Skip to main content

Posts

Showing posts from September, 2009

செப்டம்பர் மாத இலக்கியக் கூட்டம்

சா கந்தசாமி யைத் தொடர்ந்து யவனிகா ஸ்ரீராம் . எதைப் பேசினாலும் கருத்து முரண்பாடு இக் கூட்டங்களில் முக்கியமான அம்சம் . அப்படி இருந்தால்தான் கூட்டம் சிறக்கும் . பேசுபவரின் கருத்தையை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது இல்லை . பேசுபவர் புதிய எல்லையில் கேட்பவரைக் கொண்டு செல்கிறார் . அதை வைத்துக்கொண்டு மற்றவர்கள் சிந்திக்கிறார்கள் . யவனிகா ஸ்ரீராமை தற்போதைய கவிதைகளைப் பற்றி பேசும்படி கேட்டுக்கொண்டேன் . அவர் இன்றைய நிலையில் கவிதைகள் எப்படியெல்லாம் வெளி வருகின்றன என்று பேச ஆரம்பித்தார் . இன்றைய கவிதையில் குடும்பம் இல்லை என்றார் . யாரும் குடும்பத்தைப் பற்றி கவிதைகள் எழுதுவதில்லை என்றார் . குடும்பத்தோடுதான் எல்லோரும் இருக்கிறோம் . ஆனால் யாரும் குடும்பத்தை கவிதையில் கொண்டு வரவில்லை என்றார் . என்னால் இக் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை . என்னைப் போன்ற பலரின் கவிதைகளில் குடும்பம்தான் கருப்பொருளாக உள்ளது . என் ஆரம்ப கவிதையில் அம்மா இல்லாத குடும்பத்தைப் பற்றி எழுதியிருப்பேன் . வயது முற்றிய பாட்டியை முற்றத்தில

வந்தமர்ந்து கொண்டது பூனை

கவிதைக்கான குறியீடை இதனுள் பொருத்தும் முன்பே வந்தமர்ந்து கொண்டது பூனை அர்த்தப்படாத எழுத்துச்சிதறல்களில் அர்த்தமுணர நினைக்காது வால் வளைத்து ஓரமாய்த்தான் சுருண்டு படுத்துள்ளது உணரலில்லாது நிதானமாய் வரி தாண்டியிருக்கக்கூடும் தன்னைப்பதிவு செய்தலில் வேறெதும் நிச்சயப்படவில்லை கவிதை பூனையான சாத்தியம் தவிர்த்து

செப்டம்பர் மாத இலக்கியக்கூட்டம்

ந வீன விருட்சம் செப்டம்பர் மாதக் கூட்டம் 27.09.2009 மாலை 6 மணிக்கு ஆரம்பித்தது. நான் அடித்துப்பிடித்துக் கொண்டு ககஅ பில்டிங் சென்றேன். சுத்தமாக கூட்டத்திற்கு யாரும் வர மாட்டார்கள் என்பதில் பலமான நம்பிக்கையுடன் இருந்தேன். காரணம். மழை. அப்படி யாரும் வராவிட்டால் கொடுத்த காசுக்கு (ரூ.250) 3 மணி நேரம் அங்கு தனியாக இருந்துவிட்டு வருவது என்று தீர்மானித்தேன். நான் உள்ளே நுழைந்தவுடனே மழை பிடித்துக்கொண்டது. லாவண்யா என்கிற என் நண்பர், "நான் வீட்டைவிட்டு கிளம்பிவிட்டேன். மழை பிடித்துக்கொண்டது. வீட்டிற்குப் போகட்டுமா?" என்று கேட்டார். "வரவே வேண்டாம். வீட்டிற்குப் போய்விடுங்கள்," என்றேன். பழைய அழகியசிங்கராக இருந்தால், கூட்டம் ஏற்பாடு பண்ணிவிட்டு யாரும் வரவில்லை என்றால் பெரிதாக கவலைப்படுவேன். இப்போதோ தெளிவாக இருக்கிறேன். இந்தக் கூட்டம் ஏன் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அதற்கான பதிலையும் மனதிற்குள் வைத்திருக்கிறேன். பதில் என்ன தெரியுமா? வெறுமனே. இக் கூட்டத்தில் பேச சா கந்தசாமியையும், யவனிகா ஸ்ரீராமனையும் கூப்பிட்டேன். சா கந்தசாமி சிறிது நேரத்தில் வந்து

பொம்மை செய்யப் பழகும் குயவர்கள்

வயலோர நீர்த்தொட்டியின் நிழலும் கலங்கிய குளத்து நீரின் சுவையும் பாதங்களை கறையாக்கும் செம்மண் பாதைகளும் தின்னத் தின்னத் திகட்டாத பனங்கிழங்கும், பனஞ்சுளையும் பௌர்ணமி நிலவாய் ஆகிப்போன கோடை விடுமுறையின் வெக்கையான பொழுதுகளும் நடசத்திரங்கள் வந்து குதித்து விளையாட ஆசைப்படும் கண்ணாமூச்சி ஆட்டங்களும் பத்து பைசா ஆரஞ்சு மிட்டாயின் ருசியில் பேரின்ப பேரானந்தத்தை அடைந்துவிடும் ஐம்பொறிகளும் பணத்தை வைத்து எவரையும் எடைபோடத் தெரியாத பளிங்குகளாய் உருளும் பால்யவெளிப் பயணங்களும் அனைவரையும் பிள்ளையாராய் பிடிக்க நினைத்து குரங்காக்கிய பள்ளியும்,சமூகமும்,ஊரும்,நாடு ம் ஒரு சில பிள்ளையாருக்காக குரங்கான நாங்களும்...

சிங்கம் -------

சிங்கம் என்றால் சிறுவயது முதலே எனக்கு பயம். கதை கதையாக கேட்டிருக்கின்றேன். சிங்கம் என்று சொல்லி ஊட்டிவிட்டால் முரண்டுபிடிக்காமல் வாங்கிக்கொள்வேனாம். தொலைக்காட்சிப் பெட்டிகளில் கூரான நகங்களால் மான்களின் வயிற்றை கிழித்துண்பதை பார்த்து நடுங்கியிருக்கின்றேன் பலமுறை. அடிக்கடி எனக்குள் வியர்க்கும். என்னை தின்றுவிடுமோ என்னும் பயம். பலநாள் கழித்து பரிதாப சிங்கமொன்றை பார்த்தேன். வண்டலூர் மிருகக்காட்சிசாலையில் முடிக்கொட்டி,உடல்மெலிந்து சிறுவர்கள் சப்பிப்போட்ட ஐஸ் குச்சிகளை எதிர்க்க திராணியற்று கம்பிகளுக்கு அப்பால். இப்போதும் எனக்குள் பயம். வேறுவிதமாக. என்னை தின்றிருந்தால் கூட வந்திருக்காது இந்த பயம்.

சில குறிப்புகள்

ச மீபத்தில் ஒரு பிரயாணத்தின்போது நான் படித்தப் புத்தகம் மகேஷ்பட் எழுதிய A Taste of லைப். இப்புத்தகம் யூ ஜி கிருஷ்ணமூர்த்தியின் கடைசி தினங்களைப் பற்றி விவரிக்கிறது. மகேஷ்பட், லாறி, சூசைன் மூவர்தான் கடைசிவரை யூ ஜி யைப் பார்த்துக்கொள்கிறார்கள். யூஜிக்கு அவர் மரணம் பற்றி நிச்சயம் தெரிந்து விடுகிறது. அவர் பார்க்க விரும்புகிற நண்பர்கள் அனைவரையும் அழைத்துப் பார்க்கிறார்கள். எல்லோரையும் உடனே உடனே போகவும் சொல்லி விடுகிறார். இதாலியில் உள்ள வலேக்ராஸியா என்ற இடத்தில் அவர் மரணம் நிகழ்கிறது. அவருடைய மரணம் குறித்து அவரிடமே உரையாடுகிறார்கள். "நீங்கள் இறந்தபிறகு உங்கள் உடலை என்ன செய்வது?" என்று கேட்கிறார்கள். "தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள்,"என்கிறார் யூஜி. தன்னை ஒரு அவதார புருஷராக யாரும் கருதக் கூடாது என்பதில் யூஜி கறாராக இருப்பவர். மரணத்திற்குப் பிறகு யாரும் கொண்டாடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். மகேஷ்பட்டால் யூஜியின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருக்கு யூஜியின் மரணம் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது. இப் புத்தகம் இரண்டு பகுதிகளாகப்

மூன்று கவிதைகள்

கவிதை (1) கடவுளின் கனவுகளில் ஒன்றை திருடி என் அலமாரிக்குள் ஒளித்து வைக்கிறேன் காணாது தவிக்கும் கடவுள் மூளைக்குள் விஷமேறி துடிக்கிறார் ஜோதிமயமான கடவுள் காற்றுவெளியில் சில்லிட்டுப்போய் கருத்துப்போனார் ஒளித்து வைத்த கடவுளின் கனவை எடுத்துப்பார்க்கிறேன் கடவுளின் கடைவாயில் பற்கள் முளைத்து கோரக்குருதி வழிகிறது மீண்டும் அலமாரிக்குள் வைத்து பூட்டிவிடுகிறேன் கவிதை (2) பத்து வருடங்களுக்குப் பிறகு கடிதம் வந்தது உன்னிடம் இருந்து நிறைய எழுதியிருந்தாய் ... நீயும் நானும் விளையாடிய , கதை பேசிய , கனவு விதைத்த பொழுதுகளை ... நாம் தொடர்பற்று இருந்த நாட்களின் சிறு குறிப்பும் இல்லை உன் கடிதத்தில் மடித்து வைக்கிறேன் உனக்கு பதிலாய் நம் பழங்கதைகள் பேச ... கவிதை (3) சொந்தமாய் வீடு வாங்கி குடிபுகுந்தேன் ஒரு நகர அடுக்ககத்தில் ..! அப்பா வந்திருந்தார் வீட்டுக்கு ... என் மகனிடம் உங்க அப்பா சின்ன குழந்தையாய் இருந்த போது சூரிய , சந்திர , நட்சத்திரங்களுடன் வானம் இருந்தது ... புழுதி அப்பிய மண்ணும் இருந்தது ... மழை நனை

பேசும் மௌனங்கள்...

எப்போதும் பேசிக்கொண்டே இருக்கின்றன உன் மௌனங்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறேன் உன் மௌனங்களோடு எப்போதாவது பேசிக்கொள்ளும் நம் மௌனங்கள் நம் இருவரையும் புறம் தள்ளி . 0

இலக்கியக் கூட்ட அறிவிப்பு

27.09.2009 ஞாயிறு மாலை 6 மணி முதல் 9 மணிவரை கருத்தரங்கு அறை, தேவநேய பாவணர் மைய நூலகம், அண்ணா சாலை, சென்னை 2 கவிதை வாசிப்பும், கவிதைக் குறித்து உரையாடலும் நடைபெற உள்ளது. எழுத்தாளர் சா கந்தசாமி, மெல்ல நகர்ந்த நூற்றாண்டு என்ற தலைப்பில் மெளனியைக் குறித்துப் பேசுகிறார். கவிஞர் யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் குறித்து உரையாடுகிறார். கலந்து கொள்பவர்கள் கவிதைகள் வாசிக்கலாம். வரவும்.

பழம் புத்தகக் கடை

பு திய புத்தகங்களை விற்பனை செய்யும் கடைகளைவிட பழைய புத்தகங்களை விலைக்கு வாங்கும் - வாங்கி விற்கும் கடைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. என்னடைய போக்குவரத்து அங்கு அதிகமிருக்கும். அந்தக் கடைகளில் பொக்கிஷங்கள் பல தேடத் தேடக் கிடைத்திருக்கின்றன. பழைய புத்தகக் கடைகளில் ரகம் பலவுண்டு. மிக மிக மலிவான மட்டமான புத்தகங்கள், பத்திரிகைகள் இவற்றோடு பழைய பிளாஸ்டிக் பொருட்கள்இ பாட்டில்கள் ஆகியவற்றையும் வைத்து வியாபாரம் செய்யும் வகை ஒன்று. மிக உயர்ந்த அரிதான நூல்களையும் பத்திரிகைகளையும் வைத்து வியாபாரம் செய்யும் கடைகள் ஒரு பக்கம். இரண்டுக்கும் இடைப்பட்ட தரத்தில் ஒரு ரகம். இந்தக் கடைகளில் வாடகை நூல் நிலைய வசதியை வைத்திருப்பார்கள். ஆனால் அந்த வகையில் வாடகைக்குக் கிடைக்கும் நூல்கள் மலிவும், சாதாரண ஜனரஞ்சமானவையுமானதாக இருக்கும். நம்மில் ஒவ்வொருவனும் வாழ்ந்து கடந்த வந்த நாட்களை நினைவூட்டும் பல புத்தகங்களை - எழுத்தை வாசிக்கும்போது தன் பழைய காலத்தில் மீண்டும் மனத்தளவில் வாழ்ந்து பார்ப்பது ஓர் அற்புத அனுபவச் சிலிர்ப்பு. அதை நமக்கு வழங்கும் வகையில் புத்தகங்களைக் கொண்டிருப்பது பழைய புத்தகக் கடைகளே.

பார்டர் அனுபவங்கள்..

நான் இப்பொழுது ஒரு பள்ளத்தாக்கிற்கு முன்புள்ளேன் .. பனிக்கட்டிகள் என்னை சுற்றி படர்ந்துள்ளது .. வாடைக்காற்று இதயத்தை தொட்டு செல்கிறது .. பெயர் தெறியா பறவையொன்று " க்கி க்கி" என சப்தமிட்டுக்கொண்டே வானில் பறந்து கொண்டுள்ளது .. கவிதை புத்தகம் கையில் வைத்துள்ளேன் கம்பனி கமாண்டரின் விசில் சுப்தம் கேட்கிறது .. சாய்த்து வைத்திரிந்த இன்சாஸ் துப்பாக்கியை எடுத்துகொண்டேன் .. இப்போது கடமையையும் கவிதையையும் சுமந்துகொண்டு செல்கிறேன் ..

நான்,பிரமிள்,விசிறி சாமியார்.......10

பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது சிலசமயம் பிரமிளிடம் கேட்பேன். கவிதை எப்படி இருக்க வேண்டும்? என்று. பிரமிள் எளிதில் பதில் சொல்லமாட்டார். கேட்காததுபோல் இருப்பார். பின் சொல்வார், 'உயிருள்ளதாக இருக்கவேண்டும்,' என்று. பின் அதைப் பற்றி தொடர்ந்து விளக்கமாக எதுவும் சொல்லமாட்டார். எனக்கு அவர் சொன்னதைக் கேட்டு இன்னும் சில கேள்விகள் எழும். உயிருள்ளதாக இருக்க வேண்டுமென்பது சரி, எப்படி அதைக் கண்டு பிடிப்பது. பிரமிளின் இன்னொரு பழக்கம். அவர் யாரையும் மதிப்பதில்லை. சிலர் பெயர்களைக் கேட்டால் கடுமையாக தாக்க ஆரம்பித்துவிடுவார். ஒரு சிறு பத்திரிகை என்றால் குறைந்த பட்சம் 1000 பேர்களுக்குள்தான் வாசிப்பார்கள். பிரமிள், 'படிப்பவர் எண்ணிக்கை அதிகமானால் அது சிறு பத்திரிகை இல்லை,' என்பார். பிரமிளும் நானும் ஒருநாள் நடந்துபோய்க் கொண்டிருந்தோம். தியோசிபிகல் சொசைட்டி முழுவதும் சுற்றி வந்தோம். அங்குள்ள விதவிதமான மரங்களைப் பற்றி பிரமிள் பலவிதமாக சொல்லிக்கொண்டே வந்தார். அவர் மரங்களைக் காட்ட காட்ட நான் அப்போதுதான் அதை புதிய விதமாக அறிந்து கொண்டதுபோல் தோன்றியது. ஒவ்வொரு மரத்தின் விச

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......18

பூனையாய்... புதுவை சீனு. தமிழ்மணி வீடில்லை பல்லாண்டுகளாக கட்டச்சொல்லி அலுத்துப் போனாள் - இல்லாள் 8 x 10 அளவுள்ள வீட்டில் இல்லாள், இருமகள்கள், வீடு முழுக்கப் புத்தகங்கள் எனப் படுக்கவும் முடியாத வீட்டில் பூனையொன்று வந்தது - மூன்று குட்டிகளோடு வாடகை வீட்டில் வாடகை இல்லாமல்

பிசாசுகள் ஒளிந்து கொள்ளும் கவிதைகள்

பிசாசுகள் கவிதைக்குள் ஒளிந்து கொள்வதில்லை கவிதையின் சூடு தாங்காமல் பிசாசுகள் செத்துவிடக்கூடும் பிசாசுகள் மனித உடலில் எவ்வாறு குடியேறுகின்றன எப்படி வாழ்கின்றனென்பதை கவிதைகள் அறியும். பிசாசுகள் விரட்டிய கவிதைகள் மண்ணில் நெடுங்காலம் வாழ்ந்திருக்கின்றன பிசாசுகளின் புகைபடங்கள் யாரிடமுமில்லை. அவை எங்கிருந்து பயிராகின்றன. எப்படி இரவுகளை கடக்கின்றனென்பதை கண்டுபிடிக்கின்றன கவிதைகள். பெண் உதட்டின் வாசனை பிடித்து நுழையும் பிசாசுகளை கவிதைகள் காட்சிப் படுத்துகின்றன இந்தக் கவிதைக்குள் கொதிக்கும் நீரை செலுத்துகிறேன். ஒளிந்திருக்கும் பிசாசுகள் அலறியடித்துச் செல்லக்கூடுமென்று பிசாசுகளுக்கு செல்லமாக நீங்கள் பெயர் வைத்திருக்கலாம் அடிமைத்தனமென்றோ அவமானமென்றோ அச்சமென்றோ ஏதாவது ஒன்று. பிசாசுகளை அடையாளம் காணுங்கள் அதைத் துரத்தும் வழிகளை சொல்லித் தரக்கூடும் ஏதோவொரு கவிதை.

சிறுமழை -----------

முன்னிருக்கையில் அமர்ந்திருக்கும் சிறுமி ஓய்ந்து முடிந்த மழை முத்துக்கள் சொட்டும் பேருந்தின் ஜன்னல் கம்பிகளை விரலால் தொட்டு தொட்டு வெளியே சுண்டுகிறாள். சிறுமழையொன்று பெய்கிறது.

விருட்சம் இலக்கியச் சந்திப்பு

அன்புள்ள நண்பர்களே, வணக்கம். உங்களுடன் நவீன விருட்சம் ஏற்பாடு செய்த கூட்டத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்று நினைத்தபோது, 2 வாரங்கள் கணினியின் மூளை மழுங்கிவிட்டது. கூட்டம் பற்றியும் அதில் கலந்துகொண்டவர்களைப் பற்றியும் கருத்தும், அவர்களுடைய புகைபடங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 16.08.2009 அன்று நடந்த கூட்டம் நவீன விருட்சம் நடத்தும் 51வது கூட்டம். நவீன விருட்சத்தின் கடைசிக் கூட்டம் 2003ல் நடந்தது. ஒரு கூட்டத்தைப் பற்றி உடனே எழுதாவிட்டால், கூட்டத்தில் என்ன பேசினோம் என்பது மறந்தே போய்விடுகிறது. என் விஷயத்தில் இது இன்னும் மோசம். முக்கிய பேச்சாளர்களாக சிவக்குமாரும், ஞானக்கூத்தனும் கலந்து கொண்டார்கள். ஆள் சேகரிக்கும் கூட்டம் இல்லாததால் வருபவர்கள் வரட்டுமென்று விட்டுவிட்டேன். 25 பேர்கள் கலந்து கொண்டார்கள். இந்த 25 பேர்களும் முக்கியமானவர்கள். எல்லோரும் படைப்பாளிகள். பார்வையாளர்கள் என்பது படைப்பாளிகளாகவும், பார்வையாளர்களாகவும் மாறி மாறி தோற்றம் தந்தார்கள். இக் கூட்டம் தேவநேய பாவணர் மைய நூலகத்தில் 16.08.2009ல் மாலை 6மணிக்குமேல் நடைபெற்றது. முன்பு இக் கருந்தரங்கு அறையின் வ

புரியாத பிரச்சினை

சிறுகதை ப த்மநாபனிடமிருந்து போன் வந்தது. ஆச்சரியமாக இருந்தது. கடந்த 4 ஆண்டுகளாக பத்மநாபனிடமிருந்து போன் வரவே இல்லை. அவர் பதவி மாற்றம் பெற்று பந்தநல்லூருக்குச் சென்ற பிறகு என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. சென்னையில் இருக்கும்போது நானும் அவரும் முக்கியமான நண்பர்கள். எல்லா இடங்களுக்கும் ஒன்றாகப் போய்விட்டு ஒன்றாக வருவோம். மேலும் நாங்கள் இருவரும் மேற்கு மாம்பலத்தில்தான் இருக்கிறோம். இன்னும் நானும் அவர் குடும்பமும் மேற்கு மாம்பலத்தில்தான் இருக்கிறோம். அவர் மட்டும் பந்தநல்லூரில் இருக்கிறார். உண்மையில் பந்தநல்லூர் கிட்டத்தட்ட மயிலாடுதுறையிலிருந்து 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையில் அவர் தங்கியிருக்கிறார். நான் தலைமை அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராக பணிபுரிந்து கொண்டு வருகிறேன். பத்மநாபனை பிறகு ஒருமுறைதான் பார்த்தேன். சற்று இளைத்து இருந்தார். அப்போது ரொம்ப நேரம் அவருடன் பேச முடியவில்லை. எங்கள் அலுவலக விதிப்படி தமிழ்நாட்டிற்குள் ஒருவர் மாற்றல் பெற்று போனால் அவர் எந்த இடத்திற்குப் போகிறார்களோ அங்கயே இருக்க வேண்டும். உண்மையில் பத்மநாபன் போனபிறகு எனக்கு கை உடைந்த மா

மழைக் குடை நாட்கள்

மழையையே குடையாக்கி நடந்த நாட்கள் மகா உன்னதமானவை அரைநெல்லிக் கனி தின்று தண்ணீர் பருகும் அனுபவம் போல வாழ்வ்க்கு சுவை, திருப்பம் சேர்ப்பவை. சுத்த வீரனின் விழுப்புண், குருதி, வலியாகி புகழ் உறுதியை முழுமையாய் நிறை நிறுத்துபவை நடக்கும்போது மழை நாட்கள் குளிர் முட்களாகித் தைப்பினும் கடந்த பின்பு சூர்ய கர்வம் அடக்கும் கைக்குட்டையாகி நிழல் தருதலால் மழைக்குடை நாட்கள் நன்றியறிதலுக்குரியவை எப்பொழுதும் தர்மபுரி அரசுக் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறையில் பணிபுரியும் கோ கண்ணன் 1969 ம் ஆண்டு பிறந்தவர். பார்வையிழப்பையும் மீறி பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தவர். ஆசிரியர் பட்டப் படிப்பும் படித்தார்.

Your Voice

Climbing down the steps and walking crossing many a street going past the bazaar-street where things lay spread like the Sea Even after going beyond the tall, strong gateway, some sounds come to fall in the ears. Leaving the light of the outer corridor where voices of the world have faded a little Going into the semi-darkness of the inner-corridor our ancestors’ voices softly whisper secrets in our ears. After entering into the wholesome darkness of the sanctum-sanctorium there comes from within a dark, colourful silence outside, upon things in absolute quietitude as the very light when it reflects At some times I feel that you are with me with hands resting on the lap, right in front of my eyes A song springs from Veena on its own. While talking with my friends, from out of blue your voice drops a sentence. Though it seems familiar yet, wonder and surprise have never withered away

இரு கவிதைகள்

வெளிதனில் புன்னகைக்கும் காலம் கழிவறையில் திரவ சோப்பு கைத்துடைக்க டிஸ்யு பேப்பர் இருக்கை எண் காட்டும் நவீன விளக்கு செல்பேசி,மடிக்கணிணி சார்ஜ் செய்யும் வசதி தண்ணீர் பாட்டில்,சிற்றுண்டி எல்லாம் உள்ள புதிய ஏஸிப்பெட்டி அருகாமை மனிதர்களும் அஃறினையாய் இறுக்கத்தில் ஒளிந்து முகம் காட்டும் குழந்தை உயிர் கொடுத்தது ரயில் பயணத்திற்கு சூழல் கடைசி ரயிலிலிருந்து ஆளரவமற்ற பிளாட்பாரத்தில் எதிர்ப்புறமிருந்து இறங்கிய ஒருத்தி நெருங்கிக் கடக்கையில் கலவர முகத்துடன் இதயம் படபடக்க எட்டிப் போட்டாள் நடையை எதிர்மறை வண்ணத்தை என் மேல் பூசிய அகாலத்தையும் இல்லாதுபோன மனிதர்களையும் மனதார வைதுகொண்டே கழிகிறதென் பொழுது..

நான்கு சின்னஞ்சிறு கவிதைகள்

கவிதை ஒன்று கீழே விழுந்துகிடந்த ரூபாய்த் தாளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன் யார் யார் கைகளிலிருந்து தப்பி விழுந்ததோ என்ன பாடுபட்டதோ என்ன துரோகம் செய்ததோ கவிதை இரண்டு எண்ணற்ற வழிகளில் பயணம் செய்துகொண்டிருக்கிறோம் ஆனால் சிலரை மட்டும் பார்க்கிறோம் இன்னும் சிலரிடம்தான் பேசுகிறோம் இன்னும் இன்னும் சிலரிடம்தான் உறவு வைத்துக்கொள்கிறோம். கவிதை மூன்று நீண்ட சோம்பல் என்னிடம் ஒட்டிக்கொண்டது நாற்காலியில் உட்கார்ந்தால்போதும் தூக்கம் கண்ணைச் சுழற்றும் ஒன்றும் தோன்றாமல் ஒரு நிமிடம் என்னால் இருக்க முடியவில்லை கவிதை நான்கு பிழிய பிழிய மழைப்பெய்து விழியை வைத்தது கட்டுப்பாடற்ற முறையில் ஒழுங்கு தப்பி தெறித்தன வாகனங்கள்

உல்டா

என் நண்பர்கள் இருவர் குறித்து மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள் ஒருவன் உஷாரென்றும் மற்றொருவன் சற்றே மந்தமென்றும் . நானறிந்த வரையில் அவைகள் அப்படியே உல்டா என்பதுதான் அதிலுள்ள விஷேசம்.

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......18

த.அரவிந்தன் பிரசவம் --------------- பிரசவத்திற்காக வந்திருக்கிறது வெள்ளைப் பூனை. பரண் மேல் ஒண்டியிருக்கும் அதற்கு குளிரூட்டப்பட்ட அறையில் காற்றால் நிரம்பிய மெத்தையமைத்துக் கொடுக்கலாம் நாலைந்து மருத்துவர்களை எப்போதும் உடனிருக்க வைக்கலாம் பிரசவ வலி தெரியாதிருக்க அதன் தலையை, உடலைக் கோதி விடலாம் ஈன்று சோர்கையில் பெரிய வஞ்சீர மீனை உண்ணக் கொடுக்கலாம் பத்தொரு தாதிகளை நியமித்து குட்டிகள் உடலில் பிசுபிசுக்கும் பனிக்குட நீரைக் கழுவலாம் பால் காம்புகளை சிறு நேரமும் தேட விடாமல் முதல் பருகலுக்குத் துணை புரியலாம் நாய்கள் கழுகுகள் வாகனங்கள் நுழையாத கூரை வேய்ந்த மைதானம் அமைத்து அவற்றை விளையாட விடலாம் இன்னும் இன்னும் என் குழந்தைகளுக்குச் செய்வதுபோல என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அதற்கு முன்- என் மீதான அதன் நடுக்கத்தைப் போக்க என்ன செய்ய?

நேபாளத்து அம்மா

அ திகாலையில் வந்திருந்த தொலைநகல் ஒரு துயரச் செய்தியைச் சுமந்துவந்திருந்தது . கிஷோரின் தாயார் சுகவீனமுற்றுத் தனது அந்திம நிலையில் இருப்பதாகவும் தனது மகனைப் பார்க்க விரும்புவதாகவும் எழுத்துக்களில் கோர்த்திருந்த அந்தச் செய்தியை இன்னும் அவனுக்குத் தெரிவிக்கவில்லை . கிஷோர் ஒரு நேபாள தேசத்தவன் . அலுவலக உதவியாளாக இந்த நாட்டுக்கு வந்திருக்கிறான் . அவனது வேலைகளும் , நேர்த்தியும் , சுறுசுறுப்பும் அலுவலகத்தில் எல்லோருக்கும் பிடித்திருந்தது . பொதுவாகவே நேபாளிகளிடத்தில் சுத்தத்தையும் நேர்த்தியையும் காணக் கிடைப்பது அரிது . எனினும் இரண்டுமே இவனிடம் மிதமிஞ்சியிருக்க அதனாலேயே எல்லோருக்கும் பிடித்தமானவனாகவும் இருந்தான் . கிடைக்கும் சிறிய ஓய்விலும் எதையாவது எழுதிக் கொண்டே இருப்பான் . பெரும்பாலும் அவை வீட்டுக்கு எழுதும் கடிதமாகவோ அல்லது அவனது தனிப்பட்ட வரவுசெலவுக் கணக்காகவோ இருக்கும் . எப்படியும் மாதத்திற்கு இரண்டு கடிதம் , ஒரு பண டிராப்ட் அனுப்பிவிடுவான் . அக்கடிதங்கள் அவனது மனைவிக்கு எழுதப்ப