அழகியசிங்கர் சமீபத்தில் எனக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது. மாஜிக்கல் ரியாலிசம் என்றால் என்ன? என்பதுதான் பிரச்சினை. தமிழில் யார் யார் இதுமாதிரி வடிவத்தில் கதைகள் எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டு வருகிறேன். சரி, உண்மையில் ஆங்கிலத்தில் வந்துள்ள மாய யதார்த்தக் கதையைப் படிக்கலாமென்று குகூளில் தேடினேன். நூற்றுக் கணக்கான கதைகளைக் கண்டு பிடிக்க முடிந்தது. The Remember by aimeebender என்பவர் எழுதிய கதையைப் படித்தேன். மார்குவேஸ் எழுதிய கதையைப் படித்தேன் Aimeebender கதையில் அவள் காதலன் உருமாறி ஒருநாள் குரங்காகவும் அதன்பின் ஆமையாகவும் மாறிவிடுவதுபோல் வருகிறது.அக் கதை வேடிக்கையாக எழுதப் பட்டிருக்கிறது. அந்தக் கதையுடன் மட்டும் நான் திருப்தி அடையவில்லை. A very Old Man with Enormous Wings by Gabriel Garcia மார்க்கில்ஸ் இக் கதையை எனக்குப் படிக்க இரா. முருகன் அளித்தார். இந்த இரண்டு கதைகளையும் மொழி பெயர்க்க உள்ளேன். Magical realism, or magic realism, is an approach to literature that weaves fantasy and myth into everyday life. What’s real? Wh...