அழகியசிங்கர்
30 06.2014 அன்று நான் பார்த்த படம் சான்று ( PROOF). ஷேக்ஸ்பியர் இன் லவ் என்ற திறமையான படததை எடுத்து இயக்குநர்தான் இந்தப் படத்தையும் எடுத்துள்ளார். ஆஸ்கர் வெற்றிப் பெற்ற சிறந்த நடிக்கைக்கான விருதுபெற்ற கெயிநத் பால்ரோ Gwyneth Paltrow (Best Actress, Shakespeare in Love, 1998) , அந்தோனி ஹாப்கின்ஸ் (சிறந்த நடிகர் விருதுபெற்றவர்), ஹோப் டேவிஸ் போன்ற வர்கள் சிறப்பாக நடித்தப் படம் 'சான்று' என்ற இப் படம். 27 வயது நிரம்பிய காத்ரின் என்ற பெண் நடுசாமத்தில் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் குடிப்பதற்கு மது கொடுக்கிறார் அவள் அப்பா. சிறிது நேரம் அவர்கள் இருவரும் புத்தி பிறழ்ச்சியைப் பற்றி பேசிக்கொணள்டிருக்கிறார்கள். அந்தப் பேச்சு முடியும்போது ஒரு விஷயம் தெரிகிறது. அவள் அப்பா ராபர்ட் போனவாரம் இறந்து விட்டார். அவரை நாளை அடக்கம் செய்யப் போகிறரர்கள். காத்ரின் அவளுடைய அப்பாவைப் பற்றி நினைவுகளுடனும், அவளுடைய எதிர்காலம் பற்றிய நிச்சயம் இன்மையுடனும் வாழ்கிறாள். அவள் இப்படிபட்ட கனவுடன் விழித்துக் கொள்ளும்போதுதான் அவளுக்குத் தெரிகிறது அப்பாவுடைய மாணவனான ஹால் அவருடைய அறையில் உள்ள புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறான். அவளுடைய போராட்டம்தான் இப்படம். ராபர்ட் என்கிற அவளுடைய அப்பாவை பல ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறாள் அவளுடைய அப்பா நிச்சயமில்லாமல் இருக்கிறார். அவர் கணக்கில் மிக சிறந்த நிபணர். வயதோகத்தால் அவரிடமிருந்து அவருடைய நிபுனத்துவம் குறைந்துகொண்டே போகிறது. அவர் போகும்போது ஒரு ரசகியத்தை விட்டுச் செல்கிறார். அந்த ரகசியம் அவளை துன்புறுத்துகிறது. அது அவளுடைய புனிதத்தன்மையைப் பாதிக்கிறது.
அப்பாவின் தூண்டுதலால் புதிய கணக்கு முறையை அவள் கண்டுபிடித்து ஒரு நோட்டில் எழுதுகிறாள். அதை அவளைச் சுற்றி இருக்கிற அவளுடைய சகோதரி, அவளுடைய காதலன் நம்ப மறுக்கிறார்கள். அந்த நோட்புக்கில் எழுதியிருப்பவை அவளுடைய கையெழுத்தில்லை என்று சொல்கிறார்கள். அதை நிரூபிக்க அவள் தடுமாறுகிறாள். அவளுடைய பிரச்சினை நிகழ் காலத்தை அவளால் நம்ப முடியாமல் இருப்பது. அவளுடைய தந்தையைப் பற்றிய நினைவு அவளைத் துரத்துகிறது. அவள் தடுமாறுகிறாள்.
அவள் அப்பா வைத்துவிட்டுப் போன வீடு, பொருட்கள் எல்லாவற்றையும் விற்றுவிட்டு அவள் சகோதரியுடன் நியூயார்க் பயணமாகத் தயாராகிறாள். உண்மையில் அவளுக்கு அவள் சகோதரியுடன் போவதற்கு விருப்பமில்லை.
அவள் காதலன் அந்த நோட்டில் எழுதிய கணக்கு சமன் அவர் அப்பா கண்டுபிடித்தது அல்ல என்பதை கண்டு பிடித்துவிடுகிறான். காத்ரினை நோக்கி அவன் அதைச் சொல்வதற்கு ஓடி வருகிறான். முதல் சந்திப்பின் போது தவறுதலாக சொன்னதால், காத்ரீன் மனம் உடைந்து போய் நிற்கிறாள். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பலவீனமான காத்ரீனை நியூயார்க் அழைத்துக்கொண்டு போக அவளுடைய சகோதரி தயாராகிறாள். வேறு வழியில்ûலாமல் அவளுடன் பயணம் ஆகிறாள். அவள் தந்தையை பார்த்துக்கொண்டிருந்த அருமையான வீட்டை விட்டுப் போகிறாள். அவள் காதலன் ஓடிவந்து காத்ரீன்தான் அந்த கணக்குச் சமனை எழுதியிருப்பதாக வாதாடுகிறான். அவள் நம்ப மறுக்கிறாள். அந்த நோட்டில் உள்ள கையெழுத்து அவள் அப்பாவின் கையெழுத்து மாதிரி இருந்தாலும், பல ஆண்டுகளாக அப்பா அவளுடன் இருப்பதால், அதே மாதிரி கையெழுத்து வர வாய்ப்பு உள்ளது என்கிறான். அந்த இடத்தைவிட்டு போகக் கூடாது என்று அடம் பிடிக்கிறான்.
அவள் எதையும் கேட்க தயார் இல்லாத மனநிலையில் இருக்கிறாள். விமானத்தில் ஏறுவதற்கு முன் அவளும், அவள் சகோதரியும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவளுக்கு காப்பி வாங்கிக்கொண்டு வர அவள் சகோதரி போகிறாள். திரும்பவும் அவள் மனநிலை புரண்டு போகிறது. சகோதரியுடன் போகக் கூடாது என்று நினைக்கிறாள்.
சகோதரி காப்பியை நீட்ட, காப்பி சாப்பிடக் கூடாது, என் உடலுக்குக் கெடுதல் என்று கூறியபடி அந்த இடத்தைவிட்டு ஓடி விடுகிறாள். திரும்பவும் பழைய இடத்திற்கு வருகிறாள். அவள் காதலன் அவளைப் பார்க்க வருகிறான். அந்தக் கணக்கு சமனை திரும்பவும் உறுதிப் படுத்தலாம் என்று உற்சாகம் ஊட்டுகிறான்.
ஒரு திறமையாக எடுக்கப்பட்ட படம். கணக்கை அடிப்படையாகக் கொண்டு பல படங்கள் வெளிவநதிருக்கின்றன. அதில் இந்தப் படம் எல்லாப் படங்களை விட சிறந்த படம்.
Comments