அழகியசிங்கர் இன்று மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது நண்பர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து ( கசடதபற ஆசிரியர்) போன் வந்தது. காலை 7.30 மணிக்கு சா. கந்தசாமி இறந்து விட்டதாகத் தகவல் கூறினார். இந்த மாதம் சில தினங்களுக்கு முன்னால்தான் கந்தசாமி 80வயதை முடித்திருந்தார். அப்போது அவர் மருத்துவ மனையில் தீவிர கண்காணிப்பிலிருந்தார் . “ அவருடைய பிறந்தநாள் பற்றி முகநூலில் எழுதலாமா என்று சந்தியா நடராஜனைக் கேட்டேன். அவர் வேண்டாம் என்று சொன்னார். அவர் சொன்னது நியாயமாகப் பட்டது. அவர் மருத்துவமனையி லி ருந்து மீண்டு வரட்டும் என்று காத்திருந்தோம். இன்று மரணமடைந்து விட்டார். என் முக்கியமான எழுத்தாளர் வரிசையில் அவரும் ஒருவர். பல ஆண்டுகளாக நான் அவரிடம் நட்புடன் பழகி வருகிறேன். உற்சாகி . தோன்றுவதைச் செய்து முடித்து விட வேண்டுமென்று நினைப்பவர். அவருடன் பழகினால் முதுமையே தெரியாது. நான் எழுதிய புத்தகங்களைப் படிக்கக் கொடுத்த...