Skip to main content

அஞ்சலட்டைக் கதைகள்

அழகியசிங்கர்


இது என் எட்டாவது கதை.  இந்தக் கதையைப் படித்தபோது ஒரு நிமிடம்தான் ஆயிற்று.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன்.  






கதை 8

ஓட்டம்

பத்மநாபன் அன்றைய செய்திகளைத் தினசரி தாளில் படித்துக்கொண்டிருந்தான்.  காற்றோட்டமாக இருக்கட்டுமே என்று வாசல் வராந்தாவில் படித்துக் கொண்டிருந்தான்.  அவன் மனைவி பட்டு அவனுக்குக் காப்பி தயாரித்துக் கொண்டிருந்தாள்.
வாசலில் நிழலாடியது.  யார் என்று பார்த்தான்.  

"என்ன?"

"உங்களுக்கு என்ன வயது?"

"66"

"உங்கள் மனைவிக்கு"

"63"

"சளி, தும்பல், ஜ÷ரம் எதாவது இருக்கா?"

"இல்லை."

"பீபிசுகர்."

"உண்டு.  மனைவிக்கு  பீபி"

"நாங்கள் சுகாதாரத் துறையிருந்து வருகிறோம்.  உங்கள் ஏரியாவில் அதிக அளவு தொற்று இருக்கிறது. உங்கள் ரத்த மாதிரி வேண்டும்."
கொஞ்சம் யோசித்தான் பத்மநாபன்.  

"நீங்கள் இன்னும் ஒரு மணி நேரம் கழித்து வர முடியுமா?"

"முடியும்."

       அவர்கள் அந்த இடத்தை விட்டுக் கிளம்பிப் போனார்கள்.

      ஒரு மணி மேலேயே கடந்து  அவர்கள் திரும்பி வந்தார்கள்.

பத்மநாபன் வீடு பூட்டியிருந்தது.

Comments