Skip to main content

தாத்தாவும் பேரனும்

தாத்தாவின் பிள்ளைக்கு

குழந்தை பிறந்திருக்கிறது.

கொஞ்ச நாளாய்

தாத்தாவிற்கு பேச

எந்த தோழர்களும்

தேவையில்லை...


தாத்தாவும் பேரனும்

ஏதேதோ பேசிக்

கொள்கிறார்கள்..

யாருக்கும் புரியவில்லை

அவர்களின் ரகசியங்கள்.


அழுகிறப் பேரனிடம்

தாத்தாய் அழகழகாய்

ஏதோ சொல்லிக்

கொடுக்கிறார்...


குழந்தை கையை

அசைக்கிற போதும்

கால்களை ஆட்டி

இசைக்கிற போதும்

சாடையாய் கூடி நிற்கிற

முகத்தின் ஓசையில்

தாத்தா இப்போது

அவரது தாத்தாவின்

மடியினில்

கைகளையும் கால்களையும்

அசைத்து அசைத்து

ஏதோச் சொல்லிக்

கொண்டிருக்கிறார்.

உலகம் திரும்பி

சுற்றிக் கொண்டிருக்கிறது.

Comments

ஹ ர ணி said…
வயதேறிவிட்டாலே தள்ளிவிடும் நிலைப்பாடு இன்றும் மாறவில்லை. எனவேதான் தாத்தா பேரப்பிள்ளைகள் உறவு என்பது எல்லாங்கடந்த அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. சுவையும் அருமையும் கலந்த கவிதை.