுத்துச் சாப்பிட்டோம். சாப்பிட்ட பிறகும் இன்னும் ஒருவர் சாப்பிடும்படி மீந்தது. அதனால்தான் சொல்கிறேன் மேற்கு மாம்பலத்தில் வசிப்பவர்கள் வீட்டில் சமையலே செய்யாமல் பொழுதைப் போக்கலாம். சாப்பாட்டிற்காக ஹோட்டலுக்குப் போய் செலவு செய்ய வேண்டாம்.  ஒரு நாளைக்குக்குறைவாக ரூ.30 மட்டும் செலவு செய்தால் போதும்.  காலையில் எழுந்தவுடன் வெங்கடேஸ்பரா போளி ஸ்டாலுக்குப் போய் ரூ.15க்கு காப்பி சாப்பிடலாம். பின் அனுமார் கோயிலுக்குப் போனால் பொங்கல் தானமாகக் கிடைக்கும்.  தானமாகக் கிடைக்கும் பொங்கல் ஒட்டலில் காசு கொடுத்து வாங்கும் பொங்கல் அளவை விட அதிகமாக இருக்கும். பத்துமணி சுமாருக்கு சாய்பாபா கோயிலுக்குப் போனால் ஒரு பொட்டலம் சாதம் தானமாகக்

துளி - 83- புத்தகக் காட்சிக்காகக் கொண்டு வந்த வாசிப்போம் வாசிப்போம்

அழகியசிங்கர் மயிலாடுதுறையில் ஒரு நண்பர் புத்தகங்களைத் தொடர்ந்து வாசிக்கும் வழக்கத்தை திடீரென்று மேற் சொண்டிருந்தார்.  என்னிடமும் சொன்னார்.  முதலில் 50 நாட்களுக்குத் தொடர்ந்து புத்தகம் வாசியுங்கள்.  அவர் தூண்டுதல் பேரில் நானும் வாசிக்கத் தொடங்கினேன்.  அப்போதுதான் ஒரு உண்மை தெரிந்தது.  புத்தகங்கள் நம் கண் முன்னே இருக்கின்றன.  வாங்கி வைத்து விடுகிறோம்.  ஆனால் வாசிக்க முடியவில்லை.  ஏன்?  புத்தகம் வாங்கும் வழக்கம் மட்டும் குறையவே இல்லை.  உடனே ஒரு புத்தகத்தை எடுத்து வாசிப்பது என்று முடிவு செய்தேன்.  முதலில் ஒரு மணி நேரம் புத்தகம் வாசிப்பது என்று திட்டம் போட்டேன். ஒரு மணி நேரம் படிக்க ஆரம்பித்தபோது மிகக் குறைவான பக்கங்களைத்தான் வாசிக்க முடிகிறது என்று கண்டு பிடித்தேன்.  முதலில் வாசிக்கும் நேரத்தை விட்டுவிட வேண்டும்.  புத்தகம் முடிக்க வேண்டுமென்பதுதான் முக்கியம் என்று பட்டது. இரண்டாம் தேதி செப்டம்பர் மாதம் முதல் வாசிக்க ஆரம்பித்தேன்.  தினம் தினம் படிக்கிற புத்தகங்களைப் பற்றி எழுதுவது என்று தீர்மானித்தேன். கிட்டத்தட்ட 27 நாட்கள் தொடர்ச்சியாக வாசித்தேன்.  உடனே வாசித்த

துளி - 82- மருத்துவர் பாஸ்கரின் 'கடைசி பக்கம்' என்ற புத்தகம்.

அழகியசிங்கர் நேற்று மருத்துவர் பாஸ்கரனின் 'கடைசி பக்கம்' என்ற புத்தக வெளியீட்டு விழா.  எனக்குத் தெரிந்து நான் பல கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். புத்தக வெளியீட்டுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கிறேன். இது மாதிரி கூட்டத்தை நான் பார்த்ததில்லை. எழுத்தாளரை மட்டுமல்ல பார்வையாளர்களையும் பரவசமடையச் செய்யும் நிகழ்ச்சி.  இந்தக் கூட்டத்தில் மாலன், கல்கி ஆசிரியர் ரமணன். சுந்தர்ராஜன், ரகுராமன் என்று எல்லோரும் கலந்து கொண்ட கூட்டம்.   எல்லோரும் அவர் புத்தகத்திலுள்ள கட்டுரைகளைப் பாராட்டிப் பேசினார்கள்.  கிரிஜா ராகவன் கூட்டத்தை நடத்திச் சென்ற விதம் நன்றாக இருந்தது. கடைசி பக்கத்திற்கு உதாரணமாக எழுத்தாளர் சுஜாதாவின் பெயரைக் குறிப்பிட்டாலும், மருத்துவர் புத்தகத்திற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. யார் கடைசி பக்க கட்டுரைகளை எழுதினாலும் சுஜாதாவிற்கும் அதற்கும் சம்பந்தமிருக்கப் போவதில்லை.  தான் எழுதுகிற புத்தகத்தை வெளியீட்டு கொண்டாடுகிற வழக்கம் மருத்துவர் பாஸ்கரிடம்தான் உண்டு.   அவர் மகிழ்ச்சியை அவர்கள் நண்பர்களிடம் வெளிப்படுத்துகிற அழகே தனி.  ஒவ்வொரு நிம

துளி - 81-புத்தகக் காட்சிக்காகக் கொண்டு வந்த புத்தகங்கள் - 2

அழகியசிங்கர் விருட்சம் வெளியீடாக நான் கொண்டு வந்த புத்தகம் துளிகள் - தொகுதி 1.  18.08.201 லிருந்து 02.06.2019 வரை உள்ள 54 கட்டுரைகள் கொண்ட நூல் இது.  கட்டுரைகள் அளவு ரொம்ப குறைவாக இருக்கும்.  அரை பக்கம், கால் பக்கம், முக்கால் பக்கம் ஒரு பக்கம் என்று மிகக் குறைந்த அளவிலான கட்டுரைகள்.  வாழ்க்கையில் நடந்த நடக்கின்ற அன்றாட நிகழ்ச்சிகளின் கதம்ப மாலைதான் இத் தொகுப்பிலுள்ள கட்டுரைகள்.  ஒருவர் இதை எடுத்து வாசித்தாரென்றால் கீழே வைக்க முடியாது.  அந்த அளவிற்குச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது.  மேலும் இப் புத்தகத்தில் எந்தப் பக்கத்தையும் புரட்டி வைத்து விடலாம்.  பின் இன்னொரு பக்கத்தை இன்னொரு நாள் எடுத்துப் படிக்கலாம்  இது ஒரு வகையான டைரி என்று குறிப்பிடலாம்.  கட்டுரையின் ஒரு பகுதியை இங்கு அளிக்க விரும்புகிறேன். üதுளி : 20 - மறக்க முடியாத பிரபஞ்சன் பெரும்பாலும் நான் பிரபஞ்சனை ஓட்டல் வாசலில் அல்லது பேப்பர் கடை வாசலில், அல்லது இலக்கியக் கூட்டங்களில் சந்திப்பது வழக்கம்.  அந்தத் தருணங்களில் இலக்கிய நண்பர்களைப் பற்றியும் புத்தகங்களைப் பற்றியும்  இருவரும் பேசுவோம்.  பி

என் நண்பர் வேணுகோபாலனின் 'தர்ப்பண சுந்தரி' என்ற கதைத் தொகுப்பு

அழகியசிங்கர்   எஸ்வி வேணுகோபலனின் 'தர்ப்பண சுந்தரி' என்ற சிறுகதையை  இன்று (25.12.2019) மதியம் 2 மணிக்குப் படித்து முடித்து விட்டேன்.  இது குறித்து மாலை பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் எஸ்வி.வி.  எஸ்.வி.வி என் பால்ய காலத்து நண்பர். மாம்பலத்தில் நானும் அவரும் நடந்து போகாத பாதை கிடையாது.  என் ஒவ்வொரு அசைவும் அவருக்கும் அவருடைய ஒவ்வொரு அசைவும் எனக்கும் தெரியும். நான் இந்தத் தொகுப்பைப் படித்தபோது பழைய கால நினைவுக்குப் போய்விட்டேன்.  இதில் ஒவ்வொரு கதையாக எழுதியதைப் படித்தேன்.  அவர் எந்தச் சுழலில் இந்தக் கதையை எழுதினார் என்று எனக்குப் புரிய ஆரம்பித்தது. நாங்கள் கதைகள் எழுத ஆரம்பித்தபோது பத்திரிகை பத்திரிகையாக அலைந்தோம்.  எந்தப் பத்திரிகையில் கதைகள் பிரசுரமாகும் என்று.  நாங்கள் என்கிறபோது நானும், எஸ்.வி.வி மட்டுமல்ல.  சுவாமிநாதன் என்கிற என் ஒன்றுவிட்ட சகோதரனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் 'தூதுவன்' என்ற கையெழுத்துப் பத்திரிகையை சுவாமிநாதன் ஆரம்பித்தார்  அதில் எழுத ஆரம்பித்தேன்.  ஆனால் எஸ்.வி.வி அதில் எழுதினாரா என்ற

ரகுநாதனின் உரை - எழுத்தாளர் தேவனைப் பற்றி - 1,2,3

அழகியசிங்கர் 'எழுத்தாளர் தேவனின் பார்வையில் மதராஸ்' என்ற தலைப்பில் எழுத்தாளர் ரகுநாதன் 21.12.2019 அன்று ஆற்றிய உரையை மூன்று ஒளிப்பதிவுகளாக இங்கே பதிவிடுகிறேன். உண்மையில் ரகுநாதன் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினார். ஆனால் என் காமெராவில் ஒரு மணி நேரம் வரைதான் பதிவு செய்திருக்கிறது.

துளி - 80 - 111வது விருட்சம் இதழ் -1

அழகியசிங்கர் 111வது இதழ் விருட்சம் வந்து விட்டது.  நவம்பர் மாதம் வர வேண்டியது.  டிசம்பர் மாதம் வரை போய்விட்டது.  ஆனால் கொண்டு வந்துவிட்டேன்.  இந்த இதழிலும் வழக்கம்போல் 5 கதைகள்.  சில கவிதைகள்.  கட்டுரைகள். பொதுவாக இதுமாதிரிôன இலக்கியப் பத்திரிகைகளைப் படிக்கும்போது மருந்துக்குக் கூட வாசிக்கும்போது சிரிப்பு வருவதில்லை.  ஏதோ அவதி என்று சொல்லமுடியாத அவதியாக இருக்கும். நான் சிரிப்பு வரவேண்டுமென்று சில கட்டுரைகளைச் சேர்த்திருக்கிறேன்.  சிறுகதைகள் அதிகப் பக்கம் போகாமல் பார்த்திருக்கிறேன்.  கடந்த இரு இதழ்களாக மொழிபெயர்ப்பு கதைகளைப் பிரசுரம் செய்திருக்கிறேன்.  இந்த இதழிலும் ஒரு மொழிபெயரப்பு கதையை வெளிப்படுத்தியிருக்கிறேன்.  எழுத்தரின் மரணம் என்ற அந்தோன் சேகவ் கதை.  அக் கதையை எழுதிய ஆண்டு 1883.  இன்னும் படிக்க வித்தியாசமாகவும் சிரிப்பு வரும்படி இருக்கிறது.  கடைசியில் கதையின் முடிவுதான் கொஞ்சம் யோசனை பண்ண வைக்கிறது. இப்போதெல்லாம் வருகிற சிறுபத்திரிகையில் கடிதங்கள் யாரும் எழுதுவதில்லை.  1988ல் கொண்டு வரும்போது ஏகப்பட்ட கடிதங்கள் வந்திருக்கின்றன.  ஆனால் இப்போதெல்லாம் ஒரு

அழைப்பிதழை இணைத்துள்ளேன்

அழகியசிங்கர்  வரும் சனிக்கிழமை 21.12.2019 ரகுநாதன் எழுத்தாளர் தேவனின் பார்வையில் மதராஸ் என்ற தலைப்பில் பேச உள்ளார்.  அவசியம் வரவும். இடம்: ஸ்ரீராம் குரூப் அலுவலகம்,  மூகாம்பிகை வளாகம், சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழ் ஆறாவது தளம். மயிலாப்பூர்.  அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். 

41வது நாளின் வாசிப்பனுபவம் (12.10.2019)

உ ணர்வுகளில் சிக்குண்ட கதைத் தொகுப்பு  அழகியசிங்கர் எல்லாச் சிறுகதைகளையும் படித் துவிட்டேன்.  ஒரே மூச்சாக. 15 கதைகள் கொண்ட தொகுப்பு.  இந்தச் சிறுகதை ஆசிரியர் ஒரு பெண்.  இவருடைய சிறுகதைகள் எந்தப் பத்திரிகையிலும் பிரசுரமாகவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.  ஆனால் அகல் என்ற மின்னிதழில் பிரசுரமரகியிருக்கிறது.  மேற்கு மாம்பலத்தில் விஎம்எ ஹாலில் நூல் வெளியீடு. நானும் ஒரு பேச்சாளன்.  முதலில் தயக்கமாக இருந்தது.  புது சிறுகதை எழுத்தாளராக இருக்கிறாரே எப்படி சிறுகதை இருக்குமென்று.   ஆனால் எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே எழுதியிருக்கிறார்.  நாம் எதிர்பார்க்கிற மாதிரிதான் கதைகள் எழுதப் பட வேண்டுமென்பதில்லை.  உதாரணமாக üரெஜித்தர் ஆபிஸ் மசிகுண்டுü என்ற கதையை எடுத்துக்கொள்வோம்.  இந்தக் கதையை நான் எழுதுவதாக இருந்தால் வேற மாதிரி எழுதியிருப்பேன்.  நான் எழுதுவதுதான் சரி என்று சொல்ல வரவில்லை.  இந்தக் கதையில் ஒரு வரி வருகிறது.  üவாசல்ல கிடந்த திண்ணையிலேயே உக்கார்ந்து கிடந்தோம்.  உள்ள டொம் டொம்முன்னு அந்த மசிகுண்ட வெச்சு அடிச்சுக்கிட்டே இருக்காக.ý எத்தனை வயல், எத்தனை

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 53

தலைப்பு : எழுத்தாளர் தேவனின் பார்வையில்  மதராஸ் சிறப்புரை : ரகுநாதன் இடம் : ஸ்ரீராம் குரூப் அலுவலகம் மூகாம்பிகை வளாகம் சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004 தேதி: 21.12.2019 (சனிக்கிழமை) நேரம் மாலை 6.00 மணிக்கு பேசுவோர் குறிப்பு : சிறுகதை, கட்டுரை, நாடக ஆசிரியர். கணக்காளர். நாடகங்களை மேடை ஏற்றி நடத்திக் காட்டியவர். அன்புடன் அழகியசிங்கர் 9444113205

துளி - 79 - இன்றைய நாடகம்..

அழகியசிங்கர் இன்று குவிகம் கூட்டத்தில் நாடகத்தைப் பற்றி அதில் சம்பந்தப்பட்டவர்கள் உரையாடல் துவக்கினார்கள்.  நான் தாமதமாகச் சென்றேன்.  இன்று மேடை நாடகத்தை வெற்றிகரமாகக் கொண்டு வருவது என்பது சிரமம்.  நல்ல கதை வேண்டும்.  நடிப்பவர்கள் வேண்டும்.  மேடை ஏற்றுவதற்குத் திறமையான இயக்குனர்கள் வேண்டும். நல்ல கதையே கிடையாது.  நகைச்சுவையாக வசனம் பேசிப் பேசி நாடகத்தின் தனிதன்மையைக் கெடுத்து விட்டார்கள். இந்த மேடை நாடகங்கள் எல்லாம் பார்வையாளர்களை முட்டாளாக ஆக்குகின்றன.  இலவசமாக நாடகத்தை அரங்கேற்றம் செய்தாலும் பார்வையாளர்கள் பெரும்பாலோர் வருவதில்லை.   நடிக்கவே தெரியாத நான் ஒரு நாடகத்தில் நடித்தேன்.  ஆர் ஆர் சபா என்று நினைக்கிறேன்  நாடகம் நடந்து கொண்டிருக்கும்போது üபோர் போர்ý  (என் நடிப்பைப் பார்த்து இல்லை) என்று பெரிய குரலுடன் பார்வையாளர்கள் கத்தினார்கள்.  எனக்குத் திகைப்பாக இருந்தது.  நாடகத்தை எழுதி இயக்கியவருக்கு எதுமாதிரி மனநிலை இருந்திருக்க வேண்டுமென்று தெரியவில்லை.  ஆனால் இன்னும் கூட எளிமையாக ஒரு நாடகத்தை நடத்திக்காட்டலாம். கூட்டத்தில் குமிழி இருந்தவர்கள் ஏதோ ஒரு விதத்தில

ஒருவருக்கு ஒரு புத்தகம்தான்

அழகியசிங்கர் மகாகவி பாரதியாரின் எழுத்துக்கள் முழுவதும் அடங்கிய ஒரே நூல் ஒரே தொகுதியில் 848 பக்கங்களில் கிடைக்கிறது.  ஏ கே கோபலன் பப்ளிஷர் இதை வெளியிட்டுள்ளனர்.   இந்தப் புத்தகத்தை பொடி அச்சில் அச்சிட்டுள்ளனர்.  எந்த இடத்திற்கு வேண்டுமென்றாலும் கையில் எடுத்துப் போகும்படி அடக்கமான தொகுப்பு.  கதை வேண்டுமானால் கதை, கவிதை வேண்டுமானால் கவிதை, கட்டுரை வேண்டுமானால் கட்டுரை என்று பாரதியாரின் எல்லா எழுத்துக்களையும் படித்து விடலாம்.  இந்தப் புத்தகத்தின் கடைசிப் பகுதி பாரதி மொழி பெயர்த்த பகவத் கீதை உள்ளது.  புத்தகத்தின் விலை ரூ.125 தான். தபால் செலவு தனி. ரிஜிஸ்டர் புக் பாக்கெட்டில் புத்தகம் அனுப்பப்படும்.  பாரதியாரின் பிறந்த நாளான இன்று இந்தப் புத்தகத்தின் எதாவது ஒரு பகுதியை எடுத்து வைத்துக்கொண்டு படிப்பது என்று முடிவு செய்துள்ளேன்.  தொடர்ந்து ஒவ்வொரு நாளும் முடிந்தவரை ஒரு பக்கமாக இருந்தாலும் படிப்பதாக தீர்மானித்துள்ளேன்.  இன்று வந்தேமாதரம் என்ற தேசிய கீதங்கள் என்ற தலைப்பில் வந்துள்ள பாடலை படித்துவிட்டேன்.   பாரதி அன்பர்கள் இந்தப் புத்தகத்தை வாங்கி வைத்துக்கொள்ளும்ப

உலக சினிமா சில தரிசனங்கள்

அழகியசிங்கர் செந்தூரம் ஜெகதீஷின் புத்தக வெளியீட்டு விழா நேற்று (07.12.2019) இக்சா மையத்தில் நடந்தது.  அவர் சினிமாவைப் பற்றி இரண்டு புத்தகங்கள் கொண்டு வந்திருக்கிறார்.  முதல் புத்தகம் உலக சினிமா சில தரிசனங்கள்.  இரண்டாவது  புத்தகம் இந்திய சினிமா சில தரிசனங்கள்.  இந்த இரண்டு புத்தகங்களையும் முழுவதும் படித்து கூட்டத்தில் பேச நினைத்தேன். ஒரு புத்தகம் 196 பக்கங்களும், இரண்டாவது புத்தகம் 92 பக்கங்களும் கொண்டவை. நான் முதல் புத்தகத்தைத்தான் படித்தேன்.  இரண்டாவது புத்தகத்தை நுனிப்úபுல் மேய்ந்தேன். ஒருநாளில் படித்துவிட்டுப் பேச நினைத்தேன்.  இந்தப் புத்தகம் படிக்கும்போது எனக்கு ஒன்றே ஒன்றுதான் தோன்றியது.  சினிமா என்பது ஒரு கலை.  அதில் பலருடைய ஈடுபாடு அவசியம்.  ஒவ்வொருவரும் அதில் எப்படி ஈடுபாடு கொள்கிறார் என்பது முக்கியம்.   ஒரு வரியில் கதையைச் சொல்வதிலிருந்து பலர் உரையாடி கதையை உருவாக்குகிறார்கள்.  அந்தக் கதையை சினிமாவாக மாற்றுவதற்குள் கதை வடிவம் மாறிவிடும்.  பல நாட்கள் முயற்சி செய்கிறார்கள்.  இப்படி கதையாக சினிமாப்படம் உருவாகும்போது அதைத் திரையிட வேண்டுமென்றால் இன்னும்

நம்ப முடியவில்லை

அழகியசிங்கர் இந்த முறை டபுள் டக்கர் வண்டியில் பெங்களூர் பயணம் செய்தேன்.  பகலில்தான் நான் பயணிக்க விரும்புவேன்.  புத்தகம் படிப்பது என் வழக்கம். என்ன புத்தகம் படிப்பது என்பதைப் பற்றிச் சிந்தித்தேன்.  ஒரு தடியான புத்தகத்தை எடுத்துக்கொண்டு செல்வது என்று தீர்மானித்தேன். உடனே கண்ணில் பட்டது.  பா ராகவன் எழுதிய யதி என்ற நாவல்.  926 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை படிப்பது  சாதாரணமான விஷயமல்ல.  ஆனால் இம்மாதிரியான ரயில் பயணத்தின் போதுதான் இந்த நாவலைப் படிக்க முயற்சி செய்ய வேண்டும்.  வண்டியில் அமர்ந்தவுடன் தடியான புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு பிரித்தேன்.  உண்மையில் என்னுடன் பயணம் செய்பவர்கள் இம்மாதிரியான புத்தகத்தை எடுத்துப் படிக்கிறானே  என்று தெரியவேண்டும் என்று நினைத்தேன். யாராவது எதாவது கேள்வி கேட்பார்களா என்றுகூட ஆவலுடன் எதிர்பார்த்தேன்.  ஏமாந்து போய்விட்டேன்.  யாரும் கேட்கவில்லை. ஆனால் நான் அசரவில்லை.  யதியைப் படிக்க ஆரம்பித்தேன்.  கொஞ்சம் கண்ணைச் சுழட்ட ஆரம்பித்தது.  சரி தூங்குவோம் என்று தூங்கினேன்.  ஆனால் யதியை என் மடியில் வைத்துக்கொண்டு தூக்கம் போட்டேன். திர

சில கேள்விகள் சில பதில்கள் - பாரதி மணி - ஒளிப்பதிவு 1,2

அழகியசிங்கர் பாரதிமணியை (புள்ளிகள் கோடுகள் கோலங்கள்) நேற்று பெங்களூரில் (02.12.2019) வீட்டில் சந்தித்தேன். பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பில் நான் இதுவரை 25 படைப்பாளிகளைப் பேட்டி எடுத்துள்ளேன். பாரதி மணியை 26ஆவதாக பேட்டி எடுத்தேன். பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்பதற்குப் பதிலாக சில கேள்விகள் சில பதில்கள் என்று மாற்றி உள்ளேன். என்னுடன் எழுத்தாள நண்பர் சிந்தூஜாவும் வந்திருந்தார். அவரையும் பாரதிமணியிடம் சி ல கேள்விக்ள கேட்கச் சொன்னேன். அவரும் கேட்டிருக்கிறார்.

துளி - 76 - நாளை பங்களூர் செல்கிறேன்

அழகியசிங்கர் நாளை காலையில் டபுள் டக்கரில் பங்களூர் செல்கிறேன்.  மூன்றாம் தேதி திரும்பி வந்துவிடுவேன்.   ஒன்றாம் தேதி என் பிறந்தநாள்.  பங்களூரில் இருப்பேன்.  ஒரு பெரிய புத்தகத்தை எடுத்துக்கொண்டு போகிறேன். படித்துவிடுவேன் என்று நினைக்கிறேன்.  உறவினர் வீட்டு கிரஹப்பிரவேசத்திற்குப் போகிறேன். அது ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.   பிளாசம்ஸ் என்ற புத்தகக் கடைக்குப் போகிறேன்.  புத்தகம் எதாவது வாங்குவேன். பங்களூரில் சில நண்பர்களைத்தான் சந்திக்க முடியுமென்று நினைக்கிறேன்.  அதுவும் திங்கட் கிழமை ஒருநாள்தான் பார்க்க முடியும்.   போன முறை பங்களூர் போய் வாங்கிவந்த புத்தகங்களை இன்னும் படிக்கவில்லை.  இந்த முறை பங்களூரிலிருந்து திரும்பி வரும்போது வாங்கிக் கொண்டு வரும் புத்தகங்களை சிறிதளவாவது படிக்க வேண்டும்.  பராசக்தி அருள் புரியவேண்டும். 

அம்பையின் சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை

அழகியசிங்கர் இன்றுதான் முடித்தேன். ஏன் இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டேன்? இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதுதான் நானும் சில புத்தகங்களைக் கொண்டு வர வேண்டியிருந்தது.  நாவலை முடிக்க வேண்டியிருந்தது. படிப்பதில் கவனம் இல்லை.  ஆனால் ஒவ்வொரு சிறுகதையையும் ஒவ்வொரு நாளும் எடுத்து வாசித்துவிடுவேன்.   நான் புத்தகக் காட்சி போது அம்பையின் எந்தப் புத்தகம் வந்தாலும் வாங்கி விடுவேன். இந்த ஆண்டு ஜனவரி மாதம் வாங்கியது ஒரு சிறுகதைத் தொகுப்பு  'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை.' 168 பக்கங்களில் 13கதைகள் கொண்ட தொகுப்பு.  உள்ளிருந்து புற உலகைப் பார்பதற்கான சன்னல் எனும் திறப்பு தொடர்ந்து தன் வாழ்க்கையின் முக்கிய அம்சமாகக் கருதுவதாக அம்பை குறிப்பிடுகிறார்.  அதேபோல் இவருக்குப் பயணம் செய்வதில் அலுப்பே ஏற்பட்டதில்லை போல் தோன்றுகிறது.  இத் தொகுப்பில் பயணம் 21, பயணம் 22, பயணம் 23 என்று பெயரிட்ட கதைகள் இருக்கின்றன.   நான் முதலில் இத்தொகுப்பில்  'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை,' என்ற சிறுகதையைத்தான் படித்தேன்.  அந்தக் கதையûப் படித்த தேதி 31.10.2019.  அத