Skip to main content

Posts

Showing posts from April, 2017

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 61

அழகியசிங்கர்    பயிற்சி ஞானக்கூத்தன்  மனிதன் எங்கும் போக விரும்பவில்லை ஆனால் போய்க்கொண்டுதான் இருக்கிறான் மனிதன் யாருடனும் போக விரும்பவில்லை ஆனால் யாருடனாவது போய்க் கொண்டிருக்கிறான் மனிதன் எதையும் தூக்கிக் கொண்டு போக விரும்பவில்லை ஆனால் எதையாவது தூக்கிக் கொண்டுதான் போகிறான் குன்றுகளைக் காட்டிலும் கனமுள்ள சோகங்களைத் தூக்கிக் கொண்டு நடக்க மனதில் பயிற்சி வேண்டாமா? நன்றி : இம்பர் உலகம் - கவிதைகள் - ஞானக்கூத்தன் - பக்கங்கள் : 182 - விலை : ரூ.170 - விருட்சம் வெளியீடு, சீத்தாலட்சுமி அபார்ட்மென்ட்ஸ் , 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 33 - தொலைபேசி எண் : 9444113205 

முன்றில் நினைவுகளும் மா அரங்கநாதனும்...

. அழகியசிங்கர்  நான் டில்லியில் ஒரு வாரம் தங்கியிருந்தேன்.  அந்த ஒரு வாரத்தில் தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை.  முகநூல் பார்க்கவில்லை.  நான் வைத்திருந்த இரண்டு தொலைபேசிகளில் ஒன்றுதான் உபயோகத்தில் இருந்தது.  ரவி சுப்பிரமணியன் போன் ஒரு முறை வந்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  அவர் மூலம்தான் எனக்குத் தெரிந்தது மா அரங்கநாதன் இறந்து விட்டார் என்பது.  என்னால் நம்ப முடியவில்லை.  மா அரங்கநாதனுக்கு 85 வயது ஆகிவிட்டது.  ஆனால் என் அப்பா பொதுமருத்துவமனைக்கு ஒரு முறை சென்றபோது, ஒரு வாக்கியத்தை அடிக்கடி படிப்பார்.  ஒருவர் 60 வயதுக்குப் பிறகு வாழ்கின்ற ஒவ்வொரு நாளும் அவனுக்குப் போனஸ் என்று.  என்ன இப்படி சொல்கிறாரே என்று தோன்றும்.  இதைக் குறிப்பிட்ட என் அப்பா 94 வயது வரை இருந்தார்.  அப்பா சொன்னது உண்மை என்பதை என்னுடன் அலுவலகத்தில் பணிபுரிந்த பல நண்பர்கள் 60 ஆண்டுகள் முடிந்த சில ஆண்டுகளிலேயே இறந்து போவதைப் பார்த்து நினைத்துக்கொள்வேன்.  மா அரங்கநாதனுக்கு 85 வயது ஆனாலும் அவர் மரணத்தை என்னால்...

தில்லி செல்கிறேன்...

அழகியசிங்கர் இன்று மாலை தில்லி செல்கிறேன்.  முதல் முறை 1980 செப்டம்பர் மாதம். அப்போது குர்மானி என்ற ஹிந்திப் படம் பிரபலமாக இருந்தது.   இது நாலாவது முறை என்று நினைக்கிறேன்.  அடுத்த வெள்ளிக்கிழமை கிளம்பி வந்து விடுவேன்.  அதுவரை முக நூல் நண்பர்கள் தொல்லை விட்டது என்று நிம்மதியாக இருப்பாரகள் என்று நினைக்கிறேன்.  நான் கையில் புத்தகங்கள் எதுவும் எடுத்துப் போகப்போவதில்லை.  கின்டல் எடுத்துப் போகிறேன்.  அதில் ஏகப்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன.  ஆனால் படிக்க முடியுமா என்பது தெரியவில்லை.  நண்பர்கள் யாராவது தில்லியில் எங்கே செல்லலாம் என்று சொல்ல முடியுமா?  டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில் என்ற சிறுகதைப் புத்தகம் எழுதிய கணேஷ் வெங்கட்ராமன் டில்லியில்தான் உள்ளார்.  அவர் அறிவுரை கூறுவார் என்று நினைக்கிறேன். அவர் புத்தகத்தைப் படிப்பதற்குக் கையில் வைத்துள்ளேன்.  ஒரு வாரத்திற்குள் முகநூலில் உள்ளே நுழைந்து எதாவது எழுத முடியுமா என்று பார்க்கிறேன்.  முடியாது என்றே தோன்றுகிறது. 

மூன்று வித எழுத்தாளர்கள்.....

மூன்று வித எழுத்தாளர்கள்..... அழகியசிங்கர்                                                                                                            எழுத்தாளர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.  முதல் வகை எழுத்தாளர்கள் அவர்களுக்குள்ளே எழுதுபவர்கள்.  எதைப் பார்த்தாலும் படித்தாலும் கதைகள், கவிதைகள் என்று எழுதித் தள்ளிவிடுவார்கள்.  இவர்களுடைய படைப்புகளும் பெரும் பத்திரிகைகளில் எளிதாக நுழைந்து விடும்.  குறிப்பாக பாக்கெட் நாவல்கள் எல்லாம் இப்படிப்பட்ட எழுத்தாளர்களால் எழுதப்படுகின்றன.  கை வலிக்க வலிக்க எழுதிக்கொண்டே போவார்கள் அல்லது டைப் அடித்துக்கொண்டே போவார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள் பத்திரிகைக்கு பக்கங்களுக்கு ஏற்ப கதைகள் எழுதித் தருவார்கள்.  அரைப்பக்கம் வேண்டுமென்றா...

உங்கள் குருநாதர் எப்படி இருக்கிறார்?

அழகியசிங்கர்  நான் டில்லிக்கு நாலைந்து முறைகள் சென்றிருக்கிறேன்.  ஒருமுறை சென்றபோது வெங்கட் சாமிநாதனைப் பார்க்கச் சென்றேன்.  அப்போது ஆங்கிலப் பத்திரிகையில் எழுதிக்கொண்டிருந்தார்.  தமிழில் எழுதவதை நிறுத்தி இருந்தார்.  கடுமையான சண்டை.  அல்லது பத்திரிகையே இல்லை எழுத.  அஞ்ஞானவாசம் மாதிரி தனித்து இருந்தார்.  நான் பிரமிளுடன் பேசிக்கொண்டிருந்தவன், வெங்கட் சாமிநாதன் எப்படி என்று அறிய ஆவல். வெங்கட் சாமிநாதன் எழுத்தில் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்கிற தன்மை இருக்கும்.  ஆனால் கடுமையாக விமர்சனம் செய்வார்.  பிரமாதமான உரைநடை.  அவர் உரைநடையில் நாவலோ சிறுகதையோ எழுதுவதாக இருந்தால் நன்றாக இருந்திருக்கம். அவர் தன்னை விமர்சகராகவே அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினார். அவரைப் போலவே கடுமையா க விமர்சனம் செய்பவர் பிரமிள். இவர்கள் இருவரும் தமிழ் சிறுபத்திரிகைச் சூழலை கலகலக்க வைத்தவர்கள். டில்லியிலிருந்து சென்னைக்கே வந்துவிட்டார் வெங்கட் சாமிநாதன்.  தனியாக வீடு கட்டிக்கொண்டு மடிப்பாக்கத்தில் இருந்தார்.  அடிக்கடி அவரைப் பார்ப...

KEEP QUITE

அழகியசிங்கர் நமக்கு சில வார்த்தை ரொம்பவும் யோசனை செய்ய வைக்கும். அதுமாதிரியான வார்த்தைதான் ஓஉஉட ணமஐபஉ.  நம்மால அப்படி அமைதியாய் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா என்பது தெரியவில்லை.  சும்மா அப்படி இருக்க முடியுமா என்பது பெரிய கேள்விக்குறி.  அப்படி இருந்துவிட்டால் பெரிய சண்டைகளே வராது.  ஆனா முடியுமா?  சமீபத்தில் யு ட்யூப்பில பாபாஜி அவர்கள் இது குறித்துப் பேசுவதைக் கேட்டேன்.   அவர் குறிப்பிட்டதுபோல அப்படி இருந்து பார்த்தால் என்ன? உண்மையில் ஒருவர் அப்படி இருக்க தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். நம் வாழ்க்கையில் நாம எதிலாவது மூக்கை நுழைப்பதுதான் வாடிக்கையாக இருக்கிறது.  யார் நம்மைத் திட்டினாலும், எதாவது சொன்னாலும் காதில வாங்கிக்கொண்டு கீப் கொய்ட்டாக இருக்க முடியுமா? முடியாது..முடியாது.  ஆனால் அப்படி மட்டும் இருந்துவிட்டால் வாழ்க்கை பிரமாதமாக இருக்கும். யோசித்துப் பார்த்தால் நான் பெரும்பாலும் அப்படித்தான் இருந்திருக்கிறேன்.  என் அனுபவத்தை இங்கு பட்டியல் இடுகிறேன். ஆனால் இன்னும் இந்த கீப் கொய்ட்டைப் பற்றி யோசிக்க வேண்ட...

படைப்பாளியா படைப்பா யார் முக்கியம்

அழகியசிங்கர் சில ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் பங்களூர் சென்றேன். ஒரு ஓட்டலில் ரூம் எடுத்துத் தங்கினோம்.  பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு எழுத்தாளர் பெயரைக் குறிப்பிட்டு போய் பார்த்துவிட்டு வரலாமா என்று கேட்டேன்.  என் நண்பர்கள் வேண்டாம் என்றார்கள். அவர்கள் சொன்னபடியே அந்த எழுத்தாளரைப் பார்க்கப் போகவில்லை.   கொஞ்சம் யோசித்துப் பார்த்தபோது ஒரு படைப்பை நாம் படிக்கிறோம்.  படித்துவிட்டுப் பரவசப்படுகிறோம்.  அந்த எண்ணத்தில் எழுத்தாளரைப் பார்க்க வேண்டுமென்று நினைப்பது அபத்தம் என்று தோன்றுகிறது.  அப்படி பக்தி பரவசத்தோடு படைப்பாளியை நாம் பார்க்கச் சென்றால், நமக்கு பெரிய ஏமாற்றமே கிட்டும்.  நாம் எதிர்பாரக்ககும் நிலையில் படைப்பாளி தென்பட மாட்டான். உண்மையில் படைப்பாளி வேறு, படைப்பு வேறு.  சினிமாவில்தான் ஒரு நடிகரின் பின்னால் ரசிகர் மன்றம் அமைத்து நடிகரை தேடி ஓடுவார்கள். சினிமா என்றால் அது பலருடைய முயற்சி. ஆனால் நடிகர் நடிகைக்குத்தான் அதில் முக்கிய பங்கு கிடைக்கிறது. இது சரியில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. ஒரு படைப்பு நன்றாக படைக்கப்பட்டிருந...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 60

அழகியசிங்கர்    வாழ்க்கைப் பிரச்சினை தாமரை                                                                                                                          அந்த மழைநாள் இரவை எங்களால் மறக்கவே முடியவில்லை கோடை மழையல்ல அது கொட்டும் மழை! நானும் குட்டித் தம்பியும் கடைசித் தங்கையும்... எனக்குதான் வயது அதகிம் எட்டு! ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன் தெருவெல்லாம் ஆறாக நீர்... மின்னலும் இடியுமாய் வானத்திலே வன்ம யுத்தம்! எதிர்சாரியிலிருந்த குடிசைகளெல்லாம் மூழ்கிக் கொண்டிருந்தன கூச்சலும் குழப்பமும் எங்கெங்கும்... உயிர்ப் பிரச்சினையும் வாழ்க்கைப் பிரச்சினையுமாக ஊரே ரெண்டுபட்டது வேடிக்கை பார்த்த என்னை எட்டி இழுத்தாள் குட்டித் தங்கை 'உள்ளே வா அண...

ஜானகிராமனிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்..

அழகியசிங்கர் தி ஜானகிராமன் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் கங்காஸ்நானம் என்ற கதை.  1956ஆம் ஆண்டு எழுதியது.  இந்தக் கதையைப் படித்தபோது ஜானகிராமன் உயிரோடு இருந்தால் சில கேள்விகள் கேட்கலாம் என்று நினைத்தேன்.   துரோகம் செய்வதைப் பற்றி தி ஜானகிராமன் அதிகமாகக் கதைகள் எழுதியிருக்கிறார்.  இந்தக் கதையும் ஒரு துரோகத்தைப் பற்றிய கதைதான்.  ஆனால் இந்தக் கதையை இப்போது எழுதியிருந்தால், ஜானகிராமன் வேற மாதிரி எழுதியிருப்பார். பொதுவாக கடன் கொடுத்தவர்தான் பணத்தைத் திரும்ப வாங்க அல்லல்பட வேண்டும்.  பணத்தை வாங்கிக்கொண்டு போன பலருக்கு பணத்தைத் திருப்பித் தரவேண்டுமென்ற எண்ணம் வராது.  அப்படியே திருப்பி தந்தாலும் கடன் வாங்கியதற்கான பணத்தைத் தருகிறோம் என்று எண்ண மாட்டார்கள்.  என்னமோ அவர்களோட பணத்தை விருப்பமில்லாமல் கொடுப்பதாக நினைத்துக்கொள்வார்கள்.  இப்போது வங்கியில் உள்ள பிரச்சினை இந்த வாரா கடன்தான்.   ஆனால் இந்தக் கதை 1956ஆம் ஆண்டு எழுதியிருப்பதால், சின்னசாமி என்பவரின் சகோதரி மரணம் அடையும் தறுவாயில் துரையப்பா என்பவரிடம் அவள் வாங்கிய கடனைத்...

ஜோல்னாப் பையை எடுத்துக்கொள்ளாமல் போய்விட்டேன்...

அழகியசிங்கர் நான் எப்போதும் ஜோல்னாப் பையை சுமக்காமல் இருக்க மாட்டேன்.  கிட்டத்தட்ட 40  ஆண்டுகளுக்கு மேலாக ஜோல்னாப் பையை சுமந்துகொண்டு இருப்பேன்.  ஏன்? என் வங்கியில் நான் சேரும்போது (1978ஆம்ஆண்டு) நான்தான் ஜோல்னாப் பையை அறிமுகப்படுத்தினேன்.  என்னைப் பார்த்துதான் பெவ்வி என்ற யூனியன் அமைப்பில் உள்ள சிலர் ஜோல்னாப் பைகளை சுமந்து செல்வார்.  மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன் ஒரு ஜோல்னாப் பை வைத்திருப்பார்.  அதில் பெரும்பாலும் ஸமார்ட்போன், பர்ஸ் போன்றவற்றை வைத்திருப்பார்.  மறதி காரணமாக பலசமயம் பையோடு எல்லாவற்றையும் தொலைத்தும் விடுவார். என் நண்பர் ஒருவருக்கு நான் ஜோல்னாப் பையை  சுமந்துகொண்டு வருவது பிடிக்காது.  ஒவ்வொரு முறையும் என்னைப் பார்க்கும்போதும் என்னை எச்சரிக்கை செய்வார்.  ஜோல்னாப் பையுடன் உங்களைப் பார்த்தால், பையை கிழித்து எறிந்து விடுவேன் என்று மிரட்டுவார்.  அவர் மிரட்டலுக்குப் பயந்து ஜோல்னாப் பையை அவர் கண்ணிற்குக் காட்டமாட்டேன்.  ஒரு ஜோல்னாப் பையைத் தயாரிக்க ரூ100 வரை செலவாகும்.  நான் துணி வாங்கிக்கூட ஜோ...

விருட்சம் 102வது இதழ் அசோகமித்திரன் இதழ்....

அழகியசிங்கர் 102வது இதழ் இதோ வர உள்ளது. ஆறாம்தேதி மார்ச்சு மாதம் அசோகமித்திரன் பேட்டிகள் என்ற பெயரில் ஒரு கட்டுரையை எனக்கு அனுப்பி உள்ளார். அதுதான் அவர் கடைசியாக எழுதிய கட்டுரை. இக் கட்டுரையுடன் இந்த இதழ் தொடங்க உள்ளது. அவரைப் பற்றி பல கட்டுரைகளை வெளியிட உத்தேசித்துள்ளேன். ஆதலால் சகலமானவர்களுக்குத் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் நீங்கள் அசோகமித்திரனைக் குறித்து உங்களுக்குத் தோன்றுவதை அரைப்பக்கம், முக்கால் பக்கம், முழுப்பக்ககம், இரண்டு பக்கங்கள் என்று கட்டுரை எழுதி அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். அசோகமித்திரன் மிகக்குறைவான பக்கங்களில் பலவற்றை ஏழுதி விடுவார். நீங்களும் அப்படி எழுதி navina.virutcham@gmail.com என்ற மின் முகவரிக்கு அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்