Skip to main content

சுஜாதாவிற்கு ஏன் தெரியவில்லை

அழகியசிங்கர்





          சுஜாதாவின் பிறந்தநாளான இன்று இதைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.


மரபு உள்வட்டம் என்ற தலைப்பின் கீழ் சுஜாதா கணையாழி கடைசிப் பக்கத்தில் எழுதியிருந்தார்.  ஆண்டு : ஜøன் 1992ல்.  மரபுக் கவிதைக்காகப் போராளிகளின் சங்கம் அமைத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.  சுஜாதாவின் நண்பர் ஐஸôக் நிறுவனத்தின் பணிபுரியும் விருத்தம் விசுவநாதன்தான் இதை அமைப்பாளர் என்று குறிப்பிட்டுள்ளார்.  இந்தச் சங்கத்தில் அங்கத்தினராகச் சேர விரும்புவோர் ஒரு ரிப்ளை தபால் கார்டில் இரண்டுக்குக் குறையாத வரியாய் கொண்ட ஏதாவது ஒரு மரபுக் கவிதை எழுத வேண்டும். (ஆசிரியப்பா, வெண்பா. கலிப்பா, வஞ்சிப்பா இந்த வகைகளில் தாழிசை துரை விருத்தம் எதையும் தேர்ந்தெடுக்கலாம்) பூ, காதல், இயற்கைக்காட்சி தவிர்த்து இக்காலத்து எந்தத் தலைப்பிலும் எழுதலாம்.  ஆனால் தலை தட்டாத மரபுக் கவிதையாக இருக்க வேண்டியது முக்கியம்.

நான் கல்லூரியில் படித்த காலத்தில் எழுதிய வெண்பா ஒன்றைச் சுஜாதா மரபு உள் வட்டத்திற்கு அனுப்பினேன். என் கவிதை வருமாறு:

பித்தம் தலைக்கேறி பீய்ந்தத் துணியிலே
சுத்தம் படராத சுந்தரியை - சைத்தானின்
" பார்வை மயங்கி பவனி வருகிறது"
போர்வையில் போஙலிக் கிழம் 
என் கவிதையை இலக்கியத்தின் வகைகள்  (பிப்ரவரி 1993) என்ற தலைப்பின் கீழ் சுஜாதா கீழ்க்கண்டவாறு மாற்றி பிரசுரம் செய்துள்ளார். என் தொடக்கால வெண்பாவை மாற்றம் செய்திருப்பவர் பாவலர் கோ என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்படி மாற்றம் செய்திருப்பவர் என் கவிதையின் அர்த்தத்தையே மாற்றி உள்ளார். என் கவிதை எங்கே சரியில்லை என்பது இன்று வரை தெரியவில்லை.

மாற்றிய வெண்பா

பித்தம் பிடித்தவள்போல் பொத்தல் துணிபூண்ட
சுத்தம் பறிபோன சுந்தரியை -முத்தமிட"
பார்வை மழுங்கியும் பல்லை இளிக்கிறதே
" போர்வையில் போகும் கிழம்.

என்  கவிதையின் அர்த்தமே மாறி விட்டது.  ஆனால் சுஜாதாவிற்கு இது ஏன் தெரியவில்லை என்பது புரியவில்லை. 

Comments