Skip to main content

Posts

Showing posts from December, 2009

எதையாவது சொல்லட்டுமா....13

July மாதத்தில் நான் நான்கு மாதங்களுக்கு நூலகக் கட்டடத்தின் சின்ன அறையைப் பதிவு செய்திருந்தேன். அதாவது டிசம்பர் மாதம் வரை.ஆனால் எதிர்பாராத திருப்பமாக அக்டோபர் மாதம் சென்னையிலிருந்து கும்பகோணம் போகும்படி நேரிட்டது. இனி பணி நிமித்தமாக அங்குதான் இருக்கும்படி ஆகிவிட்டது. நான் இப்போது சீர்காழியில் இருக்கும்படி இருந்தாலும், சென்னையில் கூட்டம் நடத்தும் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. நவம்பர் மாதம் முழுவதும் நான் லோலோவென்று கும்பகோணம் முழுவதும் அலைந்தேன். அதனால் நவம்பர் மாதம் நான் நடத்தும் கூட்டம் மழையும் சேர்ந்துகொண்டதால் நடத்த இயலவில்லை. கூட்டம் நடத்தாமலே ரூ.250 போய்விட்டது. டிசம்பர் மாதக் கூட்டம் என்ன செய்யப்போகிறேன் என்று நினைத்தேன். வழக்கமாக மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை என்னால் கூட்டம் நடத்த முடியவில்லை. நான் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை கிளம்பி சென்னையை அடைந்து, ஒரே ஒரு நாளான ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து, அன்று இரவு 11 மணிக்கு ஒரு பஸ்ûஸப் பிடித்து சீர்காழி வந்து விடுவேன். அப்படி வரும் கால் வீங்கி விடுகிறது. பிறகு சரியாகி விடுகிறது. நான் முதலில் பயந்துபோய் டாக்டர்களிடம் கேட்டதற்கு அத...

எதையாவது சொல்லட்டுமா....12

20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ் பத்திரிகைகளைப் படித்தவர்கள் புரிந்துகொண்ட விஷயம். தொடர்கதைகள், கதைகள் எல்லாம். ஆனந்தவிகடன் என்ற பத்திரிகை முத்திரைக் கதைகளை எல்லாம் பிரசுரம் செய்திருக்கிறது. இன்று ஜெயகாந்தன் என்ற எழுத்தாளரை அறிவதற்கு ஆனந்தவிகடன் ஒரு காரணம். குமுதம் பத்திரிகை சாண்டில்யன் போன்ற படைப்பாளியெல்லாம் அறிமுகம் செய்திருக்கிறது. பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திர குமார், ராஜேஸ்குமார் , புஷ்பாதங்கத்துரை போன்ற பிரபல எழுத்தாளர்களையும் இந்த லட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் பத்திரிகைகளில் வலம் வந்தவர்கள்.இன்றைக்குப் பிரபலமாக அறியப்படும் சுஜாதா என்ற எழுத்தாளர் குமுதம் பத்திரிகையில் முதன் முதலாக தொடர்கதை மூலம் அறியப்பட்டவர்தாம். என் நண்பர் ஸ்டெல்லா புரூஸ் ஆரம்பத்தில் காளி-தாஸ் என்ற பெயரில் கவிதைகள் எழுதியவர். பின்னர் ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயரில் தொடர்கதைகளை ஆனந்தவிகடனில் எழுத ஆரம்பித்த பிறகு பிரபலமானார். இப்படி பிரபல பத்திரிகைகளில் எழுதுபவர்களுக்கு ஏகப்பட்ட வாசகர்கள் வாசகிகள் கிடைப்பார்கள். அண்ணாசாலையில் உள்ள பொது நூலகத்தில் நடந்த ஒரு வாசகர் சந்திப்பில் சுஜாதாவை நான...

ட்யூஷன் ஆசிரியரின் கவிதை

மொழிபெயர்ப்புக் கவிதை இன்றொரு கவிதை எழுதவேண்டும் சொல்லும்பொழுதே தாளொன்று பாதி நிறுத்தப்பட்ட ட்யூட்டொன்று உம்மென்றிருந்தன எடுக்கும்வரைக்கும் விடிகாலையில் பாடங்களை மீட்டும் வகுப்பு ஒன்பது மணிக்கு குழு வகுப்பு இரவில் விடைதிருத்தும் வேலை சிவப்புப் பேனையிலிருந்து வழிவது மனைவியின் முறைப்பு செஞ்சாயத் தேனீரருந்தியபடி சிற்றுண்டிச் சாலையில் எழுதிய எளிய கவிதைப் புத்தகத்தின் கவிதைத் தலைப்புகளே இங்கு சுவர் முழுதுமிருந்து என்னைப் பார்த்துச் சிரிப்பவை கரும்பலகையில் வெண்கட்டி போல தேய்ந்துபோகும் வாழ்விடையே கவிதைகள் கைவிட்டு நழுவி எனக்கே மிதிபட்டு அலறும் சாகித்திய வானிலே கவிதையொன்றைக் கற்பனை செய்கிறேன் இரவில் வந்து அரை மயக்கத்தில் நித்திரை கொள்கிறேன் கண்களில் வீழ்கின்றன சந்திரனின் கிரணங்கள் எவ்வாறு நாளை கவிதையொன்றை எழுதுவேன் மூலம் - திலீப் குமார லியனகே ( சிங்களமொழியில் )

எதையாவது சொல்லட்டுமா / 11

இங்கு எழுதுவதில் எதாவது தலைப்பு இட்டு எழுதலாமா என்று யோசிக்கிறேன். அப்படி எழுதுவதென்றால் காலடியில் கவிதைகள் என்ற பெயர் இடலாம். 22 ஆண்டுகளுக்கு முன்னால் நவீன விருட்சம் பத்திரிகை ஆரம்பித்தபோது அது கவிதைக்கான பத்திரிகையாகத்தான் திகழ்ந்தது. ஒரே கவிதை மயமாக இருக்கும். முதன் முதலாக ரா ஸ்ரீனிவாஸன் கவிதைப் புத்தகம்தான் விருட்சம் வெளியீடாக வந்தது. சமீபத்தில் நேசமுடன் என்று வெங்கடேஷ் எழுதிய கட்டுரையைப் படித்தேன். புத்தகம் விற்பது என்பதைப் பற்றி எழுதியிருந்தார். அப்படியென்றால் என்னவென்று தெரியாது. ஒரு கவிதைப் புத்தகத்தை ஒரு 100 பிரதிகளாவது எப்படி விற்பது..எனக்கு அந்த ரகசியத்தை யாராவது சொன்னால் நன்றாக இருக்கும். நான் சொல்வது பிரபலமாகாத யாருக்கும் தெரியாத புதியவரின் கவிதைத் தொகுதி. கடந்த 22 ஆண்டுகளாக புத்தகம் கொண்டுவரும் நான் அதை எப்படி விற்பது எனபதைக் கற்றுக்கொள்ளவே இல்லை. முழுக்க முழுக்க லைப்ரரியை நம்ப வேண்டியுள்ளது. கவிதைக்கு லைப்ரரியின் கருணை கிடையாது. இதைத் தெரிவிக்க முதல்வருக்கு ஒரு விண்ணப்பம் என்ற பெயரில் ஒரு கடிதம் எழுதினேன். விண்ணப்பம் எழுதி என்ன பிரயோசனம். கவிதைப் புத்தகங...

குழிவண்டுகளின் அரண்மனை

பக்கம் 80 ரூ.40 புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் சுகுமாரன் முன்னுரை: அரவிந்தனின் கவிதைகள் தனி வழியில் உருவாகியிருப்பவை. தனித்துவமான இயல்புகள் கொண்ட கவிதைகள்தாம் கவனத்துக்குள்ளாகும் என்ற இலக்கிய நியதியை அறிந்துகொண்டேதான் இதைக் குறிப்பிடுகிறேன். பல தனித்துவங்கள் கவிதையுலகில் நிலவும்போது அதுவே ஒரு பொதுமொழியையும் உருவாக்கி விடுகின்றன. கவிதை எப்போதும் புதுமையை எதிர்நோக்கி நிற்கிறது என்பதும் புதிதாக வரும் கவிஞன் இந்தப் பொதுமொழியைக் கடந்து தன்னுடையதான கவிதை மொழியை நிறுவ வேண்டியது கட்டாயமாகிறது என்பதும் கவிதையாக்கத்தின் சவால்கள். இந்தச் சவால்களைத் தன்னுடையதான மாற்று வழியில் அரவிந்தன் எதிர்கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் சான்றளிக்கின்றன. (அட்டைப் படம் இணைத்துள்ளேன்)

தொலைந்த பாதங்களின் சுவடுகளேந்தி...

பார்வைக்குப் புலப்படாப் பாதங்களைக் கொண்டது நீருக்குள் அசைந்தது சிற்பங்களெனக் கண்ட உயிர்த் தாவரங்கள் ஒளித்தொகுக்கும் வழியற்று மூலைகளை அலங்கரித்திட விட்டுவந்த துணையை குமிழிகள் செல்லும் பரப்பெங்கிலும் தேடியது எல்லாத் திசைகளின் முனைகளிலும் வாழ்வின் இருளே மீதமிருக்க காணும் யாரும் உணராவண்ணம் மூடா விழிகளில் நீர் உகுத்து அழகுக் கூரை கொண்ட கண்ணாடிச் சுவர்களிடம் தன் இருப்பை உணர்த்த கொத்திக் கொத்தி நகர்ந்திற்று செம்மஞ்சள் நிற தங்கமீனொன்று அது நானாகவும் இருக்கக் கூடும் -,

செல்வராஜ் ஜெகதீசன் கவிதை தொகுதி வெளியீடு.

நண்பர்களே, எதிர்வரும் புத்தக கண்காட்சியை யொட்டி, எனது இரண்டாவது கவிதைத் தொகுதி "இன்ன பிறவும்" கவிஞர் சுகுமாரன் அவர்களின் முன்னுரையோடு வெளியாகிறது. நூல் விபரம்: நூல் பெயர்: இன்ன பிறவும் பதிப்பகம்: அகரம், தஞ்சாவூர் கிடைக்குமிடம்: டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் அகரம் பதிப்பக ஸ்டால் மற்றும் சென்னை தியாகராய நகர் புக்லாண்ட்ஸ். அன்புடன், செல்வராஜ் ஜெகதீசன்.

விரிசல்

ஒரு சாயங்கால வேளையில் கண்ணாடியோ பீங்கானோ விழுந்து நொறுங்கும் சப்தம் பொதுச்சுவருக்கு அப்பால் பக்கத்து வீட்டில் மையங் கொண்டிருந்தது கதவருகில் சென்றபோது கசிந்து கொண்டிருந்தன கடுமையான வார்த்தைகள் ஒவ்வொரு துண்டும் பொறுக்கப்படும் ஓசை ஒன்றில் அவன் முத்தம் ஒன்றில் அவள் வெட்கம் சிலவற்றில் அவர்கள் சத்தியம் ஒரு மிகப்பெரிய துண்டில் இப்போது அழுது கொண்டிருக்கும் குழந்தையின் சிரிப்பு பதட்டமாக நானும் நானும் பேசித் தீர்க்கிறோம் மறுநாள் காலையில் கலங்காத கண்களுடனும் வழக்கமான புன்சிரிப்புடனும் அவளைக் கண்ட எனக்கு நிம்மதியுடன் சற்று ஏமாற்றமும் வார இறுதியில் கைகோர்த்துச் சென்றவர்களின் சிரிப்பின் விரிசல் மாயப்பசையில் இணைந்திருந்தது கோபத்தில் தட்டை நகர்த்த மட்டும் அறியும் எனக்குள் இருக்கும் மிருகம் இன்னும் கொஞ்சம் வளர்கிறது

அவளா இது?

லூசியா. அதுதான் அவள் பெயர். பாத்திரங்களை முறையாக அடுக்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் வேறு ஏதோ நினைவில் உழன்று கொண்டிருந்தாள். 'இன்னும் சிறிது நேரத்தில் எட்வர்ட் வந்துவிடுவார்', என்ற எண்ணம் எழுந்ததும், இரவு உணவு தயாரிக்கும் வேலையில் இறங்கினாள். பத்தே நிமிடத்தில் மிருதுவான சப்பாத்தியும், மணமணக்கும் குருமாவும் தயார் பண்ணிவிட்டாள். அவற்றை சூடாகவே இருக்கும்படி வைத்துவிட்டு, சோபாவில் சற்றே ஆசுவாசமாக அமர்ந்தாள். அவள், இதுவரை தான் வாழ்ந்த வாழ்வை அசை போட்டுக் கொண்டிருந்தாள். அவள் முன் எட்வர்ட், குழந்தைகள், சமையலறை மட்டுமே நிழலாடின. சலிப்பாக உணர்ந்தாள் முதன் முறையாக. 'என் வாழ்க்கை இவ்வளவுதானா?' என்ற நினைப்பு அவளை என்னவோ செய்தது. நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. எட்வர்ட் தன் முதல் மனைவி இறந்த பிறகு, மிகவும் சிரமப்பட்டான். அவனால் அலுவலகத்திற்கும் சென்று, ஐந்து மற்றும் மூன்றே வயதான தன் பெண் குழந்தைகளையும் கவனிக்க இயலவில்லை. அந்த நேரத்தில்தான் லூசியாவைச் சந்தித்தான். அவளின் சந்திப்பால் எட்வர்ட் சிறிது ஆறுதல் அடைந்தான். அவன் தன் விருப்பத்தை ...

விளம்பரங்களில்

விளம்பரங்களுக்கிடையில் வந்து போகின்றன விளம்பரதாரர் வழங்கும் நிகழ்ச்சிகள் நல்லது பயக்குமெனில் நல்லது கறையென்கின்றன இன்னுமதிக வெளுப்புக்கு இவையிவை என்ற அறிவிப்புகளோடு இலவசங்களுக்கான சீசன்களை எப்போதும் நினைவுறுத்திக்கொண்டு விளம்பரங்களில் வகுபட்டு பின்னமாகிக் கொண்டிருக்கிறது பொழுதுகள்

எதையாவது சொல்லட்டுமா 10

ராஜன் தோட்டம் என்ற இடத்தில்தான் காலையில் நடைபயிற்சி செய்வேன். ஏராளமானவர்கள் வருவார்கள். விளையாட்டில் பெயர் எடுக்க வேண்டுமென்கிற யுவதிகளும், யுவர்களும் அதிகமாகக் கலந்துகொள்வார்கள். என்னைப் போலுள்ளவர்கள் நடந்துகொண்டே இருப்பார்கள். மகாலிங்கம் என்பவரைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் அரசாங்கத்தில் பணிபுரிபவர். இரண்டு புதல்வர்கள். இரண்டு பேர்களையும் கடன் வாங்கிப் படிக்க வைத்துவிட்டார். பெரிய புதல்வன் ஐஐடியில் படித்திருக்கிறான். ஆனால் அவர் புதல்வர்களுக்கு உரிய வேலை கிடைக்கவில்லை. ஐஐடியில் படித்த பெரிய புதல்வனுக்கு சொற்ப சம்பளத்தில்தான் வேலை கிடைத்திருக்கிறது. அதை ஏற்றுக்கொள்வதில் அவனுக்கு தயக்கம். மகாலிங்கத்திற்கு என்னைப் போல் சர்க்கரை. அவர் கிரவுண்டில் நடக்கிறதைப் பார்த்தால் அசந்து போய்விடுவீர்கள். அப்படி நடப்பார். நான் ஒருமுறை சுற்றி வருவதற்குள் அவர் இன்னொரு முறையும் சுற்றியபடி என்னைப் பிடித்து விடுவார். அப்படி நடந்து கொண்டிருந்தவர்தான் மெதுவாக நடக்கத் தொடங்கினார் அன்று. காலில் ஏதோ அடிப்பட்டுவிட்டதாம். அன்று அவர் சுரத்தாக இல்லை. கடன்காரர்கள் தொந்தரவு செய்கிறார்களாம்.வங்கியில் கடன் வாங்காமல்...

ரசனை

நீர்ப்பறவை நீந்தாத வரையிலும் மீன்கள் துள்ளிக் குதிக்காத வரையிலும் மழைத்திரவம் சிந்தாத வரையிலும் சிறுவர்கள் கல்லெறிந்து விளையாடாத வரையிலும் காற்று பலமாக வீசாத வரையிலும் சலனமற்று கிடக்கின்ற குளத்துநீரில் தங்கள் பிம்பத்தை ரசித்துக் கொண்டிருக்கும் கரையோர பனைமரங்கள்

சுமை

எத்தனையோ கனமான பொருட்களை இந்தக் கைகள்தூக்கிச் சென்றிருக்கின்றன விழாக்கள் போதும் சடங்குகள் போதும் இப்போது வெறுமனே கட்டிக் கொண்டிருந்தாலும் கைகள் சுமையாக இருக்கின்றன

இன்று வரை

நிச்சயமாய் தெரியுமென்றாலும் நீண்டு கொண்டுதான் இருக்கிறது இன்று வரை. ஏதாவதொரு கையசைப்போ எதிர்கொண்டழைக்கும் முகமொன்றுக்கோ ஆன ஏக்கங்கள். O

எதையாவது சொல்லட்டுமா / 9

நான் சீகாழி மயிலாடுதுறை என்று பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். சனிக்கிழமை சென்னையை நோக்கி வந்துவிடுகிறேன். நான் சொல்ல வந்தது வேறு. பொதுக் கழிப்பிடம் பற்றி நீங்கள் எதாவது நினைப்பதுண்டா? பஸ்ஸில் பயணிக்கும்போது ரொம்ப உபத்திரவமானது இந்தக் கழிவறைகள். சனி மதியம் நான் சீகாழி பஸ் ஏறினால், எனக்குப் பெரும்பாலும் பாண்டிச்சேரியில்தான் இந்தக் கழிவறைகளை நோக்கி ஓட வேண்டியிருக்கும். இரண்டு ரூபாய் காசு வாங்கிக்கொண்டு கழிவறை வாசலில் ஒருவன் உட்கார்ந்து கொண்டிருப்பான். பை சகிதமாய் வரும் நான் அவன் காலடியில் அதைக் கிடத்திவிட்டு உள்ளே நுழைவேன். ஏண்டா நுழைகிறோம் என்றுதான் இருக்கும். உள்ளே நுழைந்தவுடன் மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டும். கழிவறையில் கொட்டுகிற தண்ணீர் மூத்திரம் மாதிரி இருக்கும். இப்படி ஒரு அவதியா என்று நினைக்காமல் இருக்க மாட்டேன். இந்தக் கழிவறையில் எப்போதும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். ஆண்களை விடுங்கள். பெண்கள் எப்படியெல்லாம் அவதிப்பட வேண்டியிருக்கும். நான் இருக்கும் சீகாழி பிராஞ்சு பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். அதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் உள்ளே மட்டும் வந்து விடாதீர்கள்....

எதையாவது சொல்லட்டுமா / 8

சென்னையிலிருந்து ஒரு வழியாக 2ஆம் தேதி நவம்பர் கும்பகோணம் வந்துவிட்டேன். வழக்கம்போல் மயிலாடுதுறையில் தங்கி கும்பகோணம் சென்று கொண்டிருந்தேன். ஆனால் ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்னைக்குச் சென்றுவிடுவேன். பின் ஞாயிறு கிளம்பி வந்துவிடுவேன். மயிலாடுதுறையில் முன்பு தங்கியிருந்த வீட்டிலேயே தங்கி தினமும் கும்பகோணம். எனக்கு எந்த இடம் என்று தெரிய சில நாட்கள் ஓடிவிட்டன. பட்டுக்கோட்டையா? புதுப்பித்தன் கதையின் தலைப்பான அதிராமப்பட்டிணமா? அல்லது மன்னார்குடியா என்று திகைத்துக் கொண்டிருந்தேன். வேலையை விட்டுவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்த உறவினர் வீட்டு விழாவிற்குச் சென்றேன். ஒருவரிடம் வேலையை விடலாமா என்று யோசிக்கிறேன் என்றேன். பின் இன்னொன்றும் சொன்னேன். வேலையை விட்டால் மாதம் ஆயிரம் கூட சம்பாதிக்க முடியாது என்று. அதைக் கேட்டு அவர் விழுந்து விழுந்து சிரித்தார். ஆனால் இனிமேல் சம்பாதிக்க வேண்டாம் என்று சும்மா இருந்தால், சும்மா இருக்க விட மாட்டார்கள் வீட்டில். என் அப்பா தொண தொண என்பார். மாமியார் தொண தொண என்பார். மனைவி ஏளனமாய்ப் பார்ப்பாள். விற்காத புத்தகங்கள் எல்லா இடங...

நீ விட்டுச் சென்ற மழை

நீ விட்டுச் சென்ற மழை எனது மௌனத்தின் பின்புறத்தில் ஒளிந்திருந்தன உனது சலனங்கள் குறித்து எழுதப்பட்ட கதையொன்றின் மிச்சங்கள் அதனூடு இருப்பின் மகிழ்வுகளை எங்கோ தொலைதூரத்துக்கு ஏகிவிட்டு தீராப்பளுவாய் வந்தமர்ந்திருக்கிறது தனிமை செடி பூக்களை உதிர்த்து மழையைச் சூடிக்கொள்கிறது வழமைபோலவே மழைக்கு நனைந்த வீட்டை வெயிலுலர்த்திப் போகிறது வீழ்ந்த சாரல் போல நிரம்பி உருண்டையாகி உடைந்துவிழுகிறது ஆற்றுப்படுத்தப்படாத ஒரு விழிநீர்த் துளி எல்லாமறிந்தும் ஏதுமறியாய் நீ

நான், பிரமிள், விசிறிசாமியார்......11

ஞாயிற்றுக்கிழமை (29.11.2009) நான் சென்னையில் இருந்தபோது வாசலில் ஒரு கார் நின்றிருந்தது. கார் பின்னால் ஒரு வாசகம் யோகி ராம்சுரத் குமார் என்று. எனக்கு நான் எழுதிக்கொண்டிருந்த கட்டுரை ஞாபகம் வந்தது. ரொம்ப நாள் தொடராமல் போனதற்கு பிரமிளின் மறைவைப்பற்றி சொல்லும் சங்கடம்தான். ஒரு மரணம் ஒவ்வொரு மனதிலும் எப்படி நிழலாடுகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பிரமிள் துணிச்சல்காரர். அவர் மரணத்தைப்பற்றி பேசி நான் கேட்டதில்லை. அவர் அவ்வளவு சீக்கிரம் மரணம் அடைந்துவிடுவார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. சென்னையில் நானும் அவரும் இருந்தாலும், அவர் அடிக்கடி கார்டில் தகவல் கொடுத்தபடி இருப்பார். அவருக்கு மஞ்சள்காமாலை நோய் திரும்பவும் தாக்கியிருப்பதை அவர் குறிப்பிட்டிருந்தார். முன்பே திருவான்மியூரில் அவர் தங்கியிருந்தபோது ஒருமுறை அவருக்கு அந்த நோய் தாக்கியிருந்தது. அப்போது சரியான நோய் திரும்பவும் பிடித்துக்கொண்டது. அத்துடன் இல்லாமல் நிமோனியா வேற அவரைத் தாக்கியிருந்தது.அவர் நோயைப் பற்றி எதுவும் சொல்லாவிட்டாலும் பலவீனமாக இருந்தார். அவர் இருந்த இடம் மோசமாக இருந்தது. சாந்தோமில் ஒரு குப்பத்தில் அவர் வசித்த...