Skip to main content

Posts

சில குறிப்புகள்

     அழகியசிங்கர்     நேற்று காலையில் வழக்கம்போல் (சமீப காலமாய்) நடை பயிற்சி செய்துவிட்டு ராஜாமணி வீட்டிற்குச் சென்றேன்.  என்னைப் பார்த்தவுடன் ராஜாமணி, üதி.க.சி இறந்துவிட்டார்,ý என்ற செய்தியைச் சொன்னார்.      எனக்கு தி.க.சியைப் பற்றிய எண்ணம் ஓடிற்று.  காலையில் இந்தச் செய்தியைச் சொன்ன ராஜாமணியிடம் கோபம்.  பின் நான் வீட்டிற்கு வந்து, தினமணியைப் பார்த்தபோது அதில் செய்தி வந்திருந்தது.     எனக்கு தி.க.சியை 20 ஆண்டுகளுக்கு மேல் தெரியும்.  நவீன விருட்சம் ஆரம்ப காலத்திலிருந்து அவர் என் நண்பர்.  வல்லிக்கண்ணனும், தி.க.சியும் நவீன விருட்சத்திற்குக் கடிதம் எழுதாமல் இருக்க மாட்டார்கள்.  நான் முதல் தடவை திகசியை அசோக மித்திரன் வீட்டில்தான் சந்தித்தேன்.      எந்தப் பத்திரிகையும், புத்தகத்தையும் விடாமல் படிப்பார்.  படித்தவுடன் ஒரு கார்டில் அழகான கையெழுத்தில் தன் அபிப்பிராயத்தை எழுதாமல் இருக்க மாட்டார். வல்லிக்கண்ணனும் அப்படித்தான்.     இருவர் கையெழுத்தும் அழக...

மாதங்கள் கடந்து போதல்

ந.பெரியசாமி மேசையின்மேல் இரண்டு கண்ணாடி கோப்பைகள் ஒன்றில் பொவண்டாவையும் மற்றதில் பியரும் நிரப்பினீர்கள் புன்னகைத்து அருந்தத் துவங்கினீர்கள் எப்படியோ இம்மாதத்தை கடந்தாயிற்று நிம்மதி பெருமூச்சொன்றை விட்டீர்கள் அசட்டையான சிரிப்பை உதிர்த்து எனக்கு இன்னும் கடக்கவில்லை தேதி ஐந்தாகிவிட்டதே மறுபடியும் நகைத்து அதுகூடவா தெரியாது எனக்கு முடிவடையவில்லை சம்பளத் தேதியை சொல்கிறீர்களா இல்லை எனக்கும் ஒன்றாம் தேதிதான் புரியவில்லையே வேறென்ன குழப்பத்தோடு கடைசி துளியை வழியவிட்டீர்கள் இம்முறை கொஞ்சம் சப்தமாக சிரித்து உங்களால் புரிந்துகொள்ள இயலாதுதான் மாதங்களை கடப்பது உங்களுக்கு தேதிகள் தீர்மானிக்கும் எங்களுக்கோ எங்களின் உதிரப்போக்கு.

நாம் என்ன செய்ய முடியும்? - சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதை

 தமிழாக்கம்: ராமலக்ஷ்மி இருக்கிறது ஒரு சாந்தம் மனிதத்தின் சிறப்பில் சில புரிதல்கள், சில நேரங்களில் செயல்களில் துணிச்சல் மொத்தத்தில் அது ஒரு ஆற்றல் அதிகம் காணப்படாத ஒன்றாக உலகத்தில். ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் ஒரு பெரிய விலங்கினை ஒத்ததாக எந்த ஒன்றாலும் எழுப்ப முடியாததாக. தூண்டப்படுகையில் விஸ்வரூபமெடுக்கின்றன முரட்டுத்தனமும், சுயநலமும், நேர்மையற்ற தீர்ப்புகளும், கொலைகளும். நாம் என்ன செய்ய முடியும், இந்த மனிதத்தை? எதுவும் செய்ய முடியாது. முடிந்தவரை விலகி இருப்போம் துஷ்டரை, விஷமிகளை, முட்டாள்களைக் கண்டது போல். ஆனால் ஜாக்கிரதை, நம்மிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள சட்டங்கள் இயற்றியிருக்கிறது மனிதம் எந்தக் காரணமும் இல்லாமல் அது நம்மைக் கொல்லக் கூடும் அதனிடமிருந்து தப்பிக்க சூட்சமம் வேண்டும் தப்பிக்கிறார்கள் வெகு சிலர் நாம் தப்பிப்பது நம் கையில் சரியான திட்டம் வேண்டும் தப்பித்த எவரையும் இதுவரை நான் சந்திக்கவில்லை உயர்ந்த, புகழ்பெற்ற மனிதர்கள் சிலரைச் சந்தித்திருக்கிறேன் அவர்களாலும் தப்பிக்க முடியவில்லை மனிதத்துக்கு மட்டும...

எதையாவது சொல்லட்டுமா.....93

அழகியசிங்கர் இந்தப் புத்தாண்டில் என் நண்பரிடமிருந்து வாழ்த்துக் கடிதம் வந்தது. ஒரு கார்டில் எழுதியிருந்தார். புத்தாண்டு வாழ்த்து என்று மேலே குறிப்பிட்டு பாரதியார் கவிதை வரிகளை இப்படி எழுதியிருந்தார். இனி என்னைப் புதிய உயிராக்கி எனக்கேதும் கவலையறச் செய்து மதி தன்னை மிகத் தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டிக்கச் செய்வாய் - பாரதி இப்போதெல்லாம் கார்டில் வாழ்த்துச் செய்தி அனுப்புவது என் நண்பர் மட்டும்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். என் எழுத்தாள நண்பர்களில் பலர் ஒருவருக்கொருவர் வாழ்த்துச் செய்தியெல்லாம் சொல்வதில்லை. பொதுவாக புத்தாண்டு என்பதை கண்டுகொள்வதில்லை. ஆனால் அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்துக்கொள்வோம். கைக் குலுக்கிக்கொள்வோம். நானும் பல ஆண்டுகளுக்குமுன் என் நண்பர்களுக்கு கார்டில் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி அனுப்பி இருக்கிறேன். புத்தாண்டு வாழ்த்துகள் என்றுதான் அனுப்புவேன். அதற்கு சிலர் பதில் வாழ்த்துத் தெரிவிக்காமல் இருக்கமாட்டார்கள். அழகான கையெழுத்தில் வல்லிக்கண்ணன், தி.க.சி, பழமலய் போன்ற படைப்பாள நண்பர்கள் பதில் எழு...

a story by KRISHNA

மக்கானாபேட்டை வருமான வரி அலுவலக பின்புறத்தில் ஒரு குறுக்குச் சந்து உள்ளது. அது, இரண்டு அடுக்கு மாடி ஒன்றில் சென்று முடியும். அதன் ஒரு பகுதி மேன்ஷனாக இயங்கி வந்த காலத்தில் வினயும், மீரானும் எனக்கு அறிமுகமானார்கள். வினய், அமெரிக்காவை மையமாக வைத்து இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவன். மீரானுக்கு, வங்கியில் லோன் வாங்கித் தரும் பணி. பழகியிருந்த குறைவான நாட்களிலேயே இயல்பில் வினயுன், மீரானும் இரண்டு எதிர் நிலை மனிதர்கள் என்பதை தெரிந்துகொண்டேன். ஆனா, நான் அதில் நடுவன். மீரான் எங்களிருவரை விட வயதில் ஒன்றரை மடங்கு மூத்தவந்தான் என்றாலும், "அண்ணன்-னு எல்லாம் சொல்லாதே, பேர் சொல்லியே கூப்பிடு." என்பான். ஆந்திராவிலிருந்து வந்திருந்த வினய், ஊரில் இருக்கும் தனது பெற்றோரிடத்தில் பேசாத நாட்களை எண்ணித்தான் சொல்ல வேண்டியிருக்கும். தினமும் ஒரு ஐந்து நிமிடமாவது பேசினாலொழிய தூங்கமாட்டான். எனக்கும் பெற்றோரிடம் பேசுகின்ற வழக்கம் இருந்தாலும் வாரம் ஒரு முறையோ இரண்டு வாரத்தில் ஒரு தடவையோ மட்டுமே பேசுபவன். அதுவும் சிரத்தையில்லாமல் (எப்போது நீ சிவப்பு பொத்தானை அழுத்துவாய்) ஓரிரு நிமிடங்கள் ப...
37வது சென்னை புத்தகக் காட்சியில் விருட்சம் பங்கேற்கிறது.  ஸ்டால் எண் 741ல் பங்கேற்க உங்களை அன்புடன்அழைக்கிறேன். 2012ல் நான்கு புத்தகங்களும் 2013ல் 6புத்தகங்களையும் கொண்டு வந்துள்ளேன்.  புத்தகங்கள் பற்றிய விபரம் இதோ: ரோஜா நிறச்சட்டை - சிறுகதைகள் - அழகியசிங்கர் - விலை ரூ.100 - பல ஆண்டுகளாக கதை எழுதி வருபவர்.  கதை எழுதும்போது  எப்போதும் உற்சாகமாகவே இருந்திருக்கிறார். அனுபவத்தை ஒரு கேடயமாக வைத்து கதைகள் எழுதினாலும்,  அனுபவம் வேறு, கதைகள் வேறு.   கிட்டத்தட்ட 60 கதைகள் எழுதியிருக்கிறார். வினோதமான பறவை - கவிதைகள் - அழகியசிங்கர் - விலை ரூ.60 - üஅழகியசிங்கர் கவிதைகள்ý என்ற தொகுதிக்குப் பிறகு வெளிவரும் தொகுப்பு இது.  எழுதிய கவிதைகள் பல எந்தத் தேதியில் எந்த வருடத்தில் என்ற குறிப்பை வைத்துக்கொள்ளாமல் எழுதப்பட்டவை. ஓசிப்மெண்டல்ஷ்டாம் கவிதைகள் - மொழிபெயர்ப்பு பிரம்மராஜன் - விலை ரூ,20 - இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த ரஷ்யக் கவிஞரான ஓசிப்மெண்டல்ஷ்டாம் பற்றிய முதல் அறிமுக நூல் இது. மெண்டல்ஷ்டாமின் 22 கவிதைகளும் அக்மேயிச இயக்கம் பற்றிய நூல், ழ கவிதைகள் - கவ...

எதையாவது சொல்லட்டுமா....92

அழகியசிங்கர்     2004ஆம் ஆண்டு என் பெண்ணிற்கு திருமணம் செய்தபோது ஆறு லட்சத்தில் கல்யாணச் செலவு முடிந்துவிட்டது.  பெரிய கடன் எதிலும் மாட்டிக்கொள்ளவில்லை.  அதே திருமணத்தை அதே மாதிரி இப்போது நடத்தினால் முப்பது லட்சம் ஓடிவிடும்.  பெரிய கடனாளியாக மாறி இருப்பேன்.  இன்றைய கல்யாணத்தில் சத்திரம் பல மாதங்களுக்கு முன்பே முன் பதிவு செய்ய வேண்டி உள்ளது.  ஒரு கல்யாணம் நடத்த பல மாதங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.  மணப்பெண்ணும் பையனும் வெளிநாட்டில் இருந்தால் ஆண்டுக் கணக்கில் காத்துக்கொண்டிருக்க வேண்டும்.      எனக்குத் தெரிந்து கல்யாணத்தை சிக்கனமாக நடத்த வேண்டுமென்று தீர்மானித்து நடத்திய சிலரைத் தெரியும்.  என் அலுவலக நண்பர் ஒருவர், ஒரு பெண்ணுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்.    நான் அவரையும் அந்தப் பெண்ணையும் பார்த்தேன்.  üüஎன்ன பார்க்கிறீங்க? இவள் என் மனைவி,ýý என்றார்.             "எப்போது திருமணம் செய்து கொண்டீர்கள்?"என்று கேட்டேன்.    ...