அநாசாரம்
நீலமணி
வண்டோடு சம்போகம்
செய்துவிட்டுக்
குளிக்காமல
கடவுள் தோளேறும்
மாலைப் பூ
எழுத்து காலத்திற்குப் பிறகு, கசடதபற ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது. எழுத்தில் வெளிவந்த கவிதைகள் கசடதபற இதழ்களில் வெளிவர வாய்ப்பு உள்ளது. ஆனால் கசடதபற இதழ்களில் வெளிவந்த கவிதைகள் எழுத்துவில் பிரசுரம் ஆக வாய்ப்பில்லை.
உதாரணமாக நீலமணி என்ற கவிஞர் கசடதபற இதழ்களில் முக்கியமான கவிஞராகத் தென்படுகிறார். பாலுணர்வை வெளிப்படையாக கவிதைகள் மூலம் முதன் முதலாக கசடதபற இதழ்கள் வெளிக்கொண்டு வர இவர் ஒரு காரணம்.
ஏற்கனவே அழைப்பு என்ற கவிதை எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்த ஒன்று.
நிரோத் உபயோகியுங்கள்
நிரோத் உபயோகியுங்கள்
என்று விளம்பரங்கள்
வலியுறுத்துகின்றன
வாயேன்.
அதேபோல் கசடதபற இதழ்களில் பெண் கவிஞர்கள் யாருமில்லை. ஆனால் பெண்களைப் பற்றிய கவிதைகள் நிறையா உண்டு.
Comments