அழகியசிங்கர்
முகமூடிகளின் உலகம்
அதங்கோடு அனிஷ்குமார்
தேவைகளுக்கேற்ப
தேவைப்படுகின்றன முகமூடிகள்
பூகம்ப மனதின் அதிர்வுகள் அழித்து
புன்னகை பூக்க
கொலைவெறி புதைத்து
கொல்லென்று சிரிக்க
முகமூடிகளின் பொருட்டு
எல்லோரும் தொலைக்கிறார்கள்
முகங்களை
முகமூடிகளின் உலகத்தில்
முகங்கள் கழுவேற்றப்படுகையில்
உயிர்வலியெடுத்து
கதறுகின்றன
யதார்த்தத்தின் குழந்தைகள்
முடியாது இனி
முகமூடிகளற்று
முகம் காட்ட
எந்த முகமூடியணிந்தாலும்
எட்டிப் பார்க்கும்
என் முகத்தை
எப்படி மறைப்பது?
“
நன்றி : நிறங்களின் பேராசைக்காரர்கள் - அதங்கோடு அனிஷ்குமார் - மயூரா பதிப்பகம், 37 தொட்டராயன் கோயில் வீதி, கோயமுத்தூர் 641 009 - பக்: 64 - விலை : ரூ.30 - வெளியான ஆண்டு : 2008 - தொலைபேசி : 93607 89001

Comments