Skip to main content

Posts

Showing posts from November, 2018

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 99

அழகியசிங்கர்   ஈனிப்பு ரா ஸ்ரீனிவாஸன் கண்ணாடிப் பெட்டகத்துள் கண்ணை ஈர்த்தது விற்பனைக்கிருந்த வண்ண இனிப்புகள் - இனிப்பின் மணம் அழைத்தது போல வந்து சேர்ந்தன ஈக்களிரண்டு- முட்டி மோதி எட்டாத இனிப்பை ஏங்கி கண்ணாடிப் பெட்டகத்தின் மேல் ஒட்டிக் கொண்ட ஈக்களுக்கு - இனிப்பை நாடி இனிப்பை உண்டு இனிக்க இனிக்க இனிப்பிற்குள்ளேயே மரித்துக் கிடக்கும் உடன்பிறப்பு ஈக்கள் - கண்ணில் பட்டது - கருத்தில் படாதது. நன்றி :  கணத் தோற்றம் - கவிதைகள் - ரா ஸ்ரீனிவாஸன்  - விருட்சம் வெளியீடு, சென்னை 33- மொத்தப் பக்கங்கள் : 42 - வெளியான ஆண்டு : 2001 - விலை : ரூ.20.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 98

அழகியசிங்கர்   தீவட்டித் திருடர்கள்                                                    லாவண்யா தீவட்டித் திருடர்கள் மூவர் பண்டொரு நாளில்  அம்மணி அம்மாளின் வீடு புகுந்தார்.  அரிவாளொருவன் கையில் இரும்புத்தடியும்  தீவட்டியும் மற்றிருவர் கையிலுமாக. மருமகளும் பேரனும் முற்றத்திலுறங்கினார்.  அகமுடையாரும் பிள்ளையும் அயலூர் சென்றவர்  அடுத்த நாள்தான் வரவிருந்தார்கள். அமைதியாய் இருக்கச் சொல்லி அரிவாளைக்  கும்பிட்டாளம்மணி.  நெல்லொரு சாக்கிலும்  கம்பங்கருதும் மல்லாக்கொட்டையும்  மற்றுமிரு சாக்கிலவர் முன் வைத்தாள்  தங்க வளையல்களிரண்டோடு. தண்ணீர் கேட்டதட்டினானொருவன்.  பயத்தில் வெண்கலச் சொம்பிலிருந்த பாலைத்  தந்தாள் நீரென்றெண்ணி.  பாலைக் குடித்தவன் தீமிதித்தவன் போலானான்.  புறப்பட்டானிருவரோடும். எதையும்  எடுத்துச் செல்லாமல். நல்லாயிரம் மணியென்று..  பின்னாறிரண்டாண்டுகள் ஆடிப்பெருக்கன்றிரவு  சுங்கடிச் சேலையும் மஞ்சள்கொத்தும்.  தீவட்டித் திருடர்கள் தலைவாசலில் வைத்தாரென  அம்மணி அம்மாளின் சந்ததிகள் சொல்வார்கள். எப்போதேனும் நினைவில் வருவ

துளி : 15 - வெங்கட் சாமிநாதன் எழுதிய வாழ்க்கை வரலாறு..

துளி : 15 - வெங்கட் சாமிநாதன் எழுதிய வாழ்க்கை வரலாறு.. அழகியசிங்கர் சமீபத்தில் பிரமிளின் எல்லா எழுத்துக்களையும் 6 புத்தகங்களாக பிரமிளின் பக்தரும் நெடுங்கால நண்பருமான கால சுப்ரமணியம் கொண்டு வந்துள்ளார்.  இது அரியஞ்; பணி.  இதை சுப்ரமணியம் மாதிரி ஒரு தீவிரவாதிதான் செய்து காட்டமுடியும்.   இதேபோல் வெங்கட் சாமிநாதனுக்கு ஒருவர் முயற்சி செய்தால் 10 புத்தகங்களுக்கு மேல் ஒருவர் கொண்டு வர வேண்டும்.  அவ்வளவு எழுதியிருக்கிறார் வெங்கட் சாமிநாதன்.  ஆனால் இதை யாரால் செய்ய முடியும்?  அவர் எழுதிய எல்லாப் புத்தகங்களையும் சேகரிக்க வேண்டும்.  அதன் பின் அவர் எழுதாத கட்டுரைகள் ஆயிரக்கணக்கில் இருக்கும்.  அதையெல்லாம் கண்டு பிடிக்க வேண்டும்.  அவருடைய நண்பர்கள்தான் இதற்கெல்லாம் உதவி செய்ய வேண்டும்.  நான் முயற்சி செய்யலாமென்று அவர் புத்தகங்களை எல்லாம் வாங்கி வைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் எனக்குத் தெரியாமல் இன்னும் எத்தனைப் புத்தகங்கள் வந்திருக்கின்றன என்பது என்னால் ஊகிக்க முடியவில்லை.  பிரமிளுடைய எல்லாக் குணங்களும் வெங்கட் சாமிநாதனுக்கும் உண்டு.  யாரையாவது பிடிக்கவில்லை என்றால் கடைச

ஒப்பனை நகரம்

பிரபு மயிலாடுதுறை அந்நகரம் ஒப்பனையாளர்களைக் குறைவாகவும் சுயமாக ஒப்பனை செய்து கொள்பவர்களை அதிகமாகவும் கொண்டு பரபரப்பாக ஒப்பனை செய்து கொண்டிருந்தது எதிரேயிருக்கும் மனிதர்களை ஆடிகளாய்ப் பெரும்பாலானோர் எண்ண எண்ண ஒவ்வொருவரின் பிம்பமும் முடிவிலா சாத்தியங்களுடன் பெருகியது நாடக மேடைகளின் பின்பக்கமென அந்நகரில் வஸ்திரங்களும் ஆபரணங்களும் விரவிக் கிடந்தன ஒரு சிறிய முக்கில் பாலகர்கள் பத்து பேர் ஒரு பாக்கெட் சீனி வெடியை மெழுகுவர்த்தி ஊதுவத்தி வைத்துக் கொண்டு வெடித்து வெடித்து ஆரவாரித்தனர் அவ்வப்போது அவர்களைப் பார்த்து மகிழ்ந்து மகிழ்ந்து சிரித்தான் சேலைத் தொட்டிலில் உட்கார்ந்திருந்த குழந்தை

துளி : 14 - மறக்க முடியாத இரண்டு புத்தகங்கள்

அழகியசிங்கர் ஒவ்வொரு முறையும் சாகித்திய அக்காதெமி அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்குச் செல்லும்போது அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களைத் தேடுவது என் வழக்கம்.   அப்படி தேடிய இரண்டு புத்தங்களைப் பற்றி இங்கே குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். ஒரு புத்தகத்தின் பெயர் வசவண்ணர் வாக்கமுது.  இப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1972ல் வெளிவந்துள்ளது.  மறுபதிப்பு 1993.  இப் புத்தகத்தின் விலை ரூ.85 தான்.  ஒவ்வொருவரும் கட்டாயம் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய புத்தகம். வசவண்ணர் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய புத்தகம் இது.  வசவண்ணரால் பாரதத்தின் ஆன்மக் கருவூலம் வளர்ச்சி பெற்றது.  கன்னட இலக்கிய ரலாற்றில் ஒரு யுகபுருஷரான வசவண்ணர் உயர்ந்த இறை உணர்வை எளிமையும், சுவையும் மிக்க இனிய பாடல்களில் படைத்தவர்.  இப்புத்தகம் 500 வாக்கமுதுகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளது சாகித்திய அக்காதெமி.  அதிலிருந்து சிலவற்றை இங்கு அளிக்கிறேன். வசவண்ணர் கூடல் சங்கம தேவாவை முன்வைத்து தன் வாக்கமுதுகளை வெளிப்படுத்தி உள்ளார். 1 ஐயா, ஐயா என்றழைத்துக் கொண்டிருக்கிறேன்  ஐயா

திறந்த புத்தகம் பற்றி இந்திரா பார்த்தசாரதி

அழகியசிங்கர் என் திறந்த புத்தகம் பற்றி இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ஒரு நிமிடம்தான் பேசி உள்ளார்.  அந்த ஒளிப்பதிவை இங்கே அளிக்க விரும்புகிறேன்.  50 கட்டுரைகள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.170. 200 பக்கங்களுக்கு மேல்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 97

7 அழகியசிங்கர்    ஏழுமணிச் சண்டை கல்யாணராமன் ஹிண்டு பேப்பர் காலை ஏழு மணிக்கு வரும் எடிட்டோரியல் படிக்க அப்பாவும் எண்டர்டெயின்மெண்ட் பார்க்கத் தங்கையும் மேட்ரிமோனியல் மேய அம்மாவும் வான்டட் காலத்தை அலச அக்காவும் ஸ்போர்ட்ஸ் புரட்டத் தம்பியும் இவர்கள் படிக்காத ஏதாவதொன்றை வெறுமனே கையில் பிடித்திருக்க நானும் ஒரே சமயத்தில் பரபரத்துப் பாய்வோம் மணியடித்து ஓயும் சுவர்க் கடிகாரத்துக்குத் தெரியும் இன்னும் சற்று நேரத்தில் சீந்துவாரின்றிப் பேப்பர் புரளப் போகும் வெற்றுத் தரைக்கும் கொஞ்சம் தெரியும் இந்த ஏழுமணிச் சண்டைக்குத்தான் எல்லாமுமென்று. நன்றி : நகரத்திலிருந்து ஒரு குரல் - கல்யாணராமன் - கவிதைகள் -பக்கங்கள் : 96 - பதிப்பாண்டு : ஜøன் 1998 - விலை : ரூ.30-தாமரைச் செலவி பதிப்பகம்.

துளி : 13 - எழுதித் தள்ளிவிடுங்கள்..

அழகியசிங்கர் சில தினங்களுக்கு முன்னால் நான் தபால் கார்டைப் பயன்படுத்துவதைப் பற்றி எழுதியிருந்தேன்.  நான் பலருக்கு தபால் கார்டில் பேனாவால் எழுதி தபால் கார்டை அனுப்பிக்கொண்டிருந்தேன். யார் என்ன நினைப்பார்களோ தெரியவில்லை.  சிலருக்குப் பிடிக்காமல்  இருக்கலாம்.  சிலர் இது என்ன கூத்து என்று நினைத்திருக்கலாம்.  பொதுவாக கார்டில் எழுதுவதை நான் உள்படப் பலர் அலட்சியப் படுத்துகிறோம்.   முதலாவது சமீபத்தில் தமிரபரணி புஷ்கரத்திற்கு நெல்லைக்குச் சென்றோம்.   கள்ளிடக்குறிச்சியில் ஒரு உறவினர் வீட்டிற்குச் சென்றோம்.  அங்கே ஒரு பெரிய கம்பியில் வந்தக் கடிதங்களைக் குத்தி வைத்திருந்தார்கள்.  நாம் இதுமாதிரி செய்வதையெல்லாம் விட்டுவிட்டோம்.  உண்மையில் அதைப் பார்த்துவிட்டு வந்தபிறகு என் வீட்டில் ஒரு நீளமான கம்பியை வாங்கி வருகிற தபால்களை குத்தி வைத்துக்கொள்ளலாமென்று நினைக்கிறேன். இரண்டாவது நான் விருட்சம் பத்திரிகையை என் கையால் கைப்பட எழுதி தபாலில் செலுத்துகிறேன்.  அப்படி கையால் எழுதி தபாலில் சேர்ப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நான் டைப் அடித்து அதை கட் செய்து ஒட்டலாம்.  நான் அதைச் ச

விருட்சம் இலக்கியச் சந்திப்பும் புகைப்படமும்

அழகியசிங்கர் வேணு வேட்டராயன் கவிதைப் படிமமும் அழகியலும் பற்றிப் பேசினார்  அவர் ஆரம்பிக்கும்போது ஆங்கிலத்தில் பேசினார்.  பின் தமிழுக்கு மாறினார். கவிதையைப் பற்றி மட்டுமல்லாமல் ஓவியத்தைப் பற்றியும் பேசினார். அவருடன் போட்டோ எடுத்ததை இங்கே பதிவிடுகிறேன்.  போன மாதம் நடந்த நாகார்ஜ÷னனுடன் போட்டோ எடுத்துக்கொள்ள மறந்து விட்டோம்.

நாளை நடைபெற இருக்கும் வேணு வேட்ராயன் கூட்டம்

அழகியசிங்கர்   கவிதைப் படிமமும் அழகியலும் என்ற தலைப்பில் நாளை விருட்சம் இலக்கியச் சந்திப்பில் ஸ்ரீராம் குரூப் அலுவலகம்     மூகாம்பிகை வளாகம் சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே     ஆறாவது தளம்  மயிலாப்பூர் சென்னை 600 004  பேசப் போகிறவர் வேணு வேட்ராயன்.  அவர் மருத்துவர்.  கவிஞர்.  அவருடைய முதல் புத்தகமான அலகில் அலகு விருட்சம் வெளியீடாக வருகிறது.  மூன்று படைப்பாளிகளை அவரால் மறக்க முடியாது என்கிறார். ஒருவர் ஜெய மோகன், இன்னொருவர் பிரமிள், மூன்றாமவர் தேவதேவன்.  72 கவிதைகள் அடங்கியத் தொகுப்புதான் அலகில் அலகு.  இவருடைய கவிதைகள் வித்தியாசமானவை.  இவர் கவதைகளைப் படிக்கும்போது இவரே ஒரு படிமக் கவிஞராக எனக்குத் தோற்றம் தருகிறது.  இந்தப் புத்தகத்தில் இருந்து ஒரு கவிதையை இங்கு தருகிறேன். இந்த ஞாயிறு இளம் காலை  ஏன் நீலம் தரித்து நிற்கிறது. நீண்ட நெடும் இரவெல்லாம் தோய்ந்த  நெஞ்சின் அடர்நீலம்  கடலலை மேல் மென்வானில் பாரித்து கிடக்கிறது. மெல்ல சாலையில் ஊர்ந்து சென்றால்  எங்கு காணினும் நீலமடா ! (பழ சாறு கடையில் மொசம்பி பழங்களிலும்  நீலம்  வழிகிறது)

விருட்சமும் கூட்டமும்

அழகியசிங்கர் போன மாதம் மறுதுறைமூட்டம் என்ற தலைப்பில் நாகார்ஜ÷னன் அவர்கள் உரை நிகழ்த்தினார். முதலில் அவர் கூட்டத்திற்கு வந்திருந்து பேசுவதற்கு விருப்பப்படவில்லை.  ஆனால் என் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் பேச ஒப்புக்கொண்டார். மேலும் அவர் தனியாக மேடை மாதிரி ஒரு இடத்தில் பேச விருப்பப்படவில்லை.  நானும் அப்படியெல்லாம் இல்லை.  எல்லோரும் சமமாகத்தான் அமர்ந்துகொண்டு பேசுவோம் என்றேன்.  நான் காமெராவில் அவர் பேச்சை பதிவு செய்ய நினைத்தேன்.  அவர் வேண்டாம் என்றார். பின் அவர் பேசியதை ஒலிப்பதிவு செய்தேன்.  சிலர் சொன்ன பதில்கள் அவரை ஆத்திரமடையச் செய்தது.  அவர் கோபம் எனக்கு ஆச்சரியம்.  நான் இதுமாதிரியான கூட்டங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறேன்.  இதற்குக் கூட்டம் வருவதைப் பற்றியும் வராமல் போவதைப் பற்றியும் நான் கவலைப்படவில்லை.  மேலும் கூட்டத்திற்கு வருபவர்களை நான் மதிக்கிறேன்.  இலக்கியக் கூட்டம் நடத்தினாலும் நானும் பங்கு கொள்ளும் ஒருவன் அவ்வளவுதான்.   அடுத்தக் கூட்டத்திற்கான அழைப்பிதழை இத்துடன் இணைக்கிறேன்.  

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 44

        தலைப்பு  :   கவிதைப் படிமமும் அழகியலும் சிறப்புரை :    வேணு வேட்ராயன் இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்     மூகாம்பிகை வளாகம்     சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே     ஆறாவது தளம்      மயிலாப்பூர்     சென்னை 600 004 தேதி 17.11.2018 (சனிக்கிழமை) நேரம் மாலை 6.00 மணிக்கு பேசுவோர் குறிப்பு : மருத்துவர். அலகில் அலகு என்ற முதல் கவிதைத் தொகுதி விருட்சம் வெளியீடாக வர உள்ளது. அன்புடன் அழகியசிங்கர் 9444113205

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 96

அழகியசிங்கர்   பதிவுகள் தி சோ வேணுகோபாலன் இன்று வாசலில் சிமெண்டுத் தரைபோட்டிருக்கிறது நாளைக்கு இறுகி விடும். காக்கையின் கால் விரல் கழுதையின் குளம்படி குழந்தையின் காலடி பிச்சைக்காரன் குடுகுடுப்பைக்காரன் உஞ்சி விருத்தி பிராமணன் தெரிந்தவர், தெரியாதவர் ஸ்கூட்டர் சக்கரம் இரவின் சுவர் நிழலில் எவனுக்கோ இரகஸியமாய் காத்து நின்ற கால் மெட்டி நெளிவு இளங்கன் றின் வெள்ளை மனம் பசுவின் நிதானம் காளையின் கம்பீரம் நாயின் குலப்பகை பூனையின் கபடம் பன்றியின் அவலட்சணம் இறு கிய தரையில் நிரந்தரம் விரிசல் கண்டு தூள் ஆனாலும் புதியவை பதியாது பதிந்ததும் நிலைக்காது உருண்டுவரும் கோலிகள் நில்லாது போகலாம் அல்லது குழிக்குள் விழிக்கலாம் நன்றி :  மீட்சி விண்ணப்பம் - கவிதைகள் - தி சோ வேணுகோபாலன் - க்ரியா வெளியீடு - பக்க எண் குறிப்பிடப்படவில்லை - வெளிவந்த ஆண்டு : 1977 - விலை : ரூ.5

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 95

அழகியசிங்கர்   எனது சைக்கிள் திருடனுக்கு ஒரு கவிதை தேவதேவன் நண்பா , பூமியில் நான் கால் பாவா தபடிக்கு என்னைச் சுமந்து செல்லும்  மறைக்கப்படாத ஒரு ரகஸ்யம் அது . தவறுதான் ; அதை நான் பூட்டி வைத்துப் பழகியது. என்னை மீறிய ஓர் அபூர்வப்பொழுதில் அது தன து அனாதி கோலத்தில் நின்றிருந்தபோது -  அதை நீ கவர்ந்து சென்று விட்டாய். நான் அதைப் பூட்டி வைத்தது போலவே. என து துக்கம் : நாம் இருவருமே குற்றவாளிகளானதில். அந்தச் சிலுவையுடன் கெண்டைக்கால் சதைகள் நோக பூமியில் எனது தூரம் கடக்கப்படவும்; உன து தூரம் நெடுந்தொலைவு ஆகிவிடும்போது - வாகனம் தான் எனினும் - உன் கால்களும் தான் நோகும். நண்பா , பூமியில் நம் சுக - துக்கத்தின் கதை இவ்வளவு தானே ! பள்ளத்தை நோக்கிப் பாயும் வெள்ளம் ; வெற்றிடத்தை நோக்கி ஓடி வரும் வாயு; புனித துக்கத்தை நோக்கிப் பாய்ந்து வந்தது கருணை; ''இதை வைத்துக் கொள்ளுங்கள், நீங்களாய் இன்னொன்று பெறும் வரை. அல்லது உங்களுடையது மீட்கப்படும்வரை. நன்றியுணர்வாலோ , திருப்பிக் கொடுக்கப்பட வேண்டுமென்ற கடப்பாட்டுணர்வாலோ உங்களைத் தொந்தரவு செய்து கொள்ளவேண்டாம

அரவிந்தன் வாங்கிக் கொடுத்த சோனி காமெரா..

அரவிந்தன் வாங்கிக் கொடுத்த சோனி காமெரா.. அழகியசிங்கர் 2011 ஆம் ஆண்டு நானும் மனைவியும் அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா என்ற ஊருக்குச் சென்றோம்.  ஒரு மாதம் இருந்தோம்.  எல்லா இடங்களுக்கும் சுற்றிப்பார்த்தோம்.  என்னதான் அங்கிருந்தாலும் எதற்கெடுத்தாலும் என் பையன் அரவிந்தை நம்பி இருக்க வேண்டியிருந்தது.   எல்லா இடத்திற்கும் காரில் போக வேண்டியிருந்தது.  அங்கிருந்த சமயத்தில் அரவிந்தன் வாங்கிக்கொடுத்த சோனி காமெராவில் முதன்முதலாக பின் டிரம்மர்ஸ்ûஸ படம் பிடித்தான்.  இது நடந்து ஏழாண்டுகள் முடிந்து விட்டது.   எனக்கு ரொம்ப தாமதமாகத்தான் இந்த காமெராவைப் பயன்படுத்தத் தெரிந்திருக்கிறது.  என் புதல்வனின் முதல் ஒளிப்பதிவை இங்கே வெளியிடுகிறேன்.  

துளி : 12 - நகுலன் வேடிக்கையானவர்

அழகியசிங்கர் நகுலன் கவிதை எழுதுவதாகட்டும், கதை எழுதுவதாகட்டும் எதாவது ஒரு சோதனை செய்துகொண்டிருப்பார்.  ஜனவரி 1986 ஞானரதம் பத்திரிகை க நா சு ஆசிரியர் பொறுப்பில் வெளிவந்து கொண்டிருந்தது.  அப் பத்திரிகைக்கு நகுலன் ஒரு வரிக் கவிதைகளும், இரண்டு வரிக் கவிதைகளும் அனுப்பி இருந்தார்.  ஒரு வரிக் கவிதைகளை இங்கே அளிக்க விரும்புகிறேன். ஒரு வரிக் கவிதைகள் 1. உடைமை என்பது உன்னுள் இருப்பது 2. நான் நானாக ஒரு ஜீவித காலம் 3. பிரம்மாண்டமான விருட்சங்களில் சிதில ரூபங்கள் 4. காலம் ஒரு கலைஞன் 5. வாடகை வீடு காலியாகிவிட்டது 6. கடைசி அத்தியாயம் : கவிதை முடிந்து விட்டது. நீங்களும் இதுமாதிரியான கவிதைகளை இங்கே எழுத முடிந்தால் எழுதி அனுப்புலாம்.  இதோ நான் முயற்சி செய்கிறேன். 1. கூடிய மட்டும் பேசுவதைத் தவிர்த்து விடுங்கள் 2. அந்தப் பெண்ணைப் பார்த்தேன்.  யூ டூ என்றாள். 3. ஜாக்கிரதை : மாடிப்படிக்கட்டுகளில் ஏறுவதும் இறங்குவதும் 4. வெறுமனே இருந்தது அறை 5. ஒன்றுமில்லை நிஜமாக. 6. பிரிந்தவர் கூடினாலும் கூடியவர் பிரிந்தாலும் வரு

துளி : 11 - சொல்லாமலே....

அழகியசிங்கர்                                                                          சமீபத்தில் தமிழ்ச் சினிமாவில் கதைத் திருட்டு பெரிய விஷயமாக யூ டியூப்பில் போய்க் கொண்டிருக்கிறது.  எல்லாம் உடனே உடனே தெரிந்து விடுகிறது.  பலதரப்பட்ட வாதங்கள் விவாதங்கள் எல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.  என்னைப் போன்றவர்களுக்கு இது சம்பந்தமே இல்லை.   ஆனால் யூ டியூப்பில் பார்க்க  நன்றாகப் பொழுது போகிறது.  ஒரு காலத்தில் ஸ்டெல்லா புரூஸ் அவர்கள் கதை விவாதத்திற்குக் காரை வைத்து அழைத்துப் போனதாக என்னிடம் பெருமையாக சொல்லுவார். ஹோட்டலில் ரூம் போட்டுக் கதை விவாதம் செய்வதாக அவர் குறிப்பிடுவார். எனக்குத் தோன்றும் என்ன அப்படி விவாதம் செய்வார்கள் என்று. உண்மையில் படத்தை இயக்குபவர் படத்தை மட்டும் இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  அதேபோல் கதை எழுதுபவர் ஒருவராக கதை, திரைக்கதை, வசனம் என்றெல்லாம் எழுதத் தெரிந்திருக்க வேண்டும். எல்லாமே இயக்குநர் என்கிறபோது பிரச்சினை ஏற்படுவதாகத் தோன்றுகிறது.  என் அலுவலகத்தில் ஒருவர் கூட இப்படித்தான் கதையைச் சொல்லி தயாரிப்பாளரைப் பார்த்து படம் தயாரித்து விடலாம் எ

துளி : 10 - ஐராவதமும் தீபாவளி மலர்களும்

அழகியசிங்கர் என் நண்பர் ஐராவதம் மேற்கு மாம்பலம் நாயக்கன்மார் தெருவில்  வசித்து வந்தவர், 2014ஆம் ஆண்டு இறந்து விட்டார். அவர் ஒரு தமிழ் அறிஞர்.  கதைகள் எழுதுவார், கவிதைகள் எழுதுவார், கட்டுரைகள் எழுதுவார்.  அவர் படித்தப் புத்தகங்களைப் பற்றி விமர்சனம் செய்வார். மொழிபெயர்ப்பும் செய்வார். ஆனால் பத்திரிகை உலகம் அவர் திறமையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். அசோகமித்திரனே ஐராவதம் மூலமாகத்தான் ஆங்கிலப் புத்தகங்களைத் தெரிந்துகொண்டேன் என்று கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட திறமையான படைப்பாளியைப் பத்திரிகைகள் பயன்படுத்திக்கொள்ள வில்லை.  அவரிடமிருந்து ஒரு கதையோ ஒரு கவிதையோ ஒரு கட்டுரையோ ஒரு மொழிபெயர்ப்போ ஏதோ ஒன்றை வாங்கிப் பிரசுரம் செய்திருக்கலாம்.  யாரும் அவரைக் கண்டுகொள்ளவில்லை.  அவர் புறக்கணிக்கப்பட்ட படைப்பாளி.  ஆனால் இது குறித்தெல்லாம் அவருக்கு வருத்தம் இருந்த மாதிரி தெரியவில்லை.  அவர் வீடு இருந்த தெரு முனையில் உள்ள லென்டிங் லைப்ரரியில் போய் தீபாவளி மலர்களை வாடகைக்கு எடுத்து வாசிப்பார்.  அதாவது பழைய தீபாவளி மலர்கள்.  அவர் புதியதாக எந்தத் தீபாவளி

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 94

அழகியசிங்கர் 'மனதுக்குப் பிடித்த கவிதைகள்' என்ற தொகுப்பை கூடிய விரைவில் கொண்டு வர உள்ளேன்.  இது முதல் தொகுப்பு.  இதைத் தொடர்ந்து இரண்டாவது தொகுப்பு மூன்றாவது தொகுப்பு என்று வர உள்ளது. ஒவ்வொரு தொகுப்பிலும் 100 கவிதைகள் வரை இடம் பெறும்.  தொகுப்பாளராக நான் இருந்தாலும் இத் தொகுப்பில் முன்னுரை எதுவும் இடம் பெறாது.  ஏன் என்றால் கவிதைகள்தான் முன்னுரை.  தொகுக்கப்பட்டுள்ள கவிதைகளை ஒருவர் வாசித்தால்தான் இதன் அருமை தெரியும்.  நான் இதுவரை 400க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகள் வைத்திருக்கிறேன்.  ஒருநாள் தற்செயலாக ஒரு கவிதைத் தொகுதியை எடுத்து வாசித்தேன். அத் தொகுதியில் உள்ள கவிதைகளைப் படித்து நான் அசந்து விட்டேன். நாம் ஏன் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் எதாவது ஒரு கவிதையைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்று அப்போது  தோன்றியது.   அந்த முயற்சிதான் தொடருகிறது.  இப்போது என்னிடம் உள்ள கவிதைத் தொகுதியிலிருந்து 400க்கும் மேற்பட்ட கவிதைகளை என்னால் எடுக்க முடியும்.  இதெல்லாம் கவிதைப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட கவிதைகள். இதே பத்திரிகைகளில் பிரசுரமாகும் கவிதைகளை நான் தேர்ந்தெட

துளி : 9 - திகசியும், வல்லிக்கண்ணனும் இல்லை.

துளி : 9 - திகசியும், வல்லிக்கண்ணனும் இல்லை. அழகியசிங்கர் இன்று கூட நான் விருட்சம் 106வது இதழ் அனுப்பிக்கொண்டிருந்தேன்.  இன்னும் சிலருக்கு விட்டுப் போயிருக்கும் என்று நினைக்கிறேன்.   சந்தாதார்களுக்கு அனுப்புவதோடல்லாமல் இலவசமாகவும் அனுப்புகிறேன்.  நேற்று ஒரு தபால் அலுவலகத்திற்குச் சென்றேன்.  அங்கே விருட்சம்   இதழ் கவர்களை தபால் தலை ஒட்டி  தபால் அலுவலகத்தில் கொடுத்தேன்.  ஒரே ஒரு பெண்மணி மட்டும் தபால் அலுவலகத்தில் இருந்தார்.  அவர் கோந்து ஒட்டும் இடத்தில் நான் கொண்டுவந்த விருட்சம் பாக்கெட்டுகளை வைத்துவிட்டுப் போகச் சொன்னார்.  உண்மையில் அந்த இடத்தில் வைப்பதற்கு என் மனம் ஒப்பவில்லை.  அது போக வேண்டிய இடத்திற்குப் போகாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று தோன்றியது.  நான் அனுப்பும் விருட்சம் இதழ்கள் எல்லோருக்கும் போய்ச் சேர்ந்ததா என்ற தகவலே தெரியாது.  யாரும் சொல்லமாட்டார்கள்.  இதுதான் பிரச்சினை.  எந்தத் தகவலும் கிடைத்தவர்களிடமிருந்து வராது.  இப்படித்தான் என் நெருங்கிய எழுத்தாள நண்பர்களிடம் நான் அனுப்பும் விருட்சம் பற்றி எந்தத் தகவலும் தெரியாது.  வந்தது என்று கூட சொல்லமாட