கடந்த சில தினங்களாக அலுவலகம் போகாமல் வீட்டில் இருக்கிறேன். பையன் திருமணத்தை ஒட்டி. வீட்டில் நானும், அப்பாவும்தான். காலையில் நடக்கப் போவேன். சரவணபவன் ஓட்டல் எதிரில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியைச் சுற்றி சுற்றி வருவேன். நான்கு தடவைகள் சுற்றினால் அரைமணிநேரம் ஓடிவிடும். பின் சரவணபவன் ஓட்டலில் 2 இட்லி ஒரு மினி காப்பி அல்லது பொங்கல் அல்லது வடை மினி காப்பி நிச்சயம் சாப்பிட்டு வீட்டிற்கு வந்து மெதுவாகக் குளித்து மெதுவாக மதியம் சாப்பிடுவேன். ஒருமுறை காலை 11 மணிக்கு வெயிலில் வெளியே சுற்றினேன். கடுமையை உணர்ந்தேன். 1984ஆம் ஆண்டு வாக்கில் நான் சம்பத்தைச் சந்தித்திருக்கிறேன். 2 முறைகள் சந்தித்திருப்பேன். ஒருமுறை ஞாநி நடத்திய கூட்டம் ஒன்றில். பாதல்சர்க்கார் பற்றிய கூட்டம் அது என்று நினைக்கிறேன். அப்போது சம்பத் என்பவர் சத்தமாக விவாதம் செய்ததாக நினைப்பு. எதைப் பற்றி பேசினார்கள், என்ன பேசினார்கள் என்பதைப் பற்றி ஞாபகம் இல்லை. அடுத்த முறை சம்பத்தை ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தின்போது, கூட்டம் முடிந்து நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, பேசிக்கொண்டு வந்தேன். ஆனந்தவிகடன் நடத்த உள்ள நாவல் போட்டி