Skip to main content

Posts

கொரோனாவின் கொடூர முகம்..

  துளி 196 அழகியசிங்கர் கொரானாவால் ஏற்படும் மரணத்தை விட, அது குறித்து ஏற்படும் அச்ச உணர்வு காரணமாகப் பலர் இறந்து விடுகிறார்கள். சில தினங்களுக்கு முன் கி.ரா இரங்கல் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி திருப்பூர் கிருஷ்ணனை அழைத்தேன். அப்போதுதான் ஒரு அதிர்ச்சியான தகவலைத் தெரியப்படுத்தினார். அவர் வீட்டில் மூவருக்கும் கொரானா என்று. அவர் புதல்வனை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகக் கூறினார். அவரும் அவர் மனைவியும் வீட்டிலேயே வைத்தியம் பார்த்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். யாரிடமும் சொல்லாதீர்கள் என்று அப்போது கூறியதால் நான் யாரிடமும் இதைப் பற்றி தெரிவிக்கவில்லை. அவருடைய பையன் இளவயது என்பதால் அவருக்கு ஒன்றும் ஆகாது என்று நினைத்தேன். இன்று அவர் புதல்வன் இறந்து விட்டானென்ற செய்தியை என்னால் நம்பமுடியவில்லை. அதிர்ச்சி. அவர் எப்படித் தாங்கிக்கொள்வார்? குறிப்பாகத் திருப்பூர் கிருஷ்ணனின் மனைவி எப்படித் தாங்கிக் கொள்வார்? உண்மையில் கொரானா என்ற கொடிய நோயைவிட, அதன் பயம் ஒருவரை கொன்று விடும் என்று தோன்றுகிறது. அதனால் தயவு செய்து கொரானா செய்திகளைப் படிக்காதீர்கள், தினசரிகளைப் பார்க்காதீர்கள், க...

ஒரு கதை ஒரு கருத்து -லா.ச.ரா உத்தராயணம்

  அழகியசிங்கர் லா ச ராவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் என்ற தொகுப்பில் 23 கதைகளில் உத்தராயணம் ஒரு கதை. நினைவோடை உத்தியில் எழுதப்பட்ட கதை. தன்னைப் பற்றிச் சொல்கிற மாதிரி கதை. அப்படிச் சொல்லிக்கொண்டே போகும்போது எதை எதைச் சொல்லலாம் எதை எதைச் சொல்லக் கூடாது என்பது இக் கதையில் ஒழுங்காகக் கொண்டு வருகிறார். எல்லாவற்றுக்கும் மொட்டை மாடிதான். அதிகம் குடி இல்லாத ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் வீடு கட்டி வந்திருக்கிறார். பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். இதெல்லாம் கதையில் நேரிடையாக சொல்லப்படவில்லை. கதையை இப்படி ஆரம்பிக்கிறார். ‘அந்தா கொண்டைக்கு எல்லாருக்கும் கொடுப்பனை இருக்காது. நெற்றியிலிருந்து பின்னுக்கு இழுத்து, அழுந்த வாரி இறுகப் பிணைத்து எழுப்பி கொண்டையின் கோபுரம் நெஞ்சை முட்டுகிறது.’ வயதானவர் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு கனவு காண்கிறார். இவர் கனவு காண்பதற்குத்தான் மொட்டை மாடிக்கே போகிறார். அவர் வீட்டில் உள்ளிருந்து மொட்டை மாடிக்கு ஏணி மூலமாகத்தான் போக முடியும். அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறார் தினமும். தூக்கக் கலகத்...

52வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. 22.05.2021

  அன்று  சனிக்கிழமை மை மாலை 6.30 மணிக்கு. அதன் காணொளி.  அழகியசிங்கர் சூம்  மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 52வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி நேற்று (22.05.2021) நடந்தது.  மொழிபெயர்ப்புக் கவிதை வாசிப்புக் கூட்டம்.  அதன் காணொளியை இப்போது கண்டு களியுங்கள்.

சூம் மூலமாக விருட்சம் - குவிகம் நடத்தும் கி.ராஜநாராயணனின் நினைவைப் போற்றி கூட்டத்தின் ஒளிப்பதிவு.

  அழகியசிங்கர் 17.05.2021 அன்று காலமான  முதுபெரும்  எழுத்தாளர் கி. ராஜநாரயணின்  நினைவாக  21.05.2021 அன்று  வெள்ளிக்கிழமை ûஅ மாலை 6.30 மணிக்கு நடந்த கூட்டத்தின் ஒளிப்பதிவு. கீழ்க்கண்ட படைப்பாளிகள் கலந்துகொண்டு பேசினார்கள். உயர் திரு  1. பா. செயபிரகாசம்  2.  சிட்டி வேணுகோபாலன் 3.  பாரதிமணி   4. இந்திரன் 5.  அம்ஷன்குமார்  6. தமிழ்ச்செல்வன் 7.   நாறும்பூநாதன்   8.  டாக்டர்  பாஸ்கரன்  9.  உதயசங்கர்  10. ரவீந்திரன் 11. எஸ்.வி வேணுகோபாலன்    

52வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. 22.05.2021 அன்று சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு.

  அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 52வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. நாளை (சனிக்கிழமை) மாலை 6.30மணிக்கு 22.05.2021ல் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியைச் சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.இந்த முறை மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிக்க அழைக்கிறேன். தமிழில் ஏகப்பட்ட மொழிபெயர்ப்புக் கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்திய மொழிகளிலிருந்து வந்துள்ள மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிக்க அழைக்கிறேன். புதிதாக இந்தக் குழுவில் வாசிக்க வருபவர்கள் தங்கள் கவிதைகளை வாசிக்கலாம். அவர்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு. 52வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. 22.05.2021 அன்று சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு. Topic: விருட்சம் பெருமையுடன் வழங்கும் 52வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி Join Zoom Meeting https://us02web.zoom.us/j/85212071869... Meeting ID: 852 1207 1869 Passcode: 358581

சூம் மூலமாக விருட்சம் - குவிகம் நடத்தும் கி.ராஜநாராயணனின் நினைவைப் போற்றி கூட்டம்.

  சூம் மூலமாக விருட்சம் - குவிகம் நடத்தும் கி.ராஜநாராயணனின் நினைவைப் போற்றி கூட்டம். அழகியசிங்கர் சமீபத்தில் காலமான முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாரயணின் நினைவாக நாளை (வெள்ளிக்கிழமை) 21.05.2021 அன்று மாலை 6.30 மணிக்குக் கூட்டம் நடத்துகிறோம். கீழ்க்கண்ட படைப்பாளிகள் அவர் குறித்துப் பேச உள்ளார்கள். உயர் திரு 1. பா.செயபிரகாசம் 2. வண்ணதாசன் 3. சிட்டி வேணுகோபாலன் 4. பாரதி மணி 5. இந்திரன் 6. பஞ்சாங்கம் 7. இளவேனில் 8. கீரா பிரபி 9. அம்சா 10. அம்ஷன்குமார் 11. தமிழ்ச்செல்வன் 12. சமயவேல் 13. நாறும்பூநாதன் 14..டாக்டர் பாஸ்கரன் 15.எஸ்.வி வேணுகோபாலன்

'மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்' என்ற டயான் ப்ரோக்கோவன் என்ற நாவலை முன் வைத்து...

  அழகியசிங்கர் டாக்டர் பாஸ்கரன், இந்தப் புத்தகத்தை - 'மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள் - என்ற புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தார். கிட்டத்தட்டப் பல மாதங்கள் நான் படிக்காமலே இந்தப் புத்தகத்தை வைத்திருந்தேன். திரும்பவும் அவர் ஞாபகப்படுத்தியபோது, இன்று (27.10.2020) இந்தப் புத்தகம் முழுவதும் படித்து முடித்தேன். இதை ஒரு நாவல் என்று சொல்லலாமா? குறுநாவல் என்று சொல்லலாமா? ஒரு நாவல் என்றால் குறைந்த பட்சம் 80 பக்கங்களாவது இருக்க வேண்டும். இந்தப் புத்தகம் 71 பக்கங்களில் முடிந்து விடுகிறது. காலச்சுவடு பதிப்பகம் நவீன உலக கிளாசிக் நாவல் வரிசையில் இந்தப் புத்தகத்தைச் சேர்த்துள்ளது. டயான் ப்ரோகோவன் (பிறந்த வருடம் 1976) ஃப்ளெமிஷ் மொழியில் எழுதிய இந்த நாவல், ஜெர்மன் மொழியில் மட்டும் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளன. ஜூல்ஸுன் மரணம் இயல்பாக இந்த நாவலில் விவரிக்கப்படுகிறது. ஜூல்ஸு மரணத்தோடு நாமும் பயணம் செய்கிறோம். ஜூல்ஸ் இறந்து போயிருந்தார். ஆனால் முதலில் அவர் தன் கடமையைச் செய்து முடித்திருந்தார். மேஜையைச் சீர்செய்து காபி கலந்து வைத்திருந்தார். 'உயிரோடு இருப்பவர்கள் நிலைமைதா...